Posts

Showing posts from April, 2013

உன் வருகைக்காக

Image
என் வளரிளம்பருவம் கரையும் வரை காத்திருக்கிறேன் உன் தெரு முனையில்   நீ கடந்து போகிற சில நொடிக்காக..... ஊசி பாசி வாங்க ஆளில்லாத உன் தெருவில் குழந்தையை காட்டி பிச்சையெடுக்கிறாள் ஒரு குறத்தி... வீட்டு வேலை முடித்து இடுப்பில் இருத்தி தன் குழந்தையை முத்தமிட்டபடியே என்னை கடந்து போகிற வேலைக்காரி மீது பினாயில் வாடை... முத்த கடன் முழுவதையும் திருப்பி தருகிறது குழந்தை சிறிதும் முகம் சுழிக்காமல்.... கூடையை கீழ் இறக்கி மீன்களுக்கு இடையில் கிடந்த மீனவனின் சதையை தூக்கியெறிந்துவிட்டு... எடை போடுகிறாள் ஒரு மீன்காரி.... சாக்கடை குழியிலிருந்து எழும்பி மேல் வந்து.. பழைய சோற்றில் கை நனைக்கிறார் ஒரு ஐயா.. தொட்டு கொள்ள பாதாள சாக்கடை வாசனை... மீசை மழிக்ககூட மிசின் வந்துவிட்ட தொழில்நுட்ப யுகத்தில் "சானை பிடிக்கலையோ சானை" சந்திடுக்குகளில் சத்தமிடுகிறார் ஒரு அண்ணன். மிதிவண்டியை உருட்டியபடி "உப்...போய்....." தொண்டை கிழிய கத்துகிற உப்புக்காரரின் உடலெங்கும் உதிர்ந்தன உப்-பூ. வெறிச்சோடி கிடந்த உன் தெருவில் இங்குமங்குமாய் அலைகிறது...