Posts

Showing posts from November, 2011

என் காதல் கவிதைகள் சில

----என் காதல் கவிதைகள் சில---- * சிகரெட் புகையும் உன் சிறு பார்வையும் என் நுரையீரல் வரை நுழைந்துவிட்டு வருகிறது... *குளத்தில் நீ குளிப்பதை பார்த்து குழம்பிப் போன இளசுகள் எல்லாம் ஊருக்குள் ஒரு வதந்தியை பரப்பிவிட்டது... "ஒரு தாமரை மட்டும் தாவணி கட்டி இருக்கிறது" என்று.. *திருவிழாத் தேர் உன் வீதியில் வலம் வருகிறது. நீயோ தேர் இழுப்பதை வேடிக்கை பார்க்கிறாய். தேரை இழுப்பவர்களெல்லாம் உன்னையே வேடிக்கை பார்கிறர்கள். *தென்றல் தழுவினால் கூட தேகம் கீறல் படும் மெல்லிய ஸ்பரிசம் உன்னது.. *பேச்சு போட்டியைப் போல் மௌனப் போட்டி எங்காவது நடந்தால் சொல்லுங்கள். அதில் கலந்து கொள்ள ஒரு காதலி இருக்கிறாள் எனக்கு. *வாழைத்தோப்பு வரப்போரம் நீ நடந்து வந்தால் வாழைப் பூக்கூட வயசுக்கு வந்துவிடும்.. *ஏய் கருவாச்சி நீ பவுடர் பூசுகிறபோது உன் முகம் வெளுத்துப் போகிறது. பாவம் பவுடர் கருத்து போகிறது. *உன் வீட்டில் கிளி நீ வளர்க்கிறாயாமே?  ஏற்க்கனவே உன் அம்மா வீட்டில் மயில் வளர்கிறாளே அது போதாத?  *அன்பே! வெற்றியில் கிடைக்கும் பரிசுகளை விட தோல்வியில் கிடைக்கும் உன்

நான் எழுதிய ஹைக்கூ சில

Image
....நான் எழுதிய ஹைக்கூ சில.... * பணக்காரன் ஆகிவிட்டான் பாகன் இன்னும் பிச்சையெடுக்கிறது யானை.. * ஆணி குத்திய கால்களுடன் செருப்பு தைக்கும் சிறுவன்.. * ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும் முத்தமிட ஒரு குழந்தைகூட இல்லை முதியோர் இல்லத்தில்.. * அழைத்த குரலுக்கு ஓடி வர ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில், உயிருக்கு போராடி இருந்து கிடந்தார் ஆம்புலன்ஸ் டிரைவர். * எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர் ஏழை குடிசைகளை. * குங்குமம் வர இதழை விரும்பி படிக்கும் வாசகி விதவையானாள். *பட்டினி சாவை எதிர்த்து ஊர் மக்கள் இன்று உண்ணாவிரதம். * அதிக வலிஎடுக்கிற போது அம்மா என்று கத்திவிடுகிறது அனாதை குழந்தை. ----தமிழ்தாசன்---

நடந்து போகும் என் நண்பர்களுக்கு

Image
--------நடந்து போகும் என் நண்பர்களுக்கு-------- காரில் போகிறவனை பார்த்து கவலை பட்டு நிற்காதே.. கால் இல்லாதவன் உனை கடந்து போவதை கண் திறந்து பார்... உள்ளதை வைத்து உல்லாச பட்டால். வானும் கூட பக்கம்தான். வாழும் போதே சொர்க்கம்தான். ----தமிழ்தாசன்----

----காதலில் முத்தம் இப்படிதான் இருக்குமோ?----

Image
----காதலில் முத்தம் இப்படிதான் இருக்குமோ?---- * முத்தம் என்பது நான்கு இதழ்களின் நந்தவனம். *ஆக்சிஜன் இல்லாத ரத்தமும் உன் எச்சில் படாத முத்தமும் இரண்டுமே ஒன்றுதான் அன்பே! * நான் கொடுக்கும் முத்தம் உன் இதழ்களை ஈரப்டுத்தும். நீ கொடுக்கும் முத்தம் என் இதயத்தையே ஈரப்டுத்தும். *காதலை ஆழமாய் அனுபவித்த அறிஞர்கள் சொல்லுகிறார்கள் காதலில் காமும் கலந்து இருக்குமாம் . நீ என்னவோ ஒரு முத்ததிர்க்கே முகம் சுளித்து கொள்கிறாய்.... *அடியே ஏமாற்றுக்காரி அறுதல் சொன்னால் அடங்கி விடுவேன் என்று மட்டும் நினைத்து விடாதே.. உன் அண்ணனிடம் நான் வாங்கிய அடியை எல்லாம் முத்தமாக திருப்பி கொடு அது வரை திருப்தி அடைய மாட்டேன். *உதடுகள் இல்லா காரணத்தால் முத்தமிட பார்க்கலை வைத்தே பழகி கொண்டது உன் வீட்டு சீப்பு. *ஒரு ஈசல் அமர்ந்தால் கூட அந்த உணவை முற்றிலும் புறக்கணிப்பவன் நான். இன்று உன் எச்சில் முத்தம் வேண்டுமென்று ஏங்கி நிற்கிறேன். *அழகே! நீ கிடைத்ததால் மச்சக்காரன் நான். அடிகடி முத்தம் கேட்பதால் பிச்சைக்காரன் நான். *தயங்கி தயங்கி என் உதட்டில் தருவதை விட தானாக நீ வந்த

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

...........(ஒரு நாட்டுப்புற காதல் கவிதை).......... ஆண் : மாந்தோப்புக்குள்ள நின்னு ஆண் மயிலோன்னு ஆடுதடி. தொகையில்லா பெண் மயில் தொன வேணும்ன்னு தேடுதடி. பெண் : மாமா நீங்க மழைக்கு ஆடுற மயிலாயிருந்த பரவயில்ல. ஏ மாராப்ப பாயாக்க தவியா தவிக்கிற மைனர் வீட்டு செல்ல புள்ள. ஆண்: அடி போடி பொசகேட்டவளே அடுபில்லாம ஏம மனச சுட்டவளே. எந்த சிருக்கியையும் ஏறெடுத்தும் பாக்காத உத்தமண்டி ஓ மாமே. இந்த சீத இல்லாம தீக்குளிச்சு செத்தவண்டி நா ராமே. பெண்: வப்பாட்டிய என்ன வச்சுக்க எவ்வளோ வக்கனைய பேசுறீக . கருவாச்சி மூஞ்சியில மறுபடியும் ஏ கரியள்ளி பூசுரீக. ஆண்: கொசுவ அடிச்சா கூட கொலதான்னு சொல்லுற. நெசமான ஏங்காதல் புரியாம ஏண்டி என்ன கொல்லுற. பெண்: ஏ அப்பே குடிச்சு குடிச்சு நெஞ்சு வெந்துருச்சு. நா கஞ்சி குடிச்சு ஆஞ்சு நாளாயிருச்சு. ஆளானா பொண்ணு கால் எல்லாம் என்னைக்கு அடுப்படிய தாண்டிருக்கு. அழுது அழுது சாக பொறந்த எனக்கெல்லாம் காதல் என்ன வேண்டிருக்கு. ஆணி அடிச்சாலும் நம்ம காதல் ஒட்டாது. ஏணி வச்சாலும் ஒங்களுக்கும் எனக்கும் எட்டாது. ஆண்: ஏற்க்கனவே எனக்குள்ள இருக்குற

-----கண்ணீர்------

Image
-----கண்ணீர்------ இதய வலியெடுத்து இரு விழிகள் பிரசவித்த ... See More

விதவைப் பூ

Image
----விதவை பூ---- பூக்களெல்லாம் பூக்கூடையிளிருந்து தாவி குதித்து தற்கொலை செய்ய தயாரானது... வீதி வீதியாக சென்று பூ விற்ப்பவள் விதவையான போது... --தமிழ்தாசன்--

நீரில் நீந்தும் மீனும் நீ இல்லாத நானும்

Image
என்னுயிரே....... நீரில் நீந்தும் மீனும் நீ இல்லாத நானும் இந்த உலகில் ஒரு சின்ன வேற்றுமையால் வேறுபடுகிறோம். என்ன வித்தியாசமென்று உனக்கு சொல்கிறேன்... கேள்...... மீன்கள் தண்ணீரில் வாழ்கிறது நான் கண்ணீரில் வாழ்கிறேன்...... ----தமிழ்தாசன்---

கொஞ்சும்கிளிகள் கூண்டுகிளிகள்

Image
-----கொஞ்சும்கிளிகள் கூண்டுகிளிகள்----- ஆண்கள் எப்போதும் பெண் சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் அல்ல. அடுப்படி பெண்கள் ஆட்டோ ஓட்டுவதற்கு அதரவு தந்ததும் ஆண்கள்தான்.... பெண்களை வீட்டிற்குள் அடிமைபடுத்தினால் அதை கண்டு ஆவேச படுவதும் ஆண்கள்தான்.... சுதந்திர காற்றை அடைத்து கழுத்தை கையிற்றால் கட்டி பறக்கவிடும் பலூனை போல் பெண்களை பாவித்த பாவிகளிடமிருந்து காற்றில் பறவை போல் பறக்க செய்ததும் ஆண்கள்தான்...... பெண்கள் இந்நாட்டின் கண்கள் என அழகிய கவி பாடியதும் ஆண்கள்தான்...... சரி அப்படியென்றால் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ... சாதிக்கும் ஆண்களோடு ஒப்பிடுகையில் சாதிக்கும் பெண்களின் சதவிகிதம் சரிசமமாய் இல்லையே ஏன்? ஆண்கள் எப்போதும் பெண் சுதந்திரத்திற்கு எதிரானவர்கள் அல்ல... ஆண்களை பொருத்தவரை பெண்களுக்கான சுதந்திரம் மரியாதை மதிப்பு எல்லாம் ஒருவனுக்கு மனைவியாகும் வரைதான்.... வானை தொட்டுவிட நினைக்கும் வல்லமை படைத்த ஆண்கள்..... பெண்ணை மட்டும் வாசலையே தாண்ட விடுவதில்லை....... -----தமிழ்தாசன்------

மறக்க வேண்டாம் நாம் மனிதஜாதி

Image
----மறக்க வேண்டாம் நாம் மனிதஜாதி---- இந்த தேசத்தின் புரட்சிக்கென தேகத்தை அர்பணித்த விட்டு மரணத்திற்கு பிறகு தேச தலைவர்களாய் தெரிய படுத்த வேண்டிய தெய்வங்கள் இன்று சாதி தலைவர்களாய் அவதாரம் பூண்டிருக்கும் அவமானம் அவலம் என் அன்னை தேசத்தில் மட்டும்தான் அரங்கேறுகிறது...... மனிதனின் மனதில் மறுபடியும் குரங்கு ஏறுகிறது..... ---தவிப்போடு--- ---தமிழ்தாசன்---