Posts

Showing posts from October, 2012

எங்கே ?

தெருவோர அழுக்கு மனிதர்கள் அனாதை முதியவர்கள் இவர்களெல்லாம் எங்கு புதைக்கபடுகிறார்கள் ?

என்ன தப்பு

காவலுக்கு நிற்கும் ஏட்டு பீடி எழுத்தால் என்ன தப்பு ? அது சிறுவர் சீர்திருத்த பள்ளிதானே...

நமக்கும் உண்டு இனவெறி

Image
---- நமக்கும் உண்டு இனவெறி --- தேச தலைவர்களாக தெரியப்பட வேண்டிய தெய்வ சிலைகளெல்லாம் தெருக்களின் இடுக்கில் தேம்பி அழுகிற திருவிழா நடக்கிறது நம் ஊரில்... கல்லெறிபட்டு செத்துக்கிடக்கும் கல்லறை பிணங்களை கணக்கெடுத்தால் இனக்கலவரம். தமிழர் ஒற்றுமை எண்ணியபோது தடதடவென கண்ணில் தண்ணீர்பெருக்க கனமழைவரும். சுத்தமான தங்கம் ஐயா முத்துராமலிங்கம் நீ முளைத்த நாள் இந்துவம் குடித்த பால் இஸ்லாமியம் படித்த பள்ளி கிறித்துவம் ஒருமைப்பாடு உன் தத்துவம்.... வெறியாட்டத்தின் வெளிப்பாடாக உன்னை கொண்டாடும் உரிமை இழந்து நிற்கிறது ஊருக்குள் பெருங்கூட்டம். உன் கர்ஜனையில் காது கிழிந்த ஆங்கில அரசு அறிவித்தது வாய்பூட்டு சட்டம். உன்னை அர்ச்சனை செய்ய புறபட்ட கூட்டம் கொடுத்தது உனக்கு சாதி தலைவர் பட்டம். இனவெறி கொலைகள் தினசரி நிகழும் ஊரில் ஏனோ பிறந்துவிட்டேன்... அனுசரிக்க மறுத்தவன் கழுத்தை அறுக்கும் நரிகளோடு தானே இருந்துவிட்டேன்.... சாதிக்கும் இளைஞர் திரட்டி போதிக்கும் ஆசானாக வாழ வேட்கை செய்துவிட்டேன். சாதிக்கு இளைஞர் திரண்டு - அவர் சாவுக்கு பிரிவினை கண்டு நானே இயற்கை எய்திவிட்டேன். எங்கள்

நாய் பாசம்..

பசியில் துடித்து கையேந்தி வயிறு நிரப்ப கூசி தண்டவாளத்தில் தலை வைத்து கதை முடித்து கொண்டாள் தாயொருத்தி... பூச்சி மருந்து வாங்கக்கூட காசு கொடுத்தனுப்பாத தலைமகனுக்கும் தகவல் சொல்ல தேடியபோது...... "நோயுற்ற நாயை தூக்கி வைத்தியம் பார்க்க போனவர் வரவில்லை..." வாசலை தாண்டி வந்தது விழுந்தது மனைவியின் குரல்.... நகரமையமாக்குதலில் வளர்ந்திருக்கிறது நாய் பாசம்.. ---தமிழ்தாசன்----

சுக பிரசவம்

சுக பிரசவம் முடிந்த மறுகணம் தாய் இறந்துவிட்டாள். இன்னும் எத்தனை நாட்களுக்கு தாங்குமோ ? எய்ட்ஸ் நோயுடன் பிறந்த குழந்தை.

மரம்

மலடி மலடன் என்று இந்த பூமியில் யாருமில்லை  மரம் வளர்த்தால் சின்னதா குழி வெட்டி விதை புதைச்சு மண் அதையிட்டு மூடி மரம் வளர்க்கும் சுகம் மகன்  வளர்ப்பிலும் கிடைப்பதில்லை

கீழ்படிதல்

ஆணி அறையப்படுகிறபோது ஏசு எப்படியெல்லாம் துடிதுடித்திருப்பார்? அது இருக்கட்டும்... சுத்தியலால் ஓங்கியடித்த கைகளின் மனநிலை என்னவாய் இருந்திருக்கும். 

ஒதுக்கபட்டவன்

Image
ஒதுக்கபட்டவன் என்று பெண் தர மறுத்தபோதும் தனிகட்டையாக தவித்தபோதும் அனாதைகளுக்கு தலைசெம்பிள்ளையாக இருந்தபோதும்... ஊருக்கு வெளியே உருக்குலைந்து புழுவரித்து கிடக்கிறது வாய்க்கரிசி கூட வாய்க்காத வரிசுகளற்ற தோழர் வெட்டியான் பிணம். ---தமிழ்தாசன்---

ஐஸ் கப்

Image
குப்பையென நீ தூக்கியெறிந்த பொருட்களை பொக்கிசமாக சேகரிக்கும் என் அலமாரிக்குள் நீங்காத நினைவாக கசங்கி கிடந்தது.... எச்சிலை தொட்டிக்குள் நீ வீசியெறிந்த ஐஸ் கப்பை சுரண்டி கொண்டிருந்த சிறுமியின் பசி. --- தம்ழ்தாசன் ----

ரத்தம் கொடுக்க

Image
---- ரத்தம் கொடுக்க ---- பரிசோதனைக்கு தேவையென  பல்லிளிக்கும் பெண்ணுக்கு  சம்மதிக்கிறேன்.. பசித்திருக்கும் பெண் கொசு  பல் கடியை பொறுத்து கொள்வதில்லை நான். ---தமிழ்தாசன் ---

நானொரு விதை

Image
----- நானொரு விதை ---- என்னை புதைப்பதாக தீர்மானித்தால்..... அவ்விடத்தில் குறைந்தபட்சம் குடிசை அமைத்து கொடுங்கள் ஒரு தொழு நோயாளிக்கு. உறுப்புதானம் செய்த உடலை எரிப்பதாக உத்தேசித்தால்.... மலை உச்சியில் போடுங்கள் கருவுற்று இருக்கும் கழுகுகள், மிருகங்கள் பசியாரட்டும். எனக்கு கல்லறை எழுப்ப வேண்டாம் நான் இன்னும் சாகவில்லை. ---தமிழ்தாசன்---

பிராத்திப்போம்

Image
---- பிராத்திப்போம் ---- முதல் இரவு முடிந்த பொழுதோடு மூட்டை கட்டி புறப்பட்டு இடுப்பு வலியால் துடித்த மனைவியின் செய்தி கேட்டு விடுப்புக்கு முறையிட்ட ஒரு வீரனின் சடலம் எல்லையில் மீட்கபட்டது.... அவன் பிணத்திடம் யார் போய் சொல்லுவது... அவன் விந்துக்கு பிறந்த குழந்தை இறந்து விட்ட செய்தியினை... வயது இருபது கடக்காத வீரனின் இளம் துணைவி பிரசவம் முடிந்து இன்னும் கண் திறக்கவில்லை. அவள் கருவுற்ற நாள் தொட்டு சந்தேகிக்கும் தெரு மக்கள் சமாதானம் அடைய பிராத்திப்போம்.... ---- தமிழ்தாசன் ----

சத்திய சோதனை

Image
---- சத்திய சோதனை ---- தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடி முடிந்தாயிற்று. தெரு குழாய் தொடங்கி கர்நாடகம், கேரளா வரை தண்ணீருக்கு தகராறு... அசாமுக்கு அந்தபக்கமிருக்கும் எல்லை தாண்டி எப்போது வேண்டுமானாலும் இந்தியாவில் விழலாம் சீன-சிங்கள கூட்டு அணு ஆயுத குண்டுகள். தடியடி நிகழ்த்தும் காவல் துறை மீது கல்லெறிந்து விரட்டுகிறார்கள் அறவழி போராட்டகாரர்கள். அறவழி போராட்டமென்று அறிவித்த அத்தனையும் கடைசியில் கலவரமாக முடிந்துவிடுகிறது... ஆயுத கிடங்கு வைத்திருப்பவர்கள் வன்முறை வேண்டாமென அறிக்கை விடுகிறார்கள். சம்மட்டி பிரயோகிப்பவர்கள் சத்தியாகிரகம் நடத்துகிறார்கள். உழைக்கும் வர்க்கத்தை   உறிஞ்சு குடித்து ஏழு தலைமுறைக்கு சொத்து குவித்து தேர்தல் களத்தில் தெரிவித்தார்கள் "நான் ஏழையாக பிறந்தவன்" சுவிஸ் வங்கியின் சிரிப்பொலி செந்நீர் சிந்திய தேசத்தின் செவிகளில் விழவில்லை. எங்கும் பார்த்தாலும் உண்ணாவிரதம் எதற்கென்று அவர்களுக்கே தெரியவில்லை. இரண்டு மணி நேரத்தில் வெற்றிகரமாக முடிந்துவிடுகிறது இன்னும் சில உண்ணாவிரதங்கள் "நான் சொல்வதெல்லாம் உண்