Posts

Showing posts from February, 2012

‎----தாயின் கண்ணீர்----

Image
‎----தாயின் கண்ணீர்---- விரும்பிய இதயத்தின் விபரம் சொல்லாமல் திருமணத்தின் முன் இரவு வீடுதாண்டிய விடுகின்றனர் பிள்ளைகள். இரவு விழித்து மனஅழுத்தம் பொருட்படுத்தாது ஆசை ஆசையாய் அம்மா மருதாணி அரைத்த அம்மியில்....இன்று அரளி....... மரணித்த பெற்றோரின் மர்ம அறிக்கையை மருத்துவர் சமர்பித்து... அரைத்த அரளியில் உப்பு அதிகம் கலந்திருப்பதாக அழுத்தி சொன்னார். மார்பை கடித்து பாலை குடித்த மகன்(ள்)களுக்கு தெரியுமா? உப்பின் கலப்பு அம்மா உயிர் துடித்து சிந்திய கண்ணீரென்று... ---தமிழ்தாசன்---

குடிநீர் கேட்டு சாலை மறியல்

------ குடிநீர் கேட்டு சாலை  மறியல் ----- கழிவு நீர் தேங்கி நிற்கும் குட்டை ஒன்றை காண்பித்து இதுதான் பால்ய வயதில் நான் மீன் பிடித்து விளையாடிய குளம்.. என பரவசத்தோடு  என் தகப்பன் காட்டிய இடத்தில்  இன்று பல்லிளித்து நிற்கிறது பங்களா.......   ----தமிழ்தாசன்----

----அழகிய வானவில்----

Image
----அழகிய வானவில்---- சிறு மழலை போல மழையில் நீ மகிழ்ந்து மகிழ்ந்து மெய்சிலிர்பதை பார்க்கிறபோது வளையாத வானவில் நீயென்றே வர்ணிக்க முற்படுகிறது என் வசமிழந்த வலது கைப் பேனா .... ---தமிழ்தாசன்---

---கவிதை---

---கவிதை--- விதைகள் இல்லா விதவைத் தாள் மணல்மீது பேனா நீர்வாளி தனில் நீர்பாய்ச்சி நிலத்தினிலே முளைத்தெழுந்த நிதர்சன பூக்கள்.

-----ஜன்னலோரம் பேருந்தில் நீ-----

Image
-----ஜன்னலோரம் பேருந்தில் நீ----- நெடுஞ்சாலை மர இலைகளின் மடியமர்ந்து நெடுங்காலம் காத்திருந்த குளிர் காற்று - உன் குழிவிழும் கன்னத்தில் முத்த மழை பொழிய.... தட தடவென தலை முடி அதை தடயமின்றி துடைத்து கொள்கிறது... ---தமிழ்தாசன்---

----பசியாரட்டும் பிள்ளைகள்----

Image
----பசியாரட்டும் பிள்ளைகள்---- பல் முளைத்த குழந்தைப்போல பசியில் களைத்த கொசுக்கள் என் மேனியமர்ந்து ரத்தம் உறிஞ்சிகிறபோது.. மார்பை கடித்தும் வலியை பொறுக்கும் ஒரு தாயின் உணர்வு.... ----தமிழ்தாசன்----

----போராட்டம்-----

Image
----போராட்டம்----- இருளை எதிர்க்கும் இனப் போரில் திமிர்பிடித்த தீக்குச்சியின் தியாக உயிர் மரிப்புகளே! மெய்வருத்தும் மெழுகுவத்தியின் மெனக்கெடுதல்..... ----தமிழ்தாசன்----

நண்பர் கூட்டம்

நீ வேண்டி நின்ற தெய்வங்கள் கோயில் தாண்டி வருவதில்லை. நீ வேண்டாமென வெறுத்தாலும் இதயம் வாங்க மறுத்தாலும் பாலைவன மார்பில் உனக்காக  பால் சுரக்கும். நரகத்திலும் உன்னோடு நடக்கும் நாளையும் உன்னோடு இருக்கும். சாதிமத ஒழிப்பு திட்டம் உன் நண்பர் கூட்டம்... ----தமிழ்தாசன்----

---- ஒரு ரத்தத்தின் வியர்வை -----

Image
---- ஒரு ரத்தத்தின் வியர்வை ----- பசுமை நிலை பிரதிபலிக்கும் பாரத கோடி பறக்கும் பச்சை நிறம் என்றீர்கள் பசியில் உயிர்நுனி வரை செத்தோம் அரைஞான் கயிறுவரை விற்றோம். பிச்சை எடுக்கவும் வைத்தீர்கள். உற்றுப் பார்த்தால் உழவன் உடம்பு காச நோய்க்கு அறிகுறி. வையகத்தின் வயிற்றை நிறைத்தவனுக்கு மிச்ச்மிருந்ததோ எலிக்கறி. கால்நடைக்கு தீவனமில்லை கட்டுவதற்கு கோவணமில்லை . விளை நிலங்களெல்லாம் விலை நிலமாக்கி விற்றுவிட்டீர்கள். தாசியைப் போல் தானியங்களையெல்லாம் பண்ணை வீடுகளில் பதுக்கிவிட்டீர்கள். புரதசத்துக்களை புறக்கணிக்கும் துரித உணவுகளை தூளிதமாக்கிவிட்டீர்கள். கேவலம் இறைச்சிக்காக ஏர்பூட்டிய மாடுகளையும் ஏற்றுமதி செய்துவிட்டீர்கள். செல்லும் வழியில் செயலிழந்துவிடும் செயற்கைகோளுக்கு செலவளித்தீர்கள். கல்லும் முள்ளில் நிற்கும் எங்களுக்கு செருப்பில்லையென்று எங்கே கவனித்தீர்கள் ? இவர்கள் இந்தியாவின் முதுகெலும்பாட்டம் என்று பரிசளித்தீர்கள். முதுக்கு பின் நின்று கைநாட்டு கூட்டம் என்றே பரிகசித்தீர்கள். செரிமானிக்க ஏதுமின்றி செயலிழந்த வயிற்றுக்கு மேல் சுரக்கும

----குழந்தை தொழிலாளி----

Image
----குழந்தை தொழிலாளி---- கல்வி கிடைக்கல கல்லு உடைக்கிறோம். பள்ளிக்கூடம் பக்கத்துல குப்பைப் பொருக்குறோம். கனவு பழிக்கல உணவு விடுதியில தட்டு கழுவுறோம். எங்க வீட்டுல அடுப்பு எரியல செங்கச்சூளையில வெந்து சாகுறோம். திருடத் தெரியல பிச்சையெடுக்கிறோம். சுனாமிக்கு பிறகும் சுண்டல் விற்கிறோம். எங்க அப்பன் நடக்க காலில்ல. ஏழாவத பிறந்த பிள்ளைக்கு பாலில்ல. குலுங்கி குலுங்கி அழுகாத நாளில்ல. குலசாமி ஒண்ணுக்கும் காதில்ல. எழும்பும் தோலும் தழும்பும் தெரியும் அழுக்கு உடம்பை - சீருடையாக அணிந்து திரியும் எங்க வறுமையை யாரும் விரட்டல தீப்பட்டி செஞ்சும் நாங்க இருட்டுல. மதிய உணவுத்திட்டம் வந்ததும் மறக்காம பள்ளிச்சாலைக்கு போனோம். இரவு சாப்பாட்டுக்கு வழியில்லாம மறுபடியும் வேலைக்கு போனோம். பட்டாசு பட்டறைக்கு மிட்டாதாரரே! கந்தகம் கலந்திருக்கும் பிஞ்சுக் கைகளுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்க சாமி கைக்கழுவி காஞ்சி குடிச்சுக்குறோம். சமயமாகிடுச்சுன்னு சம்பளத்துல கை வச்சுராதீங்க. சிறுநீர் கோப்பைக்குள் நிலவை எறியாதீங்க. சின்னஞ்சிறு கைகளில் சிலுவை அறையாதீங்க. ---தமிழ்தாசன்--

ஈர்ப்புவிசை

Image
இரும்பு துகள்களை குலைத்து ஈரபசை கொடுத்து ஈர்ப்புவிசைக்கு இணங்கும்படி என் இதழ்களுக்கு ஆணையிட்டவன் எவனோ அவனே.. காந்த துகள்களுக்குள் காதல் தடவி... மின்னும் சிவப்பு வண்ணம் பூசி உன் செவ்விதழ்களை செய்திருக்கிறான். ---தமிழ்தாசன்---

நடுநிசி டீ கடைகளில்

நடுநிசி டீ கடைகளில் வாழைப்பழ தோல் கிடைக்குமென வாய்ப்பார்த்து நிற்கிறது.. மூக்கணாங்கயிறு இல்லாத அனாதை மாடுகள் ஐந்தாறு....

----தாயடி கண்ணே----

----தாயடி கண்ணே---- தேவதைகளின் தேவதையென்றும் அழகிய ராட்ச்சசியென்றும் மயிலென்றும் குயிலேன்றும் நிலவென்றும் பலவேன்றும் உன்போன்ற காதலிக்கு கவி எழுதி வற்றா தமிழுக்கு வார்த்தை பஞ்சம் வந்துவிட்டது.. உன்னைப்பாட உள்ள தமிழில் உவமை தேடி உலர்ந்து போகிறேன். புதுபொலிவுற்ற வார்த்தைகளொன்றும் புலப்படவில்லை. சரி வாலிப இதயத்தின் வாசல் திறந்து வாய்மைதனை வாய் மொழிகிறேன். நீ என்னை கருத்தரிக்காத தாயடி கண்ணே... என் தெய்வ சிலை  உன் காலடி மண்ணே.... ---தமிழ்தாசன்---

நுட்பம் கற்றுக்கொள்வோம்

ஈரபசை தடவியிருக்கும் இதழ்களில் பாசி படிந்துவிடும் பயமாக இருக்கிறது.. பனியில் செய்த பதுமையே வா... இதழோடு இதழ் உரசி உதட்டை வெப்பாமாக்கி கொள்ளும் நுட்பம் கற்றுக்கொள்வோம்.

மாலைக்கண் நோய்

அனேக அந்திசாயும் பொழுதுகளில் அழகே உன்னை பார்க்க முடியாமல் வைட்டமின் ஏ குறைபாடு வந்துவிடுமோ?

பஞ்சம் வந்த இடை.

மின்னணு நுண்ணோக்கி கொண்டு கண்ணோக்கி காணுகிறபோதேனும் பாவி என் பார்வைகளுக்கு தென்படுமா? பாவை உந்தன் பஞ்சம் வந்த இடை.
உன் பெயர் எழுதிவச்ச சவுக்கு மரம் கூட சந்தனமரமாகிடுச்சு.

இயற்க்கை மரணம் கூட இம்சைதான்

எடிசன் தந்த மின்சார விளக்கை எழுந்து அணைக்க முடிகிறது. குடிசை துவாரத்திலும் வானம் தெரிகிறது. ஒரு மரம் நாலு தலைமுறைக்கேனும் நிழல் தருகிறது. ஆயுள் உள்ளவரை சொந்த காலில் எவரஸ்ட் ஏறுகிறது எறும்பு. நாம் ? சரித்திர ஆலயத்தின் சாமிகளாய் வீற்றிருக்கும் சாதனையாளர்கள் நம்மைப்போல் விந்தணு சேர்கையில் விருட்சமானவர்களே! ஆஸ்திரியாவின் கட்டாய இரானுவமுறைக்கு அஞ்சி ஜெர்மனி வந்தவரே ஹிட்லர். குட்டி பிராயத்தில் குதிரை மேய்த்தவரே ஷேக்ஸ்பியர். மழுங்கிப் போகும் மனித வாழ்வில் தலைமுறைகள் கடந்தும் நம் இதய சுவர்களில் இவர்கள் படம் அனுமதியின்றி ஆணியடிக்கபடுகிறது. ஒவ்வொரு நொடியும் உன் சிந்தனையை கூர்தீட்டி கொண்டிரு. எல்லா விடியலிலும் எதிர்நீச்சல் அடிக்க தயாராயிரு. சாதிப்பதே உன் கொள்கையா ? நிமிடங்களுக்குள்   நிலவுக்கு போய்வர நிரந்தர வாகனமொன்றை கண்டுபிடி. சம்பாதிப்பதே உன் லட்சியமா? பில்கேட்சை உன்னிடம் பிச்சை கேட்க்க வை. தோல்வி பூகம்பம் உன் பூமியை புரட்டிபோடலாம். துயர புயல்களால் உன் ஆலமரம் தூக்கியெரியபடலாம். மருகாதே! மறுமுறை எழுந்து நிற்க மறக்காதே! சாக்ர
செவியில் அறைந்த சிலுவை போல அலைபேசியோடு உயிர் பிழைத்து சாலையை நான் கடக்கும் அதே சமயம் ஒருவருக்கொருவர் கைகோர்த்து ஊன்றுகோல் உதவியோடு கருப்பு கண்ணாடி அணிந்த வெள்ளை மனிதர்கள் சாலையை நிதானமாகவே கடந்து விடுகிறார்கள். ---தமிழ்தாசன்---

மனசாட்சி

பசியற்ற பொழுதுகளில் தின்ன கிடைக்கும் சிற்றுண்டிகளை உண்ண முயலும் போது இறுக்கி கட்டிய ஒரு குழந்தை இடுப்பில் ஒரு குழந்தை ஒட்டிய வயிறுடன் வாய் திறந்து பசியென்று கை ஏந்தும் காரிககையை கவனிக்காமல் நிற்க முடியுமெனில்.... மனசாட்சி என்பது சொல்வழக்கில் இருக்கும் ஒரு சோம்பேறி வார்த்தை. ---தமிழ்தாசன்---

---- அமுதமடி -----

---- அமுதமடி ----- சில சில  வாய்மையை உன் சிவந்த வாய் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உன் இதழ் தொட்டு போன இலவம்பஞ்சு பஞ்சு மிட்டாயானதடி நீ உமிழ்ந்த வேப்பகொட்டைதான் ஊர் கடைகளில்  தேன் மிட்டாயானதடி. நீ கடித்த ஆப்பிள் பழம் கிடைக்குமெனில் ஆண்கள் கூட்டம் ஆதாம் ஆகுமடி. உன் பற்கள் வெட்டிய நக துண்டுகளை புதைத்தால் பாதாம் சாகுபடி. நீ தொடாத திரவியம் மிச்சமிருக்கு. நீ தொட்ட இரும்பு  கூட அச்சுமுறுக்கு. உன் உதட்டுச் சாய தூரிகையை என் ஆறாம் விரலாய் ஆக்கி கொள்ள ஆசையடி. பசும்பால் குடித்ததும் உன்  மூக்கின் கீழே வெள்ளை மீசையடி. நீ கொடுத்தால் விசமாயினும் குடிக்க சம்மதமடி. எதுவாயினும் உன் எச்சில் பட்டால் அதுவெல்லாம் அமுதமடி.... ரசித்து நீ உண்ணும் மாமிசம் கூட சைவமடி ரகசியமாய்  முத்தமிடு  கல்லும் தெய்வமடி... ---தமிழ்தாசன்---

கோவில் மணி சத்தம்

கோவில் மணி சத்தமிட்டதால் கோபித்து கொண்டு வெளியேறிய பறவைகளெல்லாம் கோபுரங்களுக்கே மீண்டும் வந்துவிடுவதைப் போல என் மனம் உன்னிடம் சரணடைகிறது. ---தமிழ்தாசன்---

-------நட்(பூ) உதிர்கிறது--------

-------நட்(பூ) உதிர்கிறது-------- காதலி வசிப்பிடம் தேடி காலடி எடுத்து வைத்து புலம்பெயர்ந்த  என் புராதன நண்பனே ! பூவையவள் உனக்கொரு புதிய உலகமாய் இன்று கிடைத்திருக்கலாம். பாழடைந்த  இதய மாளிகையில் பால் காய்ச்சி பாவையவள் குடி அமர்ந்திருக்கலாம். வாடுதல் மட்டுமே கண்ட வாழ்வில் கூடதல் இன்பம்  கொண்டு சேர்த்திருக்கலாம். உன்னோடு நடை பழகி உன்னோடு விளையாடி உன்னோடு சிரித்து பேசி உன்னோடு சண்டையிட்டு மண்ணோடு போகும்வரை என்னோடு இருப்பாய்யென்ற எகத்தாள நம்பிக்கையை உடைத்தாயாட.... தங்ககதவு செய்து தனிமையில் எனைத்தள்ளி தாழிட்டு அடைத்தாயாட. இன்று பூத்த ரோஜாவுக்காக நின்று காத்த வேரை நிர்மூலமாக்குவது நியாமா? உனக்காகவன்றி உபயமற்றதாய் என் உயிர் போகுமா? சொற்ப நொடிகளுக்கு மேல் நமக்குள் நீடித்த கலகம் உண்டா? சொல் நண்பா நீயின்றி எனக்கோர் உலகம் உண்டா? கண்ணீரோடு கணவன் வீட்டுக்கு கன்னி மகளை அனுப்பிவைக்கும் தாயைப் போல தவித்து போகிறது என் மனசு... நீ நடந்த காலடிக்கு கீழே நசுக்க பட்டிருக்கிறது - ஒரு நண்பர்கள் கூட்டத்தின் நந்தவனத் தோட்டம். காதலி வசிப்பிடம் தேடி காலட

---தாலாட்டு---

Image
---தாலாட்டு--- காற்றை விட சத்தத்தை அள்ளி கொடுக்கும் கிழட்டு மின்விசிறியின் கீதம் கேட்டு உறங்க பழகிவிட்டது ஊமைத் தாய்யவள் வயிற்றை உதைக்கும் குழந்தை. ---தமிழ்தாசன்---