Posts

Showing posts from 2014

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்

Image
நாணல் நண்பர்கள் குழு ஒருங்கிணைக்கும் 3வது "நம்ம வரலாறு" நிகழ்வு கடந்த 15.06.2014 ஞாயிறு, மாலை 4.30 மணிக்கு மதுரை பாண்டி முனீஸ்வரன் கோவிலில் நடந்தது. இம்முறை நம்ம வரலாறு நிகழ்வில் "நாட்டார் தெய்வங்கள்" குறித்து எடுத்துரைக்கபட்டது. நம்ம வரல ாறு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு. சா. கான்சா சாதிக் மற்றும் சே. ஸ்ரீதர் நெடுஞ்செழியன் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள். நாட்டார் தெய்வமான பாண்டிக் முனீஸ்வரன் கோவில் இடத்தை நாட்டார் தெய்வங்கள் குறித்து பேச தேர்வு செய்ததில் இருந்தே புரிந்துக் கொள்ளலாம். நாற்பது வருடங்களாக நாட்டார் வழக்குகள், நாட்டுபுற இசை, தமிழிசை ஆராய்ச்சிக்கென தன் வாழ்வை அர்பணித்த தமிழிசை அறிஞர் திரு. மம்மது அவர்களை நிகழ்வின் சிறப்பு பேச்சாளாராக அழைத்து கூடுதல் சிறப்பு. தாது மணல் கொள்ளை, அணு உலைக்கு எதிராக போராடி வரும் தோழர். முகிலன், வானகத்தில் இருந்து வெற்றிமாறன், மே 17 இயக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன், இயற்கை ஆர்வலர் திரு. சுந்தர கிருஷ்ணன், சுற்றுலா வழிகாட்டி திரு. சிவ குருநாதன், சமூக ஆர்வலர்கள் திரு. வ

வானூர்தியும் வண்ண பறவைகளும்

Image
வானூர்தி (Aeroplane) தரையிரங்குவதையும் மேலேறுதையும்  வேடிக்கை பார்க்க, மதுரை - அருப்புகோட்டை சாலையில் எப்போதுமே மக்கள் கூட்டம் திரண்டு இருப்பதை அந்த பக்கம் போகிறவர்கள் பார்க்க முடியும்.  பனிக்கூழ் (Ice Cream) வண்டியும் அதன் பக்கத்தில் பனிக்கூழ் வேண்டி சிறுவர்கள் பெற்றோரிடம் அடம்பிடிக்கும் காட்சியையும் பார்க்கலாம். வேடிக்கை பார்க்கிற மக்கள் திரளில் என்றாவது நாமும் ஒருவராக இருந்திருப்போம். காரணம் வேடிக்கை நம் தேசிய குணமாகியிருக்கிறது. தரையிறங்கும் வானூர்தி எந்த நிறுவனத்தை சேர்ந்தது, எங்கே செல்கிறது, எங்கிருந்து வருகிறது என்று தன் பிள்ளைகளுக்கு அத்தனை ஆசையோடு எடுத்து சொல்லும் பெற்றோர்களை நான் பார்த்திருக்கிறேன். வானூர்தியை பார்க்கிற மக்களின் உற்சாக ஆசையால் பனிக்கூழ் விற்கும் தொழிலாளி பயனடைகிறார் என்கிற செய்தி நமக்கு மகிழ்ச்சி தருகிறது. Times Of India 02.06.2014 அதே வழியில் மண்டேலா நகருக்கு அருகில் சாலையின்  இருபுறமும் அமைந்துள்ள கிளாக்குளம் கண்மாய்க்கு கூட்டம் கூட்டமாக சிறகடித்து வருகின்றன பறவைகள் பல. என்றாவது ஒருநாள் அவ்விடத்தில் நின்று அந்த பறவைகளை இனம் காண மு

உழவர்களைத் தேடி - வத்திராயிருப்பு

Image
ஒளிப்படங்கள் - திரு. மு.பிரசன்னா & திரு. இ.சுதாகரன் மதிப்புக்குரிய திரு. ச.முகேஷ், திரு. ப.பிச்சைமுருகன், திருமதி. இரா.செந்தமிழ் செல்வி, திரு. ந.கோபாலகிருஷ்ணன், திரு. நா.பெருமாள், திரு. கா.கருணாகரன், திரு. பா.சதாசிவராஜா, திரு. வே.இசைமணி, திரு.கு.மணி, திரு. பா.தமிழ்மணி, திரு. மு.தமிழ்செல்வன், திரு.கீர்த்திராஜன் இவர்கள் எல்லாம் யார் என்று கேட்குறீர்களா? நஞ்சை தூவி மண்ணையும் மண்ணுயிர்களையும் அடியோடு கொள்ளும் ஏகாதிபத்திய வேளாண் உற்பத்தி முறையின் அரசியலை புரிந்து கொண்டு, தாய் மண்ணை நேசித்து, பாரம்பரிய இயற்கை வழியில், புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி மண்ணை மீட்டெடுக்க அரும்பாடுபடும்  பெருமக்களில் ஒரு சிறு கூட்டம்.   நஞ்சில்லாத உணவை நமக்கு வழங்க, இயற்கை வழி வேளாண்மையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் உழவர்கள். பசுமை போராளிகள். நாணல் நண்பர்கள் குழு ஒருங்கிணைக்கும் "உழவர்களைத் தேடி" யின் மூன்றாவது நிகழ்வு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு ஊரில் 18.05.2014, ஞாயிறு அன்று நடைபெற்றது. நீர் வற்றாத இருப்பு அதனால் வத்திராயிருப்பு என்று இவ்வூருக்கு பெயர் மருவியத

சிவரக்கோட்டை - அழியும் பசுமை சூழல்

Image
இந்த கிரமத்த, கடைசியா ஒருதரம் பார்த்துக்கோங்க... மதுரையில் உள்ள அழகிய கிராமங்கள், பல்லுயிர் சூழல் அழிய போகிறது. கடைசியா ஒருதரம் பார்த்துக்கோங்க.  "மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை, கரிசல்காளம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 1478.71 ஏக்கர் விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு எடுக்கும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலங்கள் விவசாய நிலமாய் இல்லை என்ற அரசு நிர்வாக அதிகாரிகளின் கூற்றுகளை பல குழுக்கள் நேரடியாக கள ஆய்வு செய்து பொய் என்று நிரூபித்துள்ளன. கம்பு,வரகு, சோளம், பருத்தி, துவரை, மொச்சை, பச்சைப்பயிர், சுண்டல், ஓமம் போன்ற 30க்கும் மேற்பட்ட உணவுத்தானியப் பொருட்கள் தற்போதும் சாகுபடி செய்து வரும் இந்த பூமியில் நித்ய கல்யாணி, அவுரி போன்ற மூலிகைப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. கரிசல்காளம்பட்டியில் சிவரக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு அவரி மானியம், தேசிய மூலிகை பயிர் இயக்கம், மாவட்ட இயக்குநர் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது

வெள்ளிமலைக் காடு - ஒரு அறிமுகம்

Image
இந்திய பசுமை வேலி ஒரு பார்வை: மதுரையின் காடுகள் இயற்கை அமைப்பு பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் நம் இந்தியாவின் பசுமை பரப்பு பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம். படித்த மற்றும் களத்தில் திரட்டிய தகவல்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். நாணல் வெளியிட்டிருக்கும் இந்த கட்டுரை இந்திய வனம், காட்டுயிர் மற்றும் வெள்ளிமலை காடு குறித்த ஒரு தொடக்க நிலை அறிமுகத்தை உண்டாக்கும் என்று நம்புகிறோம். இந்திய மலைப் பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கும் (66.7%), மொத்த பரப்பில் மூன்றில் ஒரு பங்கும் (33%) காடு இருக்க வேண்டும் என்பது நமது தேசிய வனக் கொள்கை (1988). 33 சதவீதம் இருக்க வேண்டிய காடுகள் இன்று இந்தியாவின் மொத்த நிலபரப்பில் 20 சதவீதம்தான் காடாக இருக்கிறது. எஞ்சியுள்ள அந்த 20 சதவீத காடுகளும் பெருமளவு துண்டாக்கப்பட்டு, வளமற்ற காடுகளாக உள்ளன என்பது நாம் கவலைப்பட வேண்டிய செய்தி. தமிழகத்தின் 1,30,058 சதுர கி.மீ மொத்த பரப்பில் 22,643 சதுர கி.மீ. மட்டுமே காடுகள் உள்ளன. அதாவது நிலபரப்பில் 15 சதவீதம். அதில் 3,305 சதுர கி.மீ. அதாவது வெறும் 2.5 சதவீதம் மட்டுமே பாதுகாக்கப்பட்ட காடுகளாக உள்ளது.