Posts

Showing posts from May, 2012

எழுதுங்கள் ஒரு காதல் கடிதம்

Image
‎----எழுதுங்கள் ஒரு காதல் கடிதம்----- எளிய தமிழில் ஒரு குட்டி கவிதை எழுதி, வார்த்தைகளை வைத்தே உன்னை அள்ளி நெஞ்சோடு புதைத்து கொள்ளும் வசதி, சில வரிகள் ரத்தம் கலந்து, ஒரு முத்தம் வரைந்து, சீரான இடைவெளியில் எழுத்துக்கள் அமைத்து, ஆடைகட்டியிருக்கும் சில அந்தரங்கம் அவிழ்த்து, நேரில் தர இயலாத நெருக்கடி பதில்கள் நிறைத்து, தேவைக்கு மீறிய தேர்வெழுதும் கவனம் கொடுத்து, இடபற்றாக்குரையால் முகவரி நிரப்பும் கோட்டிற்கு கீழே முளைத்திருக்கும் நலம் விசாரிப்பு, தாய் தந்தை பார்வையில் தபால் பட்டுவிடக்கூடதென்ற பரிதவிப்பு, ஒரு ஓவியனுக்குள்ளிருக்கும் அவஸ்தை, பாதி கவிஞனாகிவிட்ட பரவசம், அங்குலம் அங்குலமாக அகநானூறு பாடல்கள் அத்தனையும் ஒரு உரையில் அடக்கி காதல் பரப்பிய பிறகும் இன்னும் சொல்லாத பிரியமாய் ஒரு பிரபந்தம் மிச்சமிருக்கும் உணர்வு, இன்று அபத்தமாகிப் போன அன்பே, ஆருயிரே , கண்ணே, கண்மணியே உலகே, உயிரே நாயே, பேயே என கொஞ்சல் மொழி அஞ்சல் அனுப்பும் அந்த ஆனந்த சுகம் அழைப்புக்கு ஐந்து பைசாவாகிப் போன அலைபேசியில் அணுவளவும் கிடைப்பதில்லை. தாஜ்மகாலை விட தபால்காரன் தரும் இந்த சின்ன காதல் கடிதங்கள்தான் உலக காதல் சின்னம்
---- கருவற்ற கவிதைகள் எழுதாதே --- முற்போக்கு சிந்தனைகள் மூளை பரப்பில் முளைப்பதற்கு முன்நேரம். கற்கயிலாதோர்க்கு கல்வி நல்கிட கவிதை எழுதிட முற்படும் அந்நேரம். வற்றாத பேனா பிடித்து வெற்று தாள்கள் நிரம்பும் முன்னே. ஒற்றை கேள்வி எனக்குள் அங்குமிங்கும் அலைந்திட கண்டேன். சற்றும் ஓய்வில்லா சிந்தைக்குள்ளே வான் முட்டும் சலசலப்பை எழுப்பிய கேள்வி இதுவே.... " அட கழுதைகள் பொதி சுமக்கிறது ? உன் கவிதைகள் எதை சுமக்கிறது ? " ---- தமிழ்தாசன் ----

மரணத்திற்கு பின்

Image
‎------- மரணத்திற்கு பின் -------- நான் இறந்த பிறகு எனக்கு சவப்பெட்டி செய்யும் பணத்தில் கூரையில் பொத்தல் விழுந்த குளியலறைக்கு கதவுகள் செய்து கொடுங்கள். பெண்ணின் மானத்தைவிட ஒரு பிணத்தின் மரியாதை அவசியமற்றது. என் இறுதி ஊர்வலத்தில் எந்த மலரும் நசுக்கப்படாதுயென நம்புகிறேன். பூக்களை பறிக்காதீர்கள் ! வேரோடு நகத்தை பிடுங்கினால் நமக்கு உண்டாகும் வேதனைதான் செடிக்கும் இருக்கும். தோழர்களே ! என் முடிவுக்குப்பின் முடங்கிவிடாதீர்கள் முன்னேறாமல் அடங்கிவிடாதீர்கள். மரண செய்தி கேட்டு விரைந்து வரும் வீரிய தோழர்களே! என் கருவிழிகள் இரண்டும் பார்வையற்றவருக்கு பொருத்தப்பட்டதா என்று பரிசோதித்து கொள்ளுங்கள். அடித்தட்டு மக்கள் நலனுக்காக அறவழியில் போராட என் பிணம் தேவைப்பட்டால் போக்குவரத்துக்கு இடையுரின்றி போராடுங்கள் தோழர்களே ! என் சவத்தை வைத்து சாலை மறியல் செய்து விடாதீர்கள். மருத்துவமனையை நோக்கி கர்ப்பிணி தாய் ஒருத்தி போய் கொண்டிருக்கலாம் போராளியை பிரசவிக்க.... ---- தமிழ்தாசன் ----

போலி போதனை எதற்கு

Image
---- போலி போதனை எதற்கு ---- நான் ஆண் இனம் இல்லை என்பர்வர்கள் ஆதீனம் ஆகும்போது எங்கள் அரவாணிகள் மனிதர்களாக கூட மதிக்கபடுவதில்லையே ஏன்? ஈரமுள்ள நெஞ்சம் ஒன்று எழவில்லையே ஈழப்படுகொலைக்கெதிராக ஈனத் துறவிகள் பின்னே கேன பிறவிகள் கூட்டம் செல்வது எங்கே? பக்தன் பணத்தில் படுக்கைவிரித்து சோமபானமருந்தி படுத்துகிடக்கும் சோம்பேறி கழுதைகள் பரமபொருளாகும் போது.. தோல் வியாதியுற்று சேரில் நிதம் நின்று கால் பாதி மூழ்கி..., உழைக்கும் ஜனத்தை கீழ் சாதியென்று கிறுக்கி வைத்தவன் யார்? தங்கையின் கற்ப்பை சூரையாடிவனை தன் கையால் கொலை செய்து தர்மம் காத்த தன்மானங்கள் சிறைக் கைதியாக இருக்கும்போது காம களிப்பில் கன்னிகளை கட்டிபிடிக்கும் - பிரபல கட்டில் மிருகங்கள் சாமியாகிப் போன சங்கதி என்ன? விந்தையிலும் விந்தை விந்தணு சேர்க்கைக்கு வீற்ற ஒரு சக மனிதனை சாமியென்று வணங்குவது. மந்தையிலும் மந்தை இது ஆடுகளின் மந்தை அறிவற்று அரிவாள் ஏந்தியவன் பின்னோடுவது. கடவுளை அர்ச்சிக்கும் கறைபட்ட கைகளை விட கழிவறை சுத்தம் செய்யும் விளக்கமாறு புனிதமானது. இன்னும் என்ன சொல்ல இதயம் கொதிக்குது மெல்ல நல்ல வேளை அந்த விவேகானந்தர் உயிரோடில்லை. இன்

மாற்று கருத்துடையவள் மனைவி

Image
‎--- மாற்று கருத்துடையவள் மனைவி ---- உலகை உலுக்கியெடுக்கும் பகுத்தறிவு சொற்பொழிவுக்கு வகுத்து வகுத்து வார்த்தைகளை சரமாக்கி கோர்த்து கொண்டிருக்கையில் "கோவிலுக்கு சென்று வருகிறேன்" என்ற மனைவின் கோரிக்கையை மறுக்க முடிவதில்லை. அவள் சுதந்திர சிறகுகள் முறிந்துவிடகூடாது என்கிற முழு கவனத்தில் சூழ்நிலை கைதியாக சும்மாதான் வைத்திருக்கிறேன் என் சுயமரியாதை சுத்தியலை. அவளின் பைத்திகார பக்தியை பார்க்கிறபோது இறைவன் என்ற ஒருவன் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. --- தமிழ்தாசன் ---

களம் காண்போம் கவிகளே

Image
---- களம் காண்போம் கவிகளே ----- பேனாவை பேசவிட்டு ஊமையாக உட்கார்ந்திருக்கும் என் சக கவிஞர்களே! வார்த்தை கருவில் வாள் வீரர்களை வளர்த்தவர்களே! பாரதியை படித்து வளர்ந்த பராகிரமர்களே! உறங்கிய மக்களை எழுத்துபணியில் எழுப்பிவிட்டோம் களப்பணி செய்யாமல் ஏனோ நாமே உறங்கிவிட்டோம். கேட்டுவிட்டால் கேட்பவர் காது கிழியும் வேட்டு சத்தம் போல வெடித்து அதிரும் பாட்டுகள் பல எழுதிவிட்டோம் வீட்டில் இருந்தபடி. எழுதபடிக்க தெரியாத ஏழை மக்கள் ஏகோபித்த தேசத்தில் எதுகை மோனை கொண்டு எழுதும் கவிதைகள் எதற்கு? பெண் சிசுக் கொலை பெருத்த நாட்டில் பாரத தாய் படமெததற்கு ? வானம் என் வசமிருக்கும் நீல கைகுட்டையென காலப் பொய் சொல்லும் கவிஞர்களே! வாசலை தாண்டும் வயஞானமின்னும் வரவில்லையோ? உயிருக்கஞ்சாத நல் வயிர நெஞ்சமொன்று உனக்கில்லையோ? வேண்டாம் இனியொரு போரென்று மாண்ட மனிதர்கள் நிலை கண்டு ஏண்டா இந்த வெறியென்று மாஉலக அமைதிக்கு மையெழுதி மனு செய்தவர்களே ! மூன்றாம் உலகப் போர் மூண்டுவிட்டால் ஏகாதிபத்திய காண்டா மிருகங்கள் சேர்ந்துவிட்டால் என்ன செய்வாய் கவியே ! எதிரியை அழிக்கும்

அவஸ்தை

Image
உன்னிடம் காதல் சொல்லிவிட்டு காத்திருக்கிறேன். அறுவை சிகிச்சை அறைக்குள் நுழையும் நோயாளியைப்போல...... உயிர் பிழைக்கும் உத்திரவாதமற்ற பொழுதுகளின் ஆக்கிரமிப்பில் அவஸ்தையடைகிறது மனசு... --- தமிழ்தாசன்---