Posts

Showing posts from 2013

அதட்டுகிற அப்பாவுக்கு

Image
மழலை வயதில் மண் தின்றேன்... தடுத்தெனுக்கு தாய்ப் பால் தந்தீர். பள்ளி பருவத்தில் பென்சில் திருடினேன்... பொறுத்து கொண்டீர். பெண்கள் மீது இச்சை கொண்டு பேரானந்தம் அடைந்தேன்... பதின் பருவம் பரவயில்லை என்றீர். கல்லூரி வகுப்புகள் புறக்கணித்து காலை மதியம் திரையரங்கு புகுந்தேன்... தெரிந்தும் தெரியாமல் இருந்தீர். நடுநிசியில் கதவை தட்டுகிறபோது மாதம் இருமுறை மதுபான வாடை என் மீது... சரி போகட்டும் என்று சகித்து கொண்டீர். யாரோ ஒரு நடிகர் சுவரோட்டியுடன் ராத்திரி புறப்பட்டேன்... "பத்திரமா வாப்பா" பாசம் பொழிந்தீர். பட்டதாரி ஆகியும் பணிக்கு செல்லாமல் ஊதாரியாக பொழுதுகள் வீணடித்தேன்... மூன்று வேளையும் உணவளித்தீர். செருப்பு தைக்கும் சிறுவனை பள்ளிக்கு சேர்க்க முயற்சித்தேன்... "உனக்கெதுக்குப்ப இந்த வேல" அதட்ட ஆரம்பித்தீர். இரவெல்லாம் விழித்து சேகுவேராவை படித்தேன்... "நேரமாச்சு போய் தூங்கு" என்று கண்டீத்தீர். நம் ஊருக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த கோரி ஆட்சியருக்கு மனு செய்தேன்... "வேண்டாத வேலைய பாக்கதா" வெறுப்

உன் வருகைக்காக

Image
என் வளரிளம்பருவம் கரையும் வரை காத்திருக்கிறேன் உன் தெரு முனையில்   நீ கடந்து போகிற சில நொடிக்காக..... ஊசி பாசி வாங்க ஆளில்லாத உன் தெருவில் குழந்தையை காட்டி பிச்சையெடுக்கிறாள் ஒரு குறத்தி... வீட்டு வேலை முடித்து இடுப்பில் இருத்தி தன் குழந்தையை முத்தமிட்டபடியே என்னை கடந்து போகிற வேலைக்காரி மீது பினாயில் வாடை... முத்த கடன் முழுவதையும் திருப்பி தருகிறது குழந்தை சிறிதும் முகம் சுழிக்காமல்.... கூடையை கீழ் இறக்கி மீன்களுக்கு இடையில் கிடந்த மீனவனின் சதையை தூக்கியெறிந்துவிட்டு... எடை போடுகிறாள் ஒரு மீன்காரி.... சாக்கடை குழியிலிருந்து எழும்பி மேல் வந்து.. பழைய சோற்றில் கை நனைக்கிறார் ஒரு ஐயா.. தொட்டு கொள்ள பாதாள சாக்கடை வாசனை... மீசை மழிக்ககூட மிசின் வந்துவிட்ட தொழில்நுட்ப யுகத்தில் "சானை பிடிக்கலையோ சானை" சந்திடுக்குகளில் சத்தமிடுகிறார் ஒரு அண்ணன். மிதிவண்டியை உருட்டியபடி "உப்...போய்....." தொண்டை கிழிய கத்துகிற உப்புக்காரரின் உடலெங்கும் உதிர்ந்தன உப்-பூ. வெறிச்சோடி கிடந்த உன் தெருவில் இங்குமங்குமாய் அலைகிறது...

இப்படிக்கு

Image
ஊர் ஊராக ஓடி சேர்த்து வைத்திருக்கிறேன் உதவும் கரங்களை... என்ன பயன் ? உன் இடத்தை நிரப்பும் தகுதி எந்த சக்திக்கும் இல்லை என்கிறபோது.. எவ்வளவோ தடுத்தும் கேட்க்கால் உடைத்து வெளியேறுகிறது கண்ணீர். என் அழுகை ஆசிட் பாட்டிலோடு அலையும் ஆண்களை என்ன செய்துவிடும் ? வலியுடன் தான் எழுதுகிறேன்... மார்பில் அடித்து அடித்து கதறியழும் உன் அப்பாவுக்கு என்ன ஆறுதல் தந்துவிடபோகிறது  என் எழுத்து ? நொறுங்கி போய்தான் இருக்கிறேன்.... அதை வெளிப்படுத்த அவசியப்படுகிறது ஒரு பதிவு. உயிர் இழந்த உனக்கும் உன்னை இழந்த உன் உறவுகளுக்கும் இந்த பதிவு என்ன செய்துவிடும் என்றுதான் தெரியவில்லை....... ---- இப்படிக்கு---- ஒன்றுக்கும் உபயோகம் இல்லாதவன் தமிழ்தாசன்... 12.02.2013 (தங்கை வினோதினியின் மரம் செய்தியறிந்து அழுதது) 

அரக்கனை அனுமதியோம்

Image
----- அரக்கனை அனுமதியோம் ---- என் தாய் நாடே நீ யார் பக்கம் ? ராமருக்காக மதசார்பற்ற மண்ணில் மசூதியை இடிக்கிறாய் ? ராவணனுக்கு  உன் ராணுவத்தை கொடுக்கிறாய் ? நீ யார் பக்கம்? கூட்டு சேரா நாட்டின் குணம் இதுதானோ ? இலங்கை தள இந்து கோவில்களை இடித்தவர் இந்தியா வருகிறார். சாமி கும்பிட காதில் பூ வைத்தவன் கேட்டு நம்பிட.. தொப்புள் கொடி எரித்தவனை தோழனாக தொழுது வணங்குகிறது எங்கள் அரசு. கருப்பு கொடி ஏந்தி கண்டிக்கும் எங்களை கண்டு சிரிக்கிறது சிங்கள அரசு. தமிழின உணர்வை இலக்கியத்தைவிட எங்களுக்கு இலங்கைதான் புகுத்தியது. கோசம் போட்டு நாங்கள் கேட்டு எழுந்தது தமிழின விடுதலையை நாசம் செய்யும் கூட்டம் நடத்தி முடித்து தமிழின படுகொலையை மரித்த மைந்தர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துகிறோம் நீயோ எங்களை ஊமையென்று உத்தேசிக்கிறாய்.. ஏழுகோடியும் எழுந்து நின்று மூச்சு தேய கர்ஜிக்கிறோம் நீயோ கூச்சலென்று குறிப்பெழுதுகிறாய் நடந்ததை காட்டி நியாம் கேட்கிறேன். நீயோ பழங்கதை பேசி பழி தீர்க்கிறாய்.... உயிர் தப்பிய உறவுகள் ஊனமாய் பிணைகைதியாய் விதவையாய் வேசியாய் அனாத

பொழுதிருந்தால் போராடு

நிலமீது எதுவும் சரியில்லை நிகழ்வதெல்லாம் இங்கே தவறென்று கோபம் கொள்ளும் கொள்கையுடைய தோழர்களே ! மாற்று வழி குறித்து ... சிந்தித்ததுண்டா? திருத்தியமைக்க நீங்கள் தீர்மானித்தீர்களா? பூமியை புரட்டிபோட புறப்பட்டீர்களா? போராட்டத்தின் புதிய வடிவத்தை செதுக்கி கொடுக்காமல் உண்ணாவிரதம் உடன்பாடில்லை அறப்போராட்டம் அலுத்துவிட்டது என்று அரசியல் பேசாதே.... நீ என்ன செய்துவிட்டாய் ? வீட்டுக்குள் அமர்ந்து விமர்சிப்பதை தவிர.... உன்னால் என்ன செய்ய முடியாது ? பூமியை புரட்டி போட ! வானத்தை இழுத்து போட ! சிரிக்காதே தோழா எதுகை மோனைக்காக எழுதிவிட்டேன்... எதார்த்தம் சொல்கிறேன் கேள்.. கூலி வேலைக்கு போகும் குழந்தைகள் நிறுத்தி வாரம் ஒரு நாள் வகுப்பெடு.... பாடத்திட்டத்தை கற்றுகொடுக்க பள்ளிகூடமிருக்கு ஆகையால் அறியப்படதா உண்மைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்து.... மலைவாசிகளுக்கு மார்க்சியம் சொல்லிக்கொடு விவசாயிகளுக்கு விஞ்ஞான விபரங்கள் கற்றுகொடு... உணவகத்தில் உண்டமிச்சம் இருந்தால் உடனே பொட்டலம் கட்டு... வழியில் உன் வருகைக்காக வறுமையில் ஒருவர் காத்திருப்பார். வாழை