Posts

Showing posts from April, 2012

என் வாழ்கைக்கு எடுத்து கொண்ட சில பொன்மொழிகள் இவை

Image
---- என் வாழ்கைக்கு எடுத்து கொண்ட சில பொன்மொழிகள் இவை ---- நீ செய்யும் காரியம் தவறாகும் போது, நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது, உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது, உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது, அவசியமானால் ஓய்வெடுத்து கொள். ஆனால் ஒருபோது மனம் தளராதே.. ---டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ---- எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட ஆபத்தை ஒருமுறை சந்திப்பதே மேல். ---திரு. டெஸ்கார்டஸ்-- இந்த உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது. எல்லாம் நீயாக தேடி கொண்டதுதான். --பெயர் தெரியா பெரியவர்--- தனக்கு நிகழும்வரை எல்லாமே வேடிக்கைதான். --புத்தர்--- அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல. உழைக்கும் நேரம். --பெயர் தெரியா பெரியவர்--- இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான். ---மாவீரன் நெப்போலியன்--- தீமை செய்வதற்கும் மட்டும் பயப்படு. வேறு எந்த பயமும் உனக்கு வேண்டாம். --பெயர் தெரியா பெரியவர்--- நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் வாழ்ந்த வாழ்வின் அடையாளமின்றி சாக அஞ்சுகிறேன். ---திரு. மிக்கேல் லேர்மொண்டஸ்--- எல்லாம் தெரியும் என்று குழப்பத்தோடு இருக்

உன்னைப் பற்றி

Image
--- உன்னைப் பற்றி ----  நிலவே  நீ தரை வந்த  துயரம் தாளாமல்  காதல் தோல்வியில்  வானம் இட்டுக்கொண்ட  சிகரெட் சூடுகள்  நட்ச்சத்திரங்கள். உன் கைகளை  அலங்கரிக்காத  மருதாணி இலைகளெல்லாம்  கருவேப்பிலையாகவே  கருதப்படுகிறது. \" மகரந்த சேர்கையில்  மலர்கள் எப்படி  மனுசியாக முடியும்?\"   உனை கண்டு அதிசயத்த  வண்டுகளும் தேனிகளும் வட்ட மேஜை மாநாட்டில்  வைத்த கேள்வி இதுதான். புதிதாய் வாங்கிய  மிதிவண்டியில் நீ  கல்லூரி போக  உன் கால்தடத்தை  பறிகொடுத்த கவலையில்  சகாராவாகிப் போனது  சாலைகள். உன் இயல்புகளை  இழைத்து இழைத்துத்தான்  கம்பன்  சீதைப் பாத்திரத்தை  சித்தரித்திருப்பானோ? சனிப் பிண  இறுதி ஊர்வலத்தில்  தொங்கவிடப்படும்  கோழியைப் போல  நீ சாலை கடக்க  சம்மந்தமில்லாமல்  என் உயிர் ஊசலாடுகிறது. உயிரோடு பொசுக்கும்  சுபாவம் உடையது  உன் விழிகள். ஓ... கொள்ளிக்கட்டைக்கும்  உன் கண்களுக்கும்  கொள்கை வேறுபாடுகள்  உண்டோ? உன் பார்வை தோட்டாக்களுக்கு  பலியாகிவிடாமல் தப்பி  பத்திரபடுத்தி வைத்திருக்கிறேன்  பாதி உயிரை.   தனியாக  கரும்பு சக்கையை  த

ஒரு நாய் வளர்ந்த கதை

Image
----- ஒரு நாய் வளர்ந்த கதை ------- சாலையினோரம் சகமனிதர்கள் யாரும் சித்திரவதைக்குள்ளாகி சீல்ரத்தம் வடிந்து செத்து கிடந்தாலும், ஐயோ பாவமென அழுதகுரல் வடிக்க அனுதாபமற்ற ஆட்கள் நடமாடும் நவீன நகரத்தின் நடுமையத்தில் நாய்க்குட்டி ஒன்று நனைந்து குளிர்மழையில் நடுங்கிட கண்டேன். இனவெறி தாக்குதலுக்குள்ளான உயர் குனமுடையவர்களைப் போல் குட்டி நாயின் முதுகில் சில வெறி நாய்கள் குதரியிருப்பது கண்டேன். கழுத்தறுத்து கொலை பெண் கற்பழிப்பு புலையேன மக்களே கதிகலங்கி இருக்கும் இந்த தேசத்தில் பச்சிளம் நாய்குட்டியை விட்டுவர மனமில்லை. பிள்ளைப் போல் மார்போடு அதை அள்ளி ஒரு பிதாவாக மனை வந்தடைந்தேன். ஒருபடி கூடுதலாக இனி உலை வைக்க வேண்டிய சட்ட சிக்கலை சந்தித்தது என் சமையலறை. கம்யூனிசம் படித்ததாலே கட்டிபோட்டு நாயை காவல் பணியமர்த்தும் ஏகாதிபத்திய எண்ணம் எனக்கில்லை. செய்யாத தவறுக்கு ஜெயில் தண்டனையுற்ற எனக்கு தெரியும் நான்கு சுவர்களுக்குள் நாய் வளர்ப்பதொன்றும் நல்லதில்லை. நாட்கள் நகர்ந்தது நாயும் வளர்ந்தது. பட்டு தெரியாமல் பாடம் படிக்காமல் நன்றியென்னும் நற்குணத்தை

உன் வீட்டிலும் ஒருத்தி

Image
---- உன் வீட்டிலும் ஒருத்தி ----- தீப்பட்டி பட்டாசு தொழிற்சாலை பஞ்சர் ஓட்டும் ஊதிய வேலை தீயெரியும் செங்கச்சுவளை டீக்கடை எச்சில் குவளை கடற்கரை சுண்டல் விற்பனை கரம் நீட்டும் யாசக சுழ்நிலை குப்பை தூக்கும் வனவாசம் தட்டு கழுவும்  உணவகம் இந்தியாவின் நாளைய தூண்களெல்லாம் மந்தை ஆடுகளாக மாறக் கண்டேன். இந்தநிலையை இன்றோடு வேரறுக்க சிந்தையில் வீரிய சினம் கொண்டேன். நெஞ்சு  பொறுக்காமல் நெருப்பைப் போல் எழுந்து நின்றேன். பிஞ்சு வயிறை பிழியும் பிசாசுகளை பொசுக்கு என்றேன். ஊரை திருத்த உத்தேசிக்கும் போதுதான் உள்புத்திக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. ஆணையிட்டால் அடிபணிய அடுப்படியே கதியென பிராண உடல் உயிர்  வருத்தி குழந்தை தொழிலாளி ஒருத்தி என் வீட்டிலும் இருக்கிறாள். ஆசையாசையாய் நான் அம்மா என்று அழைப்பதற்கு. ---- தமிழ்தாசன் ----

புது காதல் செய்வோம்

Image
‎---புது காதல் செய்வோம்--- குளிரூட்டப்பட்ட பழமுதிர்ச்சோலை கூடத்தில் கும்மிருட்டு இருக்கைகள் ஓரத்தில் கனிச்சாறு அருந்தும் காதல் நமக்கு வேண்டாம் கண்ணே... குறுக்கு வளைந்த போதும் கூடை சுமந்து போகும் பழம் விற்கும் கிழவியிடம் கனிகள் வாங்கி திண்போம். உழைக்கும் சாதி நாமென்று உணர செய்யும் மூதாட்டியை வணங்கி செல்வோம். புனித காதல் புரிய பூங்கா புதர்களை தேடித் திரியும் தேகக் காதல் வேண்டாம் நமக்கு. கதவைத் தாண்டும் போது கற்போடு திரும்புவோமென்று கனவைக் கண்டு நம்பும் பெற்றோர்கள் நமக்கும் உண்டு. நீ கட்டியிருக்கும் சேலையில் நம் கலாச்சாரம் ஒட்டியிருப்பதை மறந்துவிடாதே ! காம இச்சைகளை கடத்தும் கருவியாக கடவுள் உன்னை படைக்கவில்லையென நான் நம்புகிறேன் நீ நம்புகிறாயா? என் குற்றங்களை சகித்து கொள்ளும் குணவதியாக இருந்துவிடாதே ! மதுரையை எரித்த தமிழ் பெண்ணை மறந்துவிடாதே! திரும்பிப் பார்த்தால் யாருமற்ற திரையரங்கு இருட்டுகளில் திணறி கொண்டிருக்கும் திருட்டு காதல் வேண்டாம் நமக்கு. வாடி என்னோடு இரு கை கோர்த்து பொடிநடையாய் அனாதை இல்லம்வரை போய் வருவோம். எனக்கு நீ உ

நான் வியந்து படித்த சில விசயங்கள்

--- நான் வியந்து படித்த சில விசயங்கள் ---- இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம். முடிந்தால் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். நாம் கற்கிற கல்வி தெருவில் பஞ்சர் ஓட்டும் சிறுவன் வரை போய் சேர வேண்டும்.  மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார். பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும். உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான். ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்துவிடலாம். மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன. பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது. பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை. நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இரு

இதுவே கதி

Image
‎----இதுவே கதி---- எந்த நிலையிலும் உங்களுக்காக எழுந்து நிற்பதே என் கொள்கையாக்கி கொண்டேன். என்னை கீழே விழ வைப்பதே நீங்களாகத்தான் இருக்கும் என்கிற நிச்சயத்தில்.... அகிம்சை போதிப்பதையும் அறவழி நடப்பதையும் தேர்ந்தெடுத்து விட்டேன் அடிக்கடி அவமானங்களை அள்ளி அள்ளி கொடுப்பீர்கள் என்கிற அனுமானத்தில். உங்கள் உண்மை மகிழ்ச்சியை உள்ளூர ரசிப்பதே உயிர் வாழ்வதன் இலட்சியமாக்கி கொண்டேன். கண்ணீர் சிந்தி கதறும் அளவிற்கு காயங்களை எனக்கு தருவீர்கள் என்கிற நம்பிக்கையில். தேசத்தின் பிரிவினைகளை எதிர்த்து போராடப் போகிறேன். நாளை எப்படியும் என்னை மதத்தலைவராய் மாற்றிவிடுவீர்கள் என்கிற அச்சத்தில். அனைவரும் ஒன்றுபடுங்கள் என்று அறைக்கூவல் விடப்போகிறேன். அனாதைப் பிணமாய் என்னை ஆக்கிவிடுவீர்கள் என்ற சத்தியத்தில் நான் யாரென்றே நாடு மறந்து போனபிறகு உலகெல்லாம் நல்லவர் விருதுக்கு என்னை பரிந்துரைப்பீர்கள் என்கிற பரவசத்தில். இப்படி இந்த தேசத்தின் ஒவ்வொரு இக்கட்டான காலகட்டத்திலும் பல ஆதங்கத்தோடு ஒரு ஆத்மா புறபட்டு இருக்கிறது இந்த தேசத்திற்காக போராட... --- தமிழ்தாசன் ---

மறத்தமிழினம்

Image
-----மறத்தமிழினம்----- மறத்தமிழ் தாயின் மார்பினிலே மாவீரம் சுரக்கும் பால் குடித்தவன் - எம் பெரும்தமிழ்க் கூட்டம் துயருற்றால் பேனா எரிந்து வாள் பிடித்தவன். தலைப் போகும் தண்டனைக்குள்ளாகி தப்பி பிழைக்க உன் கால் பிடிக்க மாட்டேன். தண்ணீர் ஆகாரம் தர மறுத்தாலும் தற்கொலை செய்து நான் மரிக்க மாட்டேன். --- தமிழ்தாசன் ---