தமிழனென்று சொல்லடா

இது கவிதை அல்ல
உஷ்ணத்தின் உச்சியில் இருக்கும் - ஒரு
உண்மை தமிழனின் ஆத்திரம்..
உள்ளுக்குள் அடக்கிவைத்த ரௌத்திரம்.

தமிழனென்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா
மீறி நிமிர்ந்தால் - அவன்
தலையை வெட்டி கொள்ளடா.

மண்டியிட்டு மண்டியிட்டு - தமிழ்
ஈழம் போனது.
மறத்தமிழன் மானம்
ஏலம் போனது.

எல்லா மரங்களையும் வெட்டி
எடுத்து வாருங்கள்.
கொள்ளி கட்டைக்கு தட்டுபாடு
கொஞ்ச நாளில் வந்துவிடும்.

சகித்து பழகிய
சகத்தமிழனே
வீட்டுக்கு வீடு தமிழ் பேச
கிளிகளுக்கு கற்றுகொடுங்கள்
பின்னாளில்
என் மொழி பேச
எவனும் இருக்கபோவதில்லை.

ரணப்பட்டு ரணப்பட்டு
என்ன செய்தோம்.
ரஞ்சிதாவுக்கு என்ன நடந்தது என்றுதானே
வருத்தப்பட்டோம்.
சிங்கள குண்டு மலையில்
சின்ன சின்ன துண்டுகளாய்
தமிழ் உடல்கள்
சிதறிகிடந்தபோது
இங்கு
மழை பெய்யவில்லை என்று
மருகி கொண்டிருந்தோம்.
என் தோழன்
பெரியார் பேரன்
முத்துகுமரன் தீகுளித்தபோது
சச்சின் சதம் அடித்த மகிழ்ச்சியை
சரம் வெடித்து சந்தோசபட்டோம் .

மருதுபாண்டியன், புலித்தேவன்,
வாஞ்சிநாதன், கட்டபொம்மன்
வீர தமிழன் வரலாறு
உலகமெல்லாம் பரிமாறு
ரோசமுள்ள தமிழன் வருமாறு
அண்ணன் பிரபகரன் அலைக்கிறாரு.

இந்திய தேசத்தின்
முழங்கை அளவு இல்லாத
இலங்கை அரசே
என்ன கேட்டோம்
உன் படுக்கையில் பங்கா கேட்டோம்
நாங்க படுக்கத்தானே இடம் கேட்டோம்.

என்ன கேட்டோம்
சுற்றத்தோடு வந்து பொண்ண கேட்டோம்
சுதந்திரமா சுற்றி தெரிய மண்ணு கேட்டோம்.

போடுகிற சோத்து போட்டனங்களை
பொருக்கி தின்னுகிற
பொதுமக்கள் மீது
போர் நடத்திய போட்டைதனம்.
அடிப்படை போர் தாமீகத்தை
அலட்சிய படுத்திய அயோக்கியத்தனம்.

முல்லைக்கு தேர் கொடுத்த
மூவேந்தர் இனமட
இன்று
பிள்ளைக்கு பால் கொடுக்க
தாய் இல்லை - செத்த
பிணம் தின்னக்கூட ஒரு
நாய் இல்லை.

அந்நிய நாட்டு சிங்களன்
இந்திய வருகிறான்
சுற்றுலா பயணியாக.
என் தொப்புள்கொடி உறவு
தமிழன் வருகிறான்
அகதியாக.

தமிழகத்தில்
சிங்களன் சுகவாசி
அங்கே
சாக சாக தமிழனுக்கு
வாய்க்கரிசி.

இனப்படுகொலையோடு நின்றிடாமல் - என்
இன சகோதரிகளை
கற்பழித்து
கழுத்தறுத்து
கைத்தட்டி
சிரித்த சிங்கள இராணுவமே
உன்னை கொலை செய்ய
நெஞ்சம் கொதிக்குதட.
மானங்கெட்டவனே என
உலகம் என்னை பழிக்குதட.

இனி
என் உறவுகளுக்கு
விடியல் வரும்வரை - என்
விழிகள் உறங்காது.
உனக்கெதிராக பேனா பிடித்த கை
துப்பாக்கி தூக்க தயங்காது.

அடே ராஜபக்சே
உனை சிறைபிடித்து - என்
பெண்களோடு
நொண்டியாட வைப்பேன்.
மறத்தமிழன் முன்னே
உனை மண்டியிட வைப்பேன்.
இது சத்தியம் சத்தியம் சத்தியம்.
தமிழா
நாம் ஒன்றுபட்டால்
இது சாத்தியம் சாத்தியம் சாத்தியம்

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்