Posts

Showing posts from March, 2012

நாணல்.

Image
நண்பர்களுக்கு வணக்கம், நமது அமைப்பு நாணல் என்று பெயரை தேர்வு செய்து கொண்டது நாணல் என்பது ஒரு புல் வகை தாவரம். புயல் அடித்தாலும் வளைந்து கொடுத்து தன்னை வளர்த்து கொள்ளும் நாணல் ஒருபோதும் சாய்ந்துவிடாது. வறட்சி வந்து நிலமெல்லாம் வாய்பிளந்து நின்றாலும் நாணல் ஒருபோதும் காய்ந்துவிடாது. முதுகயம் வெள்ளம் வந்து மூழ்கடித்தாலும் நாணல் மூச்சு திணறி இறந்துவிடாது. அழுது அழுது ஆலமரமே பட்டுப்போகும் வெயிலில்கூட நாணல் பூ-பூக்க மறந்துவிடாது. வெட்டி போட்டாலும் முளைக்கும் - வெயில் பாலைவனத்திலும் தழைக்கும் நாணல். நாணல் வேறு யாருமில்லை நாம்தான். நம் கருத்துகளை பகிர்ந்து கொள்ள விவாதிக்க நாணல் என்ற ஒரு குழுவை முகநூலில் (Facebook) தொடங்கியுள்ளோம். நாணல் அமைப்பில் பங்கெடுத்து கொள்ள அல்லது காண இங்கே ஒடுக்கவும்   http://www.facebook.com/ groups/naanal/   ....அந்த குழுவில் நம் அமைப்பில் உள்ளவர்களை தவிர வேறு யாரையும் சேரும்படி பரிந்துரைக்காதீர்கள். சமூக சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே இதில் இணைய வேண்டும் என்பது நாணல் அமைப்பின் வேண்டுகோள். நாணல் அமைப்பின் நாளைய நாட்களை கருத்தில் கொண்டு இந்த கட்டுபாடை விதிக்க வ

அவள் விழிகள்....

Image
தூண்டில் அம்பு பீரங்கி தூப்பாக்கி ஏவுகணை இப்படி குறிவைத்து தாக்கும் குணாதிசயமுடைய கருவிகள் அத்தனையும் அடங்கிய ஆயுத கிடங்கு அவள் விழிகள்.... -- தமிழ்தாசன் --

மரணதண்டனை ?

Image
‎---- மரணதண்டனை ? ---- பலிக்கு பலி வாங்க படுகொலை செய்து ஒரு யுகம் மனம் வருந்தி குணம் திருந்தி சிறைக்குள் சித்தம் வளர்த்து விழித்த மிருகம் அழித்து மீதமுள்ள நாட்களிலேனும் மிதவாதியாக இருக்க விரும்பும் எனக்கு...... விடிந்தால் தூக்கு. --- தமிழ்தாசன் ----

அச்சமென்பதில்லையே

Image
‎---- அச்சமென்பதில்லையே ---- பூகம்பமாய் வந்து பிளந்து கொன்றுவிடுவேன் புயல்மழையாய் வந்து பிழிந்து தின்றுவிடுவேன். புதைகுழிக்குள் உயிரோடு புதைத்திவிடுவேன் மீறினால் மின்னல் இடியுடன் வந்து சிதைத்துவிடுவேன் என்று என்னை மிரட்டும் எந்த பூமியைத்தான் மிதித்து கொண்டிருக்கிறேன். --- தமிழ்தாசன் ---

‎---- அனுமதி -----

Image
‎---- அனுமதி ----- " பக்கத்து ஊரில் நிகழும் பருவக் கால தோழியின் திருமண விழாவுக்கு நான் போய் வரட்டுமா? " வப்பாட்டி வாசம் வைத்திருக்கும் கணவனிடம் சாராயமே சம்சாரமாகிப்போன குடிபோதை தந்தையிடம் ஊரை சுற்றும் உத்யோகமில்லாத சகோதரனிடம் அரைச்சவரனுக்கு வழியின்றி வீட்டில் இருக்கும் அரைகிழவி அக்காவிடம் அடுப்படி சுவருக்குள் அடங்கிகிடக்கும் தாயிடம் அவள் அனுமதி பிச்சை கேட்கும் - இந்த அன்னை தேசத்தில்தான் பெண் சுதந்திரம் பற்றி பேசி கொண்டிருக்கிறோம். ---- தமிழ்தாசன் ----

நான் உன் தோழன்

Image
--- நான் உன் தோழன் ---- உலகில் உள்ளோரெல்லாம் உன் உடன் பிறப்பா? ஏகாதிபத்தியம் என்றால் உனக்கு அருவருப்பா? அக்கிரமம் நிகழும் போதெல்லாம் உக்கிரம் அடைந்தாயா? பழங்குடி சமுதாயத்தின் நிலை கண்டு பலத்த பகுத்தறிவு உண்டாகியதா? சாதனை பல செய்தாலும் நானொரு சாதாரண மனிதன் என்றே நினைத்தாயா? எமதர்மன் வீட்டிற்குள் நுழைந்து சமதர்மம் பேசி வந்தாயா? முகம் தெரியாத போராளிக்காக மூச்சு உடையும்வரை முழங்குவாயா? உன் உயிர் போகும் என்று தெரிந்தும் பின்வாங்க மறுத்தாயா? அடித்தட்டு மக்கள் நலனிற்காக அடிபட்டுச் சாக தயாராக இருந்தாயா? அப்படியென்றால் நானும் நீயும் நைல்நதி நாகரீகம் நடக்கும் காலமிருந்தே நண்பர்கள். -- தமிழ்தாசன் --

எது கடவுள் பக்தி

Image
---- எது கடவுள் பக்தி ? ---- இக்கட்டான நேரங்களின் இறுதியில் இதய பிடிமானம் இழந்து, " இனி இறைவன் பார்த்துகொள்வான் " என்று இருக்கைகள் கூப்பி இருபத்திநாலு மணி நேரமும் இறைவனை இடைவெளியின்றி துதிப்பது அல்ல ஆன்மிகம். தளராமல் போராடி ஒருபோதும் பின்வாங்காமல் ஒருவனாக தனித்து நின்று, முடியாத செயல் ஒன்றை முடித்து, சாதனை நிகழ்த்தி " எல்லாம் இறைவன் செயல் " என்று புன்சிரிப்போடு மனசுக்குள் புலம்புவதுதான் உண்மையான ஆன்மிகம். ---தமிழ்தாசன்---

மனைவி என்றொரு கைதி

Image
--- மனைவி என்றொரு கைதி ---- வெட்டுக்கிளி நிமிர்ந்தால் கூட தலைத்தட்டும் சிறு கூண்டில் பச்சை கிளி படும்பாட்டை கண்டு பச்சாதாபம் அடைந்தேன். உயிர் முடியும்வரை உடன் வாழ விலைகொடுத்து விடுவித்து வீட்டிற்குள் கூட்டிவந்தேன் விதறும் கிளியை. ஒருசேர விரித்தால் இரு சிறகுகளும் நீலவானம் வரை நீண்டுபோகும். காதல் வர காரணம் கிளியின் கிழியாத அந்த அழகிய சிறகுகள்தான். விவஸ்தையும் விசுவாசமும் அறிந்த கிளிக்கு விடுதலை ஒரு அந்நிய கனவு. என் மாட மாளிகைக்குள் மனம்திறந்து அதை பறக்க செய்தேன். இதுவரை கிளி காணாத அதிக அகலமுடைய பெரிய சிறை இது. காலம் தன் காலை சற்று ஆகட்டி வைத்தது. கண்ணுக்கு தென்படாத கலாச்சாரத்தின் கைகள் ரெண்டு என் கழுத்தை நெரிக்க நெரிக்க வாசலைத் தாண்டாதே ! வண்டுகளோடு பேசாதே ! வரையருத்தேன் கிளியின் வசமிருந்த சுதந்திரத்தை... நடுங்கி பயந்து நடந்து கிளி என் அருகில் வந்ததும் அன்பாய் சொன்னேன் "என் கட்டுபாட்டுக்குள் உனக்கு எல்லா சுதந்திரமும் உண்டு" -- தமிழ்தாசன் --

---- காதல் கொள்கை -----

Image
---- காதல் கொள்கை ----- சாவிலும் எனைப் பிரியாத சகியே! சத்தியம் செய் ஒரு சத்தியம் செய்.... எந்த சந்தர்பத்திலும் எனை நீங்காது நிலை காப்பேன் என்றொரு சத்தியம் செய். ஒரு வேளை விதி நம்மை பிரித்தலும் விபத்தில் நான் மரித்தாலும் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பேன். அனாதை என்ற சொல்லை நான் அடித்தொழிப்பேன் என்றொரு சத்தியம் செய் சகியே எனக்கொரு சத்தியம் செய். ---தமிழ்தாசன்---

‎----- கடைசித் தமிழன் இருக்கும்வரை ------

‎----- கடைசித் தமிழன் இருக்கும்வரை ------ திசையெட்டிலும்  திடங்கொண்டு வாழும்  மானம் நீங்கியின்  மறுநொடி சாகும் வீரத்தமிழினம் எங்கள் வீரத்தமிழினம். மண்டியிட்டு பிழைக்காத எமினத்தின் மகிமையை மண்ணிட்டு புதைத்தாலும் மாயது. பிரபஞ்சத்தில் ஒரு பிஞ்சு உயிர் மிஞ்சியிருந்தால் போதுமட எங்கள் போராட்டம் ஓயாது. குண்டுமழைப் பொழியும் குலத்தோடு கூட்டிணைந்து சீதைத் தமிழினத்தை நீ சிதைத்தெரிந்தாலும்... கடைசித் தமிழனின் கரியமிலவாயு தீரும்வரை எம்வர்க்கம் கண்ட வல்லடி கதையை உரக்க சொல்வான். வாடா தமிழா வல்லவன் நீயென்றே விரோதியின் தலையை அறுக்க சொல்வான். மற்றவர் மதிக்கும்படி வரலாற்றில் இறக்க சொல்வான். மறுபடி மறுபடி மறத் தமிழனாய் பிறக்க சொல்வான். --- தமிழ்தாசன் ---  

--- கன்னியின் காதல் வலி ---

‎--- கன்னியின் காதல் வலி ---  எனக்கு கோவில் கட்டி கொண்டாட  எண்ணிய உன்னை  சாரயாக்கடை வாசலில்  சந்திக்க நேருகிறது. நீ நாற்பதை கடந்த செய்தி  நரைத்த முடி நவில்கிறது. என்னை நீ மறக்கமுடியாமல் திணறுவதை  மதுவருந்திய உன்  முக சுருக்கங்கள்  மடை திறக்கிறது. ஒரு அட்டைப்பூச்சியாக  நம் பருவ காதல்  உன் உயிர் உறிஞ்சுவதை  உணர முடிகிறது. செழித்த தாடி சொல்கிறது  உன் ஒவ்வொரு செல்களிலும்  என் நினைவுகள்  செரிக்காமல் இருப்பதை. உன் அழுக்கு சட்டை  அடித்து சொல்கிறது  என் திருமனத்திற்கு பின்  உன் சுப வாழ்க்கை  சுழலாமல்  நொண்டியடித்து கொண்டிருப்பதை... விழிநீர்  வழித்தடங்கள்  உப்பு படிந்த  அந்த வெள்ளை கோடுகள்  உன் கண்ணீர் பஞ்ச  கதை பேசுகிறது. பட்டாம்பூச்சிப் போல்  உன் இட மார்பில்  படுத்திருக்கும்  பச்சைகுத்திய என் பெயர்  நீ திருமணம் செய்து கொள்ளாததை  நிச்சியமாக நிரூபித்து கொள்கிறது. உன் பிரிவுக்கு பின்  பிளக்காத பாறையாகிப்போன  என் இதயம்  இப்போது  பாதரச கண்ணாடியாக  உடைந்து நொறுங்குகிறது... சருகாக கண்களிலிருந்து  சறுக்கி கண்ணீர்  விழுகிறது. ஏமாற்றுக்காரி என்ற பட்டம்  எனக்கு நீ தந்த  காதல் கௌரவம். உன் தற்கொலையை கூட 

---- தித்திக்கும் ஞாபகம் ---

---- தித்திக்கும் ஞாபகம் ---  இன்சுலின் சுரப்பிகளை  இயங்கவிடாமல்  இம்சிக்கும் உன்  இளைய கால  இனிய நினைவுகளின்  தித்திப்பை  சந்தர்ப்பவாத மருத்துவர்  சக்கரை வியாதி என்கிறார். ---- தமிழ்தாசன் ----  

சாதி மதமொழிந்திட

Image
சாதி மதமொழிந்திட  சட்ட மெய்திட வேண்டும்.  நீதிமான்கள் பகுத்தறிவில்  திட்டம் செய்திட வேண்டும் - மக்கள்  ஏசிப் பழித்த வேசிமகன்  ஆட்சி அமைத்திட வேண்டும் - எங்கள்  பிரிவினை யகற்ற அனாதையொருவள்  அரியணை ஏறிட வேண்டும்.  --- தமிழ்தாசன் ---

------ காணவில்லை ------

Image
------ காணவில்லை ------ பெயர் : மனிதநேயம் அப்பாவின் பெயர் : (மறைந்த) அன்பு அம்மாவின் பெயர் : கண்ணீர் நிறம் : தூசிகள் படிந்த தூய வெள்ளை. உயரம் : சுதந்திரத்திற்கு பிறகு வளரவில்லை. தொலையும் போது ரத்தக்கறை படிந்த சட்டை அணிந்திருந்தார். கண்டுபிடித்து தருவோருக்கு ஊழல் பணத்தில் இருந்து ஊதியமும் வேகவைத்த வெள்ளை புறா மாமிசமும் வெகுமதியாக தரப்படும். முகவரி : கதவு எண் AK47, அணுஆயுத கூடம், பீரங்கி சாலை, ரௌடிகள் நகர், அகிச்மை இந்தியா. ------------------------------ ------------------------------ ---- இவன் : இலங்கை இனப்படுகொலை இயற்க்கை மரணமென்றே சகித்துகொண்ட ஒரு இந்தியத் தமிழன். ---தமிழ்தாசன்---

தோழியின் தோழன்

Image
------ தோழியின் தோழன் ----- அன்பில் என் அன்னையை தாண்டி விடுவாயோ என்கிற அச்சம் வருகிறபோது நட்பைத் தாண்டி விடாமல் பயணிக்கிறது நம் சிநேகம்.... காதலில் விழுந்துவிடாமல் கவனமாக இருக்கும் கவலை நமக்கில்லை காரணம் என் தாயை நீயும் உன் தாயை நானும் அம்மா என்று அழைத்து கொள்கிறோம். உனக்கு வரும் காதல் கடிதங்களில் எழுத்து பிழைகளை எடுத்துக் காட்டி நகைத்துச் சிரிக்கும் நண்பன் நான். நாம் இருவரும் அருகே அமர்ந்து பேசிக்கொள்வதை காதல் என்று உறுதி செய்துவிடுகிறது உலகம். பார்வையற்ற உலகம் மீது பரிதாபம் கொள்கிறது பக்குவமடைந்திருக்கும் நம் நட்பு. என் விரல்களைப் பிடித்து ஆறுதல் சொல்லும் உன் விழிகளைப் பார்க்கும் பொழுதுதான் வீட்டில் எனக்கு சகோதரி இல்லையென்ற சங்கடம் வலுக்கிறது. உன் முகத்தைத் தாண்டதாவாறு என் பார்வைக்கு வேலி அமைத்திருக்கிறது நம் நட்பு.... உன் உறவுகளிடம் நம் உறவை ஒளித்து வைக்க வேண்டிய அவசியம் உனக்கில்லை. அளவுகடந்த அன்பு என்ற பெயரில் போலியாக அடைகாக்கும் கோழியாக நம் நட்பு நடந்து கொண்டதில்லை. என் சுதந்திரம் உன்னிடமோ உன் சுதந்திரம் என்னிடமோ இல்ல

செய்கை மொழி

அம்மாவின் வேண்டுதலையும் அப்பாவின் கனவையும் வேரறுத்த தேர்வுகளின் தோல்வியில் தேம்பி அழும் மனதுக்கு ஆறுதல் சொல்லி அடுத்த தேர்வுக்கு ஆயுத்தமாகிறது அறிவு. காதல் கடிதம் மறுத்து இதயத்தில் நான் இல்லை என்பதை செய்கை மொழியில் நீ செப்புகிற போது மட்டும்தான் செத்துவிட தோன்றுகிறது. ---தமிழ்தாசன்---

---- பாசம் பழைய கதை ---

Image
---- பாசம் பழைய கதை --- கிராமத்தின் ஒரு மூலையில் கீற்று குடிசையின் கீழே கிழிந்த சேலைக் கட்டி வாழும் கிழட்டு தாய்க்கு கூழோ கஞ்சியோ குடித்து வாழ மாதமாதம் பணம் அனுப்பி வைக்கும் முதல் தினத்தில்..... பாடை கட்டும் பருவம் பக்கத்தில் வந்துவிட்டதென ஆசுவாசம் அடைகிறது மனசு.. ஒரு நாள்..... அலுவலக கோப்புகளை அலசும் வேலையில் அதன் இடுக்கிலிருந்து அழுக்கு படிந்த கருப்பு வெள்ளை புகைப்படமொன்று அவிழ்ந்து விழுகிறது. காலமான கரப்பான்பூச்சியை கையில் எடுக்கும் முனைப்பில் அருவருப்போடு அப்புகைப்படத்தை விரல்களின் நுனியில் பற்றி எடுத்தேன். இந்திர தேசத்தின் இளவரசிப் போல அங்கமெல்லாம் தங்கமணிந்து மங்காத பட்டுடுத்தி மந்தகாச புன்னகையில் மருமகளாக நிற்கும் என் தாயின் திருமண புகைப்படம் அது. அவள் அணிந்த தங்கமெல்லாம் அடகு கடைக்கு வந்தால்தான் நான் அமெரிக்காவிற்கு....... தகப்பன் போனபின்னே என் தலைவலி போக்க தாலி அடகு வைத்த தாயின் ஞாபகம் மறுபடியும் மண்டை வலிக்கும் போது மட்டும்தான்..... --- தமிழ்தாசன் ---

--- ஆன்மீக தாதாக்கள் ---

Image
‎--- ஆன்மீக தாதாக்கள் --- சாமி கண்ணை குத்தும். தெரியாமல் செய்தாலும் தெய்வ குத்தம். ஆட்டுயிறைச்சி கேட்கும் அசைவ காவல் சாமிகள். குடிநீரற்ற குக்கிராமத்தில் அம்மனுக்கு பாலாபிசேகம் . எண்ணெய் கொப்பரையில் வாட்டும் எமன். பாபர் மசூதி இடிப்பு ஆண்தாகம் தீர்பதற்கென்றே ஆன்மிகம். பட்டாடை உடுத்திய மரத்திற்கு அருகில் உண்டியல். அப்பப்பா.... இந்த சாமிகளுக்கு சாத்தான்கள் எவ்வளவோ பரவாயில்லைப் போல... --- தமிழ்தான் ---

---- இ.பி.கோ ----

Image
‎---- இ.பி.கோ ---- உண்மைகளை உள்ளே நுழையவிடாமல் தடுத்த நிறுத்திய கதவுகளை கைது செய்தது இந்திய சட்டம். அப்பாவி கதவை அடித்து உடைத்த பிறகுதான் புலப்பட்டது. கதவை அடைத்த கைகளின் முகங்கள். நிரபராதிகளையும் நிராயுதபாணிகளையும் தண்டிப்பது நீதி தேவதைக்கு புதிதல்ல... --- தமிழ்தாசன் ---

---- பட்டம்பெற்ற பண்புகள் -----

Image
‎---- பட்டம்பெற்ற பண்புகள் ----- பட்டணத்தில் இறங்கி பலசரக்கு கடை நடத்தும் பட்டதாரியிடம் பழைய நண்பனின் முகவரியை விசாரித்தேன். "தெரியாது" என்று அவர் முகம் காட்டாமல் முனங்கி சொல்கிறபோது விலாசம் கேட்டால் விரல்பிடித்து வீடுவரை விட்டுவரும் பேச்சு வராத பெட்டிக்கடை கிழவியின் ஞாபகம் வருகிறது. --- தமிழ்தாசன் ---

--------- பசி ---------

Image
‎--------- பசி --------- காற்றை கட்டிபிடித்து கொண்டு பிணவாடை நாசிக்குள் பிரவேசிக்கிறது. குழுக்கள் அமைத்து புழுக்கள் சதைகளை அரிக்க ஆங்காங்கே எலும்புகள் எட்டிபார்கிறது. மூக்கை மூடி மூன்று நாட்கள் கடந்துவிடுகிறது மனிதநேயம். காட்சிபிழைப் போல இன்று எதோ ஓர் மாற்றம். ஆம் அந்த பிணத்தின் அருகே அனாதையாக கிடந்த திருவோடு காணவில்லை. ஒன்று.... பிற பிச்சைக்காரனால் திருடபட்டிருக்கும். இல்லையெனில் பிள்ளையால் அலட்சியபடுத்தபட்ட பிதாக்களுக்கு அவசியம் ஏற்பட்டிருக்கும். ---தமிழ்தாசன்---