ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

...........(ஒரு நாட்டுப்புற காதல் கவிதை)..........

ஆண் :
மாந்தோப்புக்குள்ள நின்னு
ஆண் மயிலோன்னு ஆடுதடி.
தொகையில்லா பெண் மயில்
தொன வேணும்ன்னு தேடுதடி.

பெண் :
மாமா நீங்க மழைக்கு ஆடுற
மயிலாயிருந்த பரவயில்ல.
ஏ மாராப்ப பாயாக்க தவியா தவிக்கிற
மைனர் வீட்டு செல்ல புள்ள.

ஆண்:
அடி போடி பொசகேட்டவளே
அடுபில்லாம ஏம மனச சுட்டவளே.

எந்த சிருக்கியையும் ஏறெடுத்தும் பாக்காத
உத்தமண்டி ஓ மாமே.
இந்த சீத இல்லாம தீக்குளிச்சு
செத்தவண்டி நா ராமே.

பெண்:
வப்பாட்டிய என்ன வச்சுக்க
எவ்வளோ வக்கனைய பேசுறீக .
கருவாச்சி மூஞ்சியில மறுபடியும்
ஏ கரியள்ளி பூசுரீக.

ஆண்:
கொசுவ அடிச்சா கூட
கொலதான்னு சொல்லுற.
நெசமான ஏங்காதல் புரியாம
ஏண்டி என்ன கொல்லுற.

பெண்:
ஏ அப்பே குடிச்சு குடிச்சு
நெஞ்சு வெந்துருச்சு.
நா கஞ்சி குடிச்சு
ஆஞ்சு நாளாயிருச்சு.

ஆளானா பொண்ணு கால் எல்லாம்
என்னைக்கு அடுப்படிய தாண்டிருக்கு.
அழுது அழுது சாக பொறந்த எனக்கெல்லாம்
காதல் என்ன வேண்டிருக்கு.

ஆணி அடிச்சாலும்
நம்ம காதல் ஒட்டாது.
ஏணி வச்சாலும்
ஒங்களுக்கும் எனக்கும் எட்டாது.

ஆண்:
ஏற்க்கனவே எனக்குள்ள இருக்குற ஒனக்கு
ஏணி ஏண்டி வக்கிர.
ஏலக்கா தோட்டத்துல
சாணியள்ளி தெளிக்கிற.

வாடிபுள்ள என்னோட
நமக்கு காவல இருக்காரு அய்யனாரு.
நம்ம காதல் ஜெயக்கலேன
அவரு பொய்யனாறு.
பெண்:
கோவிச்சுகிட்டு கொவில விட்டு
காளியாத்த போனாலும்
காளிய காளின்னு தா சொல்லுவாக.

ராமங்கூட சீத போல
ஒங்ககூட நான் வந்தா
ஒடுகாளின்னு சொல்லுவாக.
வேசிமக ன்னு வேதனைய கில்லுவாக.

ஆண்:
காலம்பூர கொஞ்சி பேச
கடிசிவர காஞ்சி ஊத்த
நான் இருக்கேன் உனக்கென்ன கவல.
கடல்போல இருக்கு ஒலகம்
பாரடி ஏ கெணத்து தவள.

இங்க
கல்லு கடவுளடி
மனுசே கல்லடி
ம்ம் ன்னு ஒரு வார்த்த சொல்லுடி
முடியாதுன்னு ஒன்னுமில்லடி.

பெண்:
மாமா
எங்க வீட்டு சேவல சொன்னாகூட
செவரேரி வந்திருக்கும்.
முள் குத்துனாபோல
முத்தங்கள் நெறைய தந்திருக்கும்.

நான் கூண்டு கிளி
என் வாழ்க்க படுகுழி.

கூண்ட கிளி தாண்ட
கொஞ்ச அவகாசம்
குடுங்க மாமா .
வாழ வழியில்லேனாலும்
தைரியமா தற்கொல
செஞ்சுக்கலாம.

ஆண்:
என் இளைய முத்தே
இதய சொத்தே.

நேரம் எடுத்துக்கடி
நிச்சயம் ஒருநா
ஏ மனசு புரியும்.
நீ நேர்ம தவறுனா
சத்தியமா சுடுகாட்டுல
ஏம் பொணம் எரியும்.
 
-----தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்