நாணல்.


நண்பர்களுக்கு வணக்கம்,
நமது அமைப்பு நாணல் என்று பெயரை தேர்வு செய்து கொண்டது
நாணல் என்பது ஒரு புல் வகை தாவரம்.

புயல் அடித்தாலும் வளைந்து கொடுத்து
தன்னை வளர்த்து கொள்ளும்
நாணல் ஒருபோதும் சாய்ந்துவிடாது.
வறட்சி வந்து நிலமெல்லாம்
வாய்பிளந்து நின்றாலும்
நாணல் ஒருபோதும் காய்ந்துவிடாது.

முதுகயம் வெள்ளம் வந்து
மூழ்கடித்தாலும் நாணல்
மூச்சு திணறி இறந்துவிடாது.
அழுது அழுது ஆலமரமே
பட்டுப்போகும் வெயிலில்கூட
நாணல் பூ-பூக்க மறந்துவிடாது.
வெட்டி போட்டாலும் முளைக்கும் -
வெயில் பாலைவனத்திலும் தழைக்கும்
நாணல்.
நாணல் வேறு யாருமில்லை நாம்தான்.
நம் கருத்துகளை பகிர்ந்து கொள்ள விவாதிக்க நாணல் என்ற ஒரு குழுவை முகநூலில் (Facebook) தொடங்கியுள்ளோம். நாணல் அமைப்பில் பங்கெடுத்து கொள்ள அல்லது காண இங்கே ஒடுக்கவும்  http://www.facebook.com/groups/naanal/  ....அந்த குழுவில் நம் அமைப்பில் உள்ளவர்களை தவிர வேறு யாரையும் சேரும்படி பரிந்துரைக்காதீர்கள். சமூக சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே இதில் இணைய வேண்டும் என்பது நாணல் அமைப்பின் வேண்டுகோள். நாணல் அமைப்பின் நாளைய நாட்களை கருத்தில் கொண்டு இந்த கட்டுபாடை விதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நம் விவாதிக்கும் விசயங்கள் எல்லாம் ரகசியம் காக்கும் பொருட்டும் இது முடிவு செய்யப்பட்டது. அதில் நம் நண்பர்கள் பங்கெடுத்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?