‎---- அனுமதி -----


‎---- அனுமதி -----

" பக்கத்து ஊரில் நிகழும்
பருவக் கால தோழியின்
திருமண விழாவுக்கு
நான் போய் வரட்டுமா? "

வப்பாட்டி வாசம்
வைத்திருக்கும் கணவனிடம்

சாராயமே சம்சாரமாகிப்போன
குடிபோதை தந்தையிடம்

ஊரை சுற்றும்
உத்யோகமில்லாத சகோதரனிடம்

அரைச்சவரனுக்கு வழியின்றி
வீட்டில் இருக்கும்
அரைகிழவி அக்காவிடம்

அடுப்படி சுவருக்குள்
அடங்கிகிடக்கும் தாயிடம்

அவள்
அனுமதி பிச்சை கேட்கும் - இந்த
அன்னை தேசத்தில்தான்
பெண் சுதந்திரம் பற்றி
பேசி கொண்டிருக்கிறோம்.

---- தமிழ்தாசன் ----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?