கொஞ்சும்கிளிகள் கூண்டுகிளிகள்

-----கொஞ்சும்கிளிகள் கூண்டுகிளிகள்-----

ஆண்கள் எப்போதும்
பெண் சுதந்திரத்திற்கு
எதிரானவர்கள் அல்ல.

அடுப்படி பெண்கள்
ஆட்டோ ஓட்டுவதற்கு
அதரவு தந்ததும்
ஆண்கள்தான்....

பெண்களை வீட்டிற்குள்
அடிமைபடுத்தினால்
அதை கண்டு
ஆவேச படுவதும்
ஆண்கள்தான்....

சுதந்திர காற்றை அடைத்து
கழுத்தை கையிற்றால் கட்டி
பறக்கவிடும்
பலூனை போல் பெண்களை
பாவித்த பாவிகளிடமிருந்து
காற்றில் பறவை போல் பறக்க செய்ததும்
ஆண்கள்தான்......

பெண்கள் இந்நாட்டின் கண்கள் என
அழகிய கவி பாடியதும்
ஆண்கள்தான்......

சரி
அப்படியென்றால்
என் கேள்விக்கு
பதில் சொல்லுங்கள் ...

சாதிக்கும் ஆண்களோடு
ஒப்பிடுகையில்
சாதிக்கும் பெண்களின்
சதவிகிதம்
சரிசமமாய் இல்லையே
ஏன்?

ஆண்கள் எப்போதும்
பெண் சுதந்திரத்திற்கு
எதிரானவர்கள் அல்ல...

ஆண்களை பொருத்தவரை
பெண்களுக்கான
சுதந்திரம்
மரியாதை
மதிப்பு எல்லாம்
ஒருவனுக்கு
மனைவியாகும் வரைதான்....

வானை தொட்டுவிட நினைக்கும்
வல்லமை படைத்த ஆண்கள்.....
பெண்ணை மட்டும்
வாசலையே
தாண்ட விடுவதில்லை.......

-----தமிழ்தாசன்------

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்