---- பட்டம்பெற்ற பண்புகள் -----


‎---- பட்டம்பெற்ற பண்புகள் -----

பட்டணத்தில் இறங்கி
பலசரக்கு கடை நடத்தும்
பட்டதாரியிடம்
பழைய நண்பனின்
முகவரியை விசாரித்தேன்.

"தெரியாது" என்று
அவர்
முகம் காட்டாமல்
முனங்கி சொல்கிறபோது

விலாசம் கேட்டால்
விரல்பிடித்து
வீடுவரை
விட்டுவரும்
பேச்சு வராத
பெட்டிக்கடை கிழவியின்
ஞாபகம் வருகிறது.

--- தமிழ்தாசன் ---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?