Posts

Showing posts from January, 2012

----அப்பாவுக்கு மகன் எழுதுகிறேன்----

----அப்பாவுக்கு மகன் எழுதுகிறேன்---- அச்சமில்லை அச்சமில்லை என்று பாடிய உச்சி வான சூரியனே! உன் ஒவ்வொரு பிறந்த நாளிலும் உன்னை நினைக்க முடிகிறதே தவிர உன்னை போல் இருக்க முடியவில்லை... தமிழ் எழுத்துக்கள் தலைமுறை பல கடந்தும் உடையாமல் இருக்கிறதே! அது எழுத்துக்கள் அல்ல தலைவா... உன் எலும்புகள். நீ கையில் வைத்திருந்த கருவிக்கு பெயர் பேனாவா? இல்லை பீரங்கியா என்ற பீதி இன்னும் எங்களுக்கு தெளியவில்லை. நீ கவிதை எழுதிய காகிதங்களுக்கு கொஞ்சம் கணம் அதிகம்... அதனால்தான் அந்த சாதாரண காகிதங்கள் சாம்பல் ஆகாமல் இருக்கிறது... ஒரு சந்தேகம் ஐயா! ஒரே மிதியில் உன் கவிதைகள் தமிழ் சமூகத்தை தவிடு பொடியாக்கிவிட்டதே! இதை எழுதியது யானைகளின் கையா? பல சவுக்கடி தரும் ஒரு பாடல் எழுத உனக்கு தேவைப் பட்டதென்ன பானை நிறைய மையா? உன் கவிதைகளை வாசிக்கிறபோது உன் வரிகளில் என் விரல் பட்டுவிட்டால் சுட்டு விடும் என்று சுதாரிப்பாய் இருப்பேன். படித்ததும் முடித்ததும் இந்த பூமியைக் கையால் பிழிந்துவிடலாம் என்ற பூரிப்போடு படுப்பேன். நீ இன்னும் மாய்ந்து போகவில்லை.. தீ இன்னும் தீர்ந்து ப
கருவேலம் மரம் ஒன்றில் கண்ணே.. உன் பெயர் செதுக்கி வச்சேன்... கற்பூர வாசம் வந்த பின்னே சந்தன மரமான்னு சந்தேகிச்சேன்.

----------குடியரசு தின வாழ்த்துக்கள்----------

----------குடியரசு தின வாழ்த்துக்கள்---------- காரு வண்டி நிக்கும் கார வீட்டுக்குள்ள யாருமில்ல ? ஏறு உழுத ஏழைக்கெல்லாம் ஒரு வேள சோறுமில்ல வெரலால ஓட்டு போட்டோமையா... வெவரமில்லா கூட்டமையா... வெலவாசி கூடிடுச்சான்னு ஒங்கள என்னைக்கு கேட்டுருக்கோம்? வெங்காயம் வாங்கத்தான் பேங்குல லோனு போட்டுருக்கோம். வைரமுன்னு கரியெடுத்து கண்ணுல காட்டுனீக ஆயிரங்கோடி கடனுன்னு  கணக்கு போட்டீக..... ஊழல்வாதிக ஒழுஞ்சுக்கத்தான்  ஊருக்கு ஊர் பங்களா இருக்கு... ஒழச்சு ஒழச்சு ஓடா போனவன் ஒதுங்கத்தான் ஓட்டு வீடு ஒண்ணுருக்கா? ஒட்டுத்துணி தானிருக்கா? இந்தியா நாளைக்கு வல்லரசுன்னு சொல்றீக.. இன்னும் நாங்க நடபாதயில தானய்யா படுத்திருக்கோம். மெச்சு மாடில நின்னு கையசச்சு  கச்சி கோடின்னு எங்க  கோவணத்த கொண்டு போன சாமிகளா  கும்பிடுறோம். குடிச இல்லா மக்கள் சார்வாக  குடியரசு தின வாழ்த்துக்கள்.... ---தமிழ்தாசன்---

---------நீ------------

முள்ளென்பது மீன்களின் எலும்பு மண்ணென்பது எரிமலை குழம்பு. தாள்ளென்பது மூங்கிலின் தியாகம். மரமென்பது விதைகளின் தாகம். புள்ளியென்பது விதைவத் தாளின் திலகம்   பல்லியென்பது முதலையின்  குடும்பம்.  தீயென்பதே உரசி வெடிக்கும் உஷ்ண புரட்சிதான்.  நீ என்பதே - ஒரு விந்தணுவின் விடாமுயற்சிதான்.... ---தமிழ்தாசன்---

------வீரம்-------

------வீரம்------- வீரம்  என்பது காட்டு எருதுகளை வேட்டையாடும் வெறிபிடித்த சிங்கத்தின் கர்ஜனை அல்ல.  வலை பின்னி விட்டு கால் மேல் கால் போட்டு ஒட்டடை கம்புகளில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் ஒரு சிலந்தியின் அமைதி. ---தமிழ்தாசன்---

தமிழ் ஊமை நான்

நான் பேசிடாத நான் அறிந்திடாத அன்னைத்தமிழ் இன்னும் ஆயிரமாயிரம் இருப்பதால் நானும் ஒரு ஊமையென்றே உள்ளுணர்வு  உரக்க சொல்கிறது... ---தமிழ்தாசன்---

---அத்தனையும் என் ஆசைகள்----

---அத்தனையும் என் ஆசைகள்---- பருவகால பனிதுளிகளுக்கு நிழற்குடையொன்று  நிறுவ வேண்டும். பாலைவனத்தின் மையத்தில் கூவி கூவி குளிர்பானம் விற்க வேண்டும். அரும்பும் பூக்களை பறிக்கும் கைகளுக்கு இரும்பு விலங்கிட வேண்டும். எறும்பும் ஈக்களும் மொய்த்துக் கொள்ள - முழு கரும்பு வழங்கிட வேண்டும். ஆலவட்ட ஆலமர குயில்களுக்காக ஆலாபனை பாட வேண்டும். நீள்வட்ட பாதையில் நின்று கொண்டு நிலவில் குதிக்க வேண்டும். சொட்டு ரத்தம் குடித்து போக கொசுக்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும். கால்கடுக்க நிற்கும் மரங்கள் ஓய்வெடுக்க நாற்காலி நல்க வேண்டும். காணிக்கையாக அமுதசுரபி ஒன்றை தேனீக்கு கொடுக்க வேண்டும். சாமி உடல்நலமாய் வாழ வேண்டி பூமியில் யாகம் நடத்த வேண்டும். கொதிக்கும் சூரியனை கொஞ்சகாலம் குளிர்சாதனப் பெட்டியில் அடைக்க வேண்டும். கூண்டில் கிளி வளர்ப்பவனை குற்றவாளியென குண்டர் சட்டத்தில் பிடிக்க வேண்டும். விசபாம்புகளுக்கும் சுவைத்து குடிக்க ரசஅமுதம் கொடுக்க வேண்டும். கசாப்பு கடைக்காரனை விண்வெளிக்கு விசா கொடுத்து அனுப்ப வேண்டும். கொஞ்சம் இளைப்பாற எறும்புகளுக்கு மஞ்சம் அமைக்க வேண்டு

----என் அறிவியல் தந்தைக்கு-----

----என் அறிவியல் தந்தைக்கு----- கிலோமீட்டர் தூரம் பார்த்தல் கிட்ட தட்ட இலங்கை என்னவோ நம் அண்டை நாடுதான். அங்கு கிணறு வெட்ட வெட்ட கிடைப்பது என்னவோ தமிழன் மண்டை ஓடுதான். ஐயா! எங்களை கனவுகள் காண சொன்னீர்கள். கண்மூடி கொஞ்சம் கனவு காண்பதற்குள் மண்மூடி என் மறத்தமிழ் இனம் மாய்க்கபட்டுவிட்டதே! முழு தமிழ் இனத்தின் தலை கொய்யபட்ட பிறகு முழங்கையில் முள்காயமென முழங்குவதோ? துரோணர் பட்டம் நிலைக்க நம் துரோகிகளுக்கு இலங்கையில் சொற்பொழிவு வழங்குவதோ? இந்தியாவை நிமிர செய்துவிட்டு தமிழை தலை குனியவைப்பதுவோ? எம் சகோதரியை கற்பழித்தவனோடு சம்மந்தம் பேசுவது சரிதானா? மஞ்சலென எங்கள் முகங்களில் நீங்கள் பூசியது கரிதானா? அதிபர் பதவியில் இலங்கையில் அமர்ந்திருப்பரென்ன அண்ணல் காந்தியா? அடியோடு நம் இனம் அழிக்கப்பட்டதை அழுதபடி பார்த்தோமே! அத்தனையும் வதந்தியா? நம் தூய பெண்மணிகளை துப்பாக்கி முனையில் துயர் பட துயர் பட துகிலுரித்தானே! மறந்துவிட்டீர்களா? துச்சமென தூக்கியெறிய நம் உடலென்ன காலவதியான மருந்து பெட்டிகளா? அறிவியல் விந்தையே ! என் கவிதையின் கால்களை கொண்டு அவனை உதை

காதல் - காமம்

காதல் -- இரு உயிரின் நெருக்கம் காமம் - இரு உடலின் நெருக்கம். காதல் - உன்னத மனதை வென்பனிப்போல் உறைய செய்யும். காமம் - மன்மத உடலை பெருந்தீயைப் போல் உஷ்ணம் செய்யும். காதல் - புத்தகம்  வாசிப்பது  போன்றது காமம் - புத்தகம் எழுதுதல்  போன்றது. காதல் - மனதை மயில் இறகால் வருடும் உணர்வு. காமம் - மயிலை வருடும் மனதின் உணர்வு . ---தமிழ்தாசன்---  

சாமிக்கு படையல்

சாமிக்கு படைத்த படையலில் குறிப்பிட்ட ஒரு பண்டம் குறைவதாக சொல்லி கொதித்து போனார் கோவில் பூசாரி... வாசலில் கிடக்கும் வயதான பிச்சைக்காரன் பசியில் செத்து பத்து நாளாகிவிட்டது. --தமிழ்தாசன்----

பிணை கைதிகளாய் பிணங்கள்

-----பிணை கைதிகளாய் பிணங்கள்--- எங்கள் ஊரில் மளிகை கடைகளை விட மருத்துவமனைகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துவிட்டது. அதில் சில நோயாளிகள் இல்லாமல் ஈ-யாடுகிறது. சில ஊசிகள் மூலம் புது நோய்களை உட்செலுத்துகிறது... பாவம் எங்கள் ஊர் வெட்டியானுக்குதான் வேலையில்லாமல் போய்விட்டது... பல மருத்துவமனைகள் பணம் கொடுத்தால்தான் பிணம் தருவோம் என்று பிடிவாதமாய் சொல்லிவிடுவதால்..... ---தமிழ்தாசன்----

வல்லரசு கனவு

வல்லரசு கனவை வலுபடுத்திகொள்ள கை ஏந்தி உலக வங்கியிடம் இந்தியா வாங்கிய பணத்தின் மதிப்பீடு பல்லாயிரம் கோடி தாண்டிவிட்டது... பையில் பணமின்றி உறவினர் நடத்தும் உணவகம் நுழைகையில் அறிவிப்பு பலகையில் அச்சடிக்கபட்டு இருக்கிறது. "கடன் அன்பை முறிக்கும்" ---தமிழ்தாசன்---

---கசியும் ரத்தம்-----

---கசியும் ரத்தம்----- கடைசி சொட்டு பால் வரை காம்புகளில் இருந்து கரந்தாயிற்று. அவிழ்த்துவிட்டதும் வற்றிய மடியில் பாலென்று எண்ணி பச்சை ரத்தம் உறிஞ்சி குடித்துவிடுகிறது. கன்றுகுட்டி... வழக்கமாய் குரல் எழுப்புவதைப் போல் வலியில் கத்துகிறது பசு " அம்மா " " அம்மா " ......... ---தமிழ்தாசன்---

கொசுவைப் போல்

நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் ஒரு கொசுவைப் போல் நசுக்கிவிட்டு போகிறது நாய்களை ... --தமிழ்தாசன்---

---கசியும் ரத்தம்-----

Image
---கசியும் ரத்தம்----- கடைசி சொட்டு பால் வரை காம்புகளில் இருந்து கரந்தாயிற்று. அவிழ்த்துவிட்டதும் வற்றிய மடியில் பாலென்று எண்ணி பச்சை ரத்தம் உறிஞ்சி குடித்துவிடுகிறது. கன்றுகுட்டி... வழக்கமாய் குரல் எழுப்புவதைப் போல் வலியில் கத்துகிறது பசு                "அம்மா" ......... ---தமிழ்தாசன்---