---------நீ------------

முள்ளென்பது
மீன்களின் எலும்பு

மண்ணென்பது
எரிமலை குழம்பு.

தாள்ளென்பது
மூங்கிலின் தியாகம்.

மரமென்பது
விதைகளின் தாகம்.

புள்ளியென்பது
விதைவத் தாளின் திலகம்  

பல்லியென்பது
முதலையின்  குடும்பம்.

 தீயென்பதே
உரசி வெடிக்கும்
உஷ்ண புரட்சிதான்.

 நீ என்பதே - ஒரு
விந்தணுவின்
விடாமுயற்சிதான்....

---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?