Posts

Showing posts from 2011

ஒவ்வொரு புத்தாண்டு அன்றும்

ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் ஏதேனும் ஒரு தீய பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று உறுதி செய்கிறேன்.. ஆனால் இதுவரை நான் அப்படி செய்ததாக ஞாபகம் இல்லை.. அதனால் இந்த புத்தாண்டில் இருந்து ஏதேனும் ஒரு நல்ல பழக்கத்தை விட்டு விடலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்.. ---தமிழ்தாசன்---

----போராடு-----

Image
----போராடு----- நான் உயிரோடு இருக்கிறேன்.. உலகம் அழிந்தால் எனகென்ன வந்தது.. இது சோம்பேறி சொன்னது.. உரசாதவரை நான் ஊமை உரசிவிட்டால் நான் நெருப்பு இது சின்ன தீக்குச்சி சொன்னது... முன்னே நாம் எட்டுவைத்தால் பின்வாங்கும் யானை படையும். அட நண்பா! முள் கீறியா - நம் முதுகெலும்பு உடையும். குனிந்தவனுக்கு மூட்டை சுமப்பதுக்கூட குறுக்கு வலி.. துணிந்தவனுக்கு சீன பெருஞ்சுவர் கூட குறுக்கு வழி. கதவுகள் திறக்கும் வரை தட்டு.. கை இல்லாதவனா.. தலையால் முட்டு... வேர்க்க வேர்க்க உழைத்து வா.. தோற்க்க தோற்க்க எழுந்து வா.. நீ கும்பிடுவதால்தான் சாமி பொழச்சிருக்கு.. உன் காலுக்கு கீழதான் பூமி மொளச்சிருக்கு... மனிதன் என்ற பேரொடு மரணம் வரை போராடு... ---தன்னம்பிக்கையோடு--- -------தமிழ்தாசன்--------

----தமிழினி மெல்லச் சாகும்----

Image
----தமிழினி மெல்லச் சாகும்---- தமிழ் பேசுவது கவுரவ குறைச்சல் என கருதும் தமிழர்கள் வாழும் தேசமிது... வேற்று மொழிக்காரர்களை கூட வெகு விரைவில் துய தமிழில் பேச வைத்துவிடலாம்... தமிழர்களை தமிழ் பேச வைப்பதுதான் தர்மசங்கடம். அடுத்த தலைமுறையில் குழந்தைகள் மம்மி என்று கத்தி கொண்டே பிறக்கும்... உன் தாத்த ஒரு தமிழர் என பாட்டிகள் கதை சொல்லலாம்... இனி வீரமாமுனிவர்கள் தான் தமிழை தத்தெடுத்து கொள்ளவேண்டும். ---தமிழ்தாசன்---

நண்பர்களை உதறிவிட்டு வா

Image
"நண்பர்களை உதறிவிட்டு வா" எப்படி சொல்ல முடிகிறது உன்னால்... நீ இல்லை என்றால் காலம் முழுக்க அழுது கொண்டிருப்பேன். இவர்கள் இல்லை என்றால் அனாதையாக அலைந்துகொண்டிருப்பேன். பத்து தாய் மடியை பறிகொடுத்து - ஒரு முத்தம் வாங்குகிற முட்டாள் நான் இல்லை. --தமிழ்தாசன்---