Posts

Showing posts from September, 2012

நண்பா ஒனக்கு நெனவிருக்கா ?

----- நண்பா ஒனக்கு நெனவிருக்கா ? ------ நெடுஞ்சாலையில நொறுங்கி கிடந்த கண்ணாடி சில்லு பொருக்கி வயிர வியாபாரம் செஞ்சு வட்டமிட்டு திரிஞ்ச வயசுனக்கு நெனவிருக்கா ? கருப்பானசாமி அரிவாளெடுத்து கருவேல மர கொப்புடச்சு செதுக்கி, கூர்தீட்டி நேர்கோடாக கட்டாந்தரையில கோடு கிழிச்சு கிட்டி - யாடியது ஒனக்கு நெனவிருக்கா ? வாடகைக்கு ஒரு சைக்கிளெடுத்து மிதிகட்டைய ஒன்னா சேந்து மிதிச்சு மீன் பிடிக்க போன மேட்டு கண்மாய் ஒனக்கு நெனவிருக்கா ? மின்சாரம் இல்லா இருட்டுல பெண்களோடு தெருல ஒளிஞ்சுபிடிச்சு வெளயாடியது ஒன்னாவது ஒனக்கு நெனவிருக்கா ? கையில கடிகரம் ரயிலுன்னு சின்னதா கட்டிவிட்ட ஜவ்வு மிட்டாய் தாத்தாவையும் சிஞ்சா தட்டும் பொம்மையையும் கொஞ்சமாவதுனக்கு நெனவிருக்கா ? அழகா விழுதுல ஊஞ்சலாடி அமெரிக்கா போய்வந்த ஆலமரமுனக்கு நெனவிருக்கா ? நாமளும் சாகத்தா போறோம்முன்னு தெரியாம நல்லகண்ணு சாவு ஊர்வலத்தில் தப்பு இசைக்கு தப்பு தப்பா ஆடுனது அய்யோ ஒனக்கு நெனவிருக்கா ? பொக்கைவாய் பெருசுக பொழுதுக்கும் சிரிக்கும் அர்த்தம் புரியாம கரகாட்டம் வேணாமுன்னு ராட்டினம் ஏறி சுத்துன ராத்திரி

பெண்ணியம்

Image
---- பெண்ணியம் ---- கருவேல காட்டு பொந்துக்குள் ஈன்ற ஐந்து குட்டிகளில் மூன்று காணவில்லை. எஞ்சியிருக்கும் இரண்டு என்ன பாலினம் என்பது உங்களுக்கு தெரியும். பெண் நாய் குட்டியை பிரியத்தோடு எடுத்து வளர்க்கும் பெரிய மனசு எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும்? கள்ளி பால் கொடுக்கும் சிறுபுத்தி நாய்களுக்கு இருப்பதில்லை. --- தமிழ்தாசன்----

இந்திய அரசுக்கு

Image
-----இந்திய அரசுக்கு---- தமிழர் ரத்த வெள்ளத்தில் தயாரித்து தரப்படும் மின்விநியோகம் எதற்கு ? கூடங்குளத்து குடிசைகள் எரிந்தே வெளிச்சமெனில் அதுவும் இருட்டுதான் எமக்கு... தேசிய தேகத்தின் கீழே இருப்பதால் நான் என்ன மிதியடியா ? காந்தியம் ரத்தம் ஏந்திய நாட்டில் மீண்டும் தடியடியா? நீ உருவி எறிய இது என்ன பாஞ்சாலி புடவையா ? தீ கருவி பேனா பிடித்த இதுயெம் பாரதி மண்ணையா.. பாராளமன்ற அருகில் அணுமின் நிலையம் ஒன்றை அனுமதிப்பாயோ? பாமர மக்கள் குரலை பாசிசமென்றும் வேசமென்றும் அவமதிப்பாயோ? ஈர நெஞ்சத்தில் கழிவு பரப்பி சகதியாக்குவாயோ? ஈழம் போல இங்கும் என்னை அகதியாக்குவாயோ? முடிந்தவரை தன்மானத்தோடு விளங்குவோம். இடிந்தகரை இலங்கையல்ல முழங்குவோம். இனி பேசியும் நீ கேட்க்க மாட்டையோ? தனி தேசியம் எனை கேட்க்க வைப்பாயோ? --- தமிழ்தாசன்----  

என்ன செய்ய?

Image
------ என்ன செய்ய?------ யாரவள் ? எனைத்தான் பார்க்கிறதா  அவள் பார்வைகள் ? எனைப்பார்த்தபடி முகமெங்கும் வழிந்தோடும் அவள் வெள்ளை சிரிப்புக்கு பதிலளிக்க என்னிடம் பாவனைகள் இல்லையே என்ன செய்ய.....? அது அவனா? அவளா? பாலினம் கண்டறிய பரீட்சை தேவையா இக்கணம்? பல யுகமாய் பாழடைந்த என் மனக்கூரையில் ஒரு நொடியில் ஒட்டடை அடித்து சுத்தம் செய்கிறாளே சூத்திரம் என்ன? என் முகம் நோக்கி சிரித்து கொண்டே இருக்கிறாளே ! சிறுக்கி என்ன வேண்டும் அவளுக்கு நான் என்ன கொடுப்பது.... ஒன்றும் புரியவில்லை எனக்கு. கையில் முத்தம் பதித்து காற்றில் அனுப்பி அனந்த பொலிவு அடைந்திருக்கும் அவள் முகத்தை கிள்ளலமா? அதனால் அருகில் இருக்கும் அவள் அப்பா ஆத்திரபட்டால் என்ன செய்ய? கூப்பிடுகிறாளா? கும்பிடுகிறாளா? எதோ கதை சொல்கிறாளே கையசைத்து? வார்த்தைகள் ஒளித்து மௌன பரிவர்த்தனையில் ஒரு காதலை என்னுள் கடத்துகிறாளே ! கழுத்தை நெரித்தும் சிரிக்கிறதே ! அவள் கையில் இருக்கும் கரடி பொம்மை.... கைக்குட்டையே பாரமென கருதும் என் கைகளுக்கு ஏந்தி அள்ளி கொள்ளும் ஆசையை ஏன் பரப்புகிறாள்? விலைமதிப்பற்ற என் நேரத்தை கிலுகிலுப்பையாக்கி அவள் கைகளில் கொடுத்தது யார

தோழர் செங்கொடி

Image
----- தோழர் செங்கொடி ------- நாங்கள்  இயற்றி போராட்டத்தின்  இயலாமையை புரியவைத்தவள்  எங்கடி ? அவளெங்கள் பிரபஞ்சத்தில் எரியும் அணையா கங்கடி. தமிழுயிர் ஊற்றி விளக்கேற்றிய செங்கொடி. நிரபராதி தமிழர்க்கு நீதி கேட்க வந்த எம்பாரதி நெருப்பே ! அகராதி பக்கங்கள் அச்சிட்டதுன்னை தமிழ்ரத்த கொதிப்பே ! உறக்கமற்ற எமனோடு மல்லுக்கு போயிருந்தால் உறுதியாக ஒருநாளில் விடிவும் பிறந்திருக்கும் முடிவு தெரிஞ்சிருக்கும். இரக்கமற்ற விலங்கு சொல்லுக்கு காத்திருந்தால எங்க வயித்திலடி விழுந்திருச்சு - ஒரு தொப்புள் கொடி கருகிருச்சு. காஞ்சிபுர தறிகலேல்லாம் தறிகெட்டு நிற்பதென்ன ? காமாட்சி வடிவிலோருத்தீ எரியூட்ட பட்டதென்ன? தூக்கு கயிறை அறுத்தெறிய நினக்கு நல்ல நிழல் தேக்கு மர சாம்பல் வேண்டுமோ ? தமிழ்த்தாயே ! மாய்க்கும் உயிரை மறுமுறை பிரசவிக்க எமக்கொரு கருவறை தாராயோ ? ---- தமிழ்தாசன்---- 28.08.2012 (தோழர் செங்கொடி நினைவு நாள் இன்று )

ஊனமுற்றோகளானோம்

Image
------ ஊனமுற்றோகளானோம் ------ ஒற்றைக்காலில் நொண்டியடிக்கும் - எந்தமிழ்  பற்றை கொண்டுரைக்கும்  தீகக்கும் பேனா பிடித்து  தீட்டுகிறேன் ஒரு கவிதை.. பார்வையற்ற தோழனே... எமக்கோ கடவுள் என்பவன் கற்பனை உருவம் உமக்கோ கற்பனையெல்லாம் கடவுளின் வடிவம். நாவிழந்த நண்பனே.... எம் உதட்டு கல்லறைக்குள் பிணமானதட உண்மை - மொழியுனக்கோர் இளமொட்டு காகித பூக்களான பொம்மை. செவிதிறனற்ற சிநேகிதனே.... கொச்சை வார்த்தைகள் குடியேறிய கருங்குகையப்பா என் காது. பச்சிளம் குழந்தையின் முக புன்னகையப்பா உன் காது. உண்ண கைகள் இரண்டில்லை. - காலால் வண்ண ஓவியம் வரைந்தீர்கள். மண்ணில் உலவ காலில்லை - ஊன்றி சின்ன கையால் நிமிர்ந்தீர்கள். முன்மொழிய வழியில்லை - செயலில் மின்னல் போல் இருந்தீர்கள். கண் தெரியும் நிலையில்லை - ஊதும் கண்ணன் குழல் இசைதீர்கள். கேட்கும் செவி திறனில்லை - என்றும் தோற்கா மனமுடன் இருந்தீர்கள். தேகமதிலொரு உறுப்பில்லை - வியர்வை தெறிக்க தெறிக்க உழைத்தீர்கள். விழுந்து விழுந்து மறுபடி எழுந்து எழுந்து நீங்கள் மாற்றுதிறனாளியானீர்கள். விழுந்து விழுந்து உள்பிடிமானம் இழந்து இழந்து நாங்கள் ஊனமுற்றோர்களானோம்..... --- தமிழ்தாசன்---

அஞ்சலுக்கு ஆயிசு கெட்டி

Image
-----அஞ்சலுக்கு ஆயிசு கெட்டி---- கடிதத்தின் இறுதி மூச்சை  இறுக்கி பிடித்திருக்கும்  இலக்கிய பெருமக்களே.. பகத்சிங் கொணர்ந்த பாரத பற்றே... கொஞ்சல் மொழி தடவி அஞ்சல் துறையின் ஆயுள் வளர்த்த கடந்த நூற்றாண்டு காதலர்களே... தபால் தாத்த இழவுக்கு காத்திருக்கும் இணைய தளங்களே... இளைய தலைகளே.... கவலை வேண்டாம் கண்ணீர் துடைத்து கொள்ளுங்கள்... கடிதத்திற்கு சாவு இல்லை, அஞ்சலுக்கு ஆயிசு கெட்டி இலங்கை கடற்படையின் கடைசி தோட்டா காலியாகும் வரை தமிழக அரசு கடிதத்தை கைவிடாது... பாரத அரசு நம் கடிதங்களை படிப்பதுமில்லை. பரிசீலிப்பது போல நடிப்பதுமில்லை... விவசாயிகள் விஷமருந்தி விழிகளெல்லாம் வரண்டு சிறுநீரக பை சுருண்டு தொண்டைக்கும் நாவுக்கும் மத்தியில் கடைசி துளி எச்சில் உலர்ந்து நாம் மடியும் வரை குடிநீர் விண்ணப்பம் கேட்டு குனிந்து நிற்கும் தமிழ் கடிதங்கள்... கருணையுள்ள இலங்கை கடற்படையோ... மீன்களை மீண்டும் கடலில் விட்டுவிடுகிறது... ஏனோ சிகரெட்டு கங்குகளால் மீனவர் உடலை சுட்டுவிடுகிறது.. உடன்பிறந்தவன் உதைபடுகிறான் உன்னிடம் எஞ்சியிருக்கும் கூறிய பேனா முனையால் அவன் குதிங்காலை குத்தி கிழித்திடாமல் கும்பிடு போட்டு எழுத

ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்

Image
மார்வாடி அடகில் பண்டிகை கொண்டாடும் ஏழை எளியோர்க்கும் ஏர்வாடியில் தவழும் குழந்தைகளாய் திகழும் மூளை சிறியோர்க்கும் கறவை மாடுகளாய் அரபு நாடுகளில் உழைக்கும் சுமைதாங்கிகளுக்கும் உறவை இன்புற செழிக்க தன் இரவை பகலை அர்பணித்தோர்க்கும். குண்டுவெடிப்புகளை கண்டுதுடித்து உயிர்வழிய வருந்திட்டவர்களுக்கும் துண்டுதுண்டாக சிதறிய தேகத்தில் மனிதநேய மருந்திட்டவருக்கும் எல்லா மதமும் என் மதமெனு கருதும் குல்லா அணிந்தவருக்கும் சொல்லா துயரம் அனுபவித்தும் உலகை வெல்ல துணிந்தவருக்கும் சிறுபான்மை பெரும்பான்மை என சிறுபுத்தியற்ற மனப்பான்மை உடையவர்க்கும் எது ஆண்மை என்றறியாது மக்களை கொல்லும் தீவிரவான்மைகளுக்கும் ஒருதாய் முந்தியில் யாம் பிறந்தோமென எண்ணி சிந்தித்த மைந்தர்களுக்கும் இந்திய உயிர்கள் சிதறியபோது பாகிஸ்தானில் சிந்திய கண்ணீர்களுக்கும் என் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள் --- தமிழ்தாசன்----  

இந்திய தமிழர்களுக்கு

Image
---- இந்திய தமிழர்களுக்கு ---- திறமிக்க வல்லோர்கள்  ஒருமித்து வாழ்ந்த இனம்... கிமு முதல் ஈமு கோழி வரை ஏய்க்கபடுகிறது.. விழித்தெழும் விசையுடைய மறத்தமிழ் மரபுடைய எம் இனம் மந்தை ஆடுகளாய் சந்தையில் மேய்க்கபடுகிறது... மூஞ்சி வரை காஞ்சிவர பட்டுடுத்தினோம் சாஞ்சுவரும் பண்பாடு நிலைநிறுத்தினோம் இளதேகம் இன்று மேலாடையின்றி ஆடுகிறது... முக்தியில் நவகிரகம் கண்டு அறிவால் மெச்சி கத்தி அய்யனார் கையில் அரிவாள் வச்சு - இன்று புத்திகெட்டு போலிச்சாமிகள் பின் ஓடுகிறது. கையசையில் யாவரும் புரிதல் உண்டாக்கிட மெய்-உயிர் எழுதி மொழி கொண்டாக்கிய அழகுதமிழ் தவிர்த்து ஆங்கிலம் பேசுகிறது... ஈராயிரமாண்டு புகழ் வீரம் அறிவு செழித்து யாராயினும் தழுவி வாவென்று அழைத்து வாழ்ந்தயினம் அடையாளம் கொள்ள கூசுகிறது. கோழையென்பது அடுத்தவன் கால் பிடிப்பது வேலையொன்று அவனுக்கு வாள் பிடிப்பது அக்காளை இன்று பெண்சேலைக்கு அஞ்சுகிறது.. இதுவே நெறியென அகநானூறு கொடுத்தோம் எது காதலென அறியாமல் - கண்டபடி பொதுவிடங்களில் கட்டிஉருண்டு கொஞ்சுகிறது... யாவுயிரும் பசியாற மாவு கோலமிட்டு சாவு தவிர்த்த உழவு செழித்த நாடு பீசா பர்கர் தின்று உயிர் வாழுகிறது.

அவள் அப்படித்தான்

Image
----அவள் அப்படித்தான்------ கைநிறைய பூக்களை ஏந்தி - நீ கால் பதித்த பாதையில் காதலோடு வந்தேன். நான் நீட்டிய ரோஜாக்களை நிராகரித்தாய். நான் காட்டிய காதலை கரு அறுத்தாய். என் நம்பிக்கைகளை நீ பிடுங்கி எறிந்த போதும் உன்னை பின்தொடரும் பிடிவாதம் குறைந்தபாடில்லை. காதலோடு உன் வாசல் வந்து நின்றபோதெல்லாம் சட்டென்று கதவடைத்தாய். காலம் போனால் காற்றோடு நானும் கரைந்திடுவேன் என்று கணக்கிட்டாய். புயலுக்கு சாய்ந்துவிடாத நாணல் புதர்களைப் போல நாட்கணக்கில் நானும் காத்திருந்தேன். இரக்கபட்டையோ என்னவோ இறுதியில் கண்களை திறந்தாய் மெல்ல மெல்ல ஜன்னலை திறந்தாய் காதலோடு கதவையும் திறந்தாய். ஊசி கொண்டு கிணறு வெட்டிய உற்சாகம் எனக்குள். என் தேவைகளை தேடி வந்து தீர்க்கிற தேவதையாக... என் நிராசைகளை நிவர்த்தி செய்கிற நிலாவாக..... நிரந்திரமாய் என்னோடு நின்றுவிட்டாய். என் அகராதியில் வாழ்க்கை என்பதன் ஒரே அர்த்தம் நீ - என்று நிரப்பட்டுவிட்டது. நாட்கள் உருண்டோட நாடகம் அரங்கேற... குடும்பத்தின் நலம் குறித்து ஆலோசித்தாள். அவள் வீட்டு வேப்பமரம் எப்பொழுது போதிமரமாக வேசம் போட்டதோ! ஞாயிறு பிறக்காத அவளுக்குள் எப்படி ஞானம் பிறந்ததோ! தெரி

ஆரம்பம் காலனி ஆதிக்கம்

Image
-----ஆரம்பம் காலனி ஆதிக்கம் ----- அனுமதியின்றி பிரவேசித்து அமைதி பரப்புவதாக சொல்லி அடிபணிந்த நாடகளை எல்லாம் அணுஆயத கூடமாக ஆக்கி இருக்கிறது அமெரிக்க.. ஊரானுக்கு ஒரு சட்டம் போட்டது ஈரானுக்கு ஒரு சட்டம் போட்டது. கதவின் ரகசிய துளை வழியாக அடுத்த வீட்டு அரசல் புரசல்களை கண்டு அலுத்து போனது அமெரிக்க... இனி அந்த பரப்பிலாவது அணுஆயத தாக்குதல் அரங்கேறாமல் இருக்கட்டும். சுரண்டலும் சுதந்திரப் போரும் பட்டினிச் சாவும் நிகழாத ஒரு நிலப்பகுதியாகட்டும். பரிணாம வளர்ச்சி வாய்ப்பற்று போகட்டும். ப்ரோட்டோசொவான், அமீபா உயிர்பிக்காத உருண்டை பகுதியாகவே அது உருளட்டும். வெறும் சூரிய கதிர்கள் மட்டுமே சுருண்டு படுத்திருக்கும் ஒரு சுடுகாடாக அது சுழலட்டும். ஆராய்ச்சி என்கிற பெயரில் ஆட்களை அடிமை படுத்தவும் வளர்ச்சி என்கிற பெயரில் மரங்களை வெட்டி சாய்க்கவும் வணிகம் என்கிற பெயரில் வளங்களை வளைத்து போடவும் கூறுகெட்ட இந்த கூட்டுசக்திகளால் கூடும் என்பதால்... அது வழுக்கை தலையின் வடிவமாவே விளங்கட்டும். எதிர் வீட்டு குளியலறையை திமிரோடு ஏட்டிப் பார்க்கிறது ஏகாதிபத்திய நாடுகள். பாவம் பசிக்கு பால் குடித்த குட்டி பூனைகளை குற்றவாள

நண்பன் என்றொரு உலகம்

Image
-----நண்பன் என்றொரு உலகம் ----  சுதந்திரமில்லா சூழ்நிலையில்  துப்பாக்கி ஏந்திடலாமென்று  துணிந்த பிறகு  அறவழியை எனக்கு அறிமுகபடுத்திய அண்ணல் காந்தி நீ. நெருக்கடி நேரங்களில் அடிக்கடி என் அமைதிப் போராட்டமெல்லாம் அவமதிக்கபடுகிறபோது நேர்மையற்றவரின் தோலை உரி நேருக்கு நேர் எதிர்ப்பதே சரி என்று நேசிப்பை நீட்டிய நேதாஜி நீ காதல் என்னை பிரசவித்து அனாதை இல்லத்தின் அருகேயுள்ள குப்பை தொட்டியில் கொட்டிவிட்டு போனபோது அள்ளி என்னை அரவைனைத்து நெஞ்சோடு ஒட்டிக்கொண்ட அன்னை தெரசா நீ... கொடுக்க ஒன்றுமில்லை உன்னிடம் எனினும் உன் கடைசி கந்தல் சட்டைவரை எனக்கு காணிக்கை தந்தே ஏழையாகிப் போன பாரிவள்ளல் நீ. எனக்கு விருந்தளித்த விஷகோப்பையை பருகி என் சமூகத்தை வளர்த்தெடுத்த சாக்ரட்டீஸ் நீ. வேண்டாம் இவன் வேற்று மதத்தவன் என தீண்டாமை வளர்த்த காண்டமிருகங்களை புறம்தள்ளி எனக்கு பூணூல் அணிவித்த புது பாரதி நீ. எங்கோ பிறந்து என்னுடன் இணைந்து உனக்கு சம்மந்தமில்லாத என் தேச விடுதலைக்கு உயிர் நீத்த உன்னத சேகுவேரா நீ. பாலைவன மணல்வெளிகளில் போதிமரத்தை நான் தேடியலைந்தபோது பாலிய சிநேகிதனாய் கிடைத்த புத்தன் நீ. என் கல்லடியை வாங்கிகொண்டு

விலைமாது

Image
.....விலைமாது..... நானும் ஒரு வாழைப்பழத் தோல் மாதிரிதான்  என்னால் வழுக்கி விழுந்தவர்களைவிட  என்னை தூக்கி எறிந்தவர்கள்தான்  அதிகம்.... --- தமிழ்தாசன்---

ஒருவரி கவிதை

Image
------- ஒருவரி கவிதை ------ கண்மை - ஒற்றை விரல் ஓவியம். கண்கள் - சிப்பிக்குள் கருப்பு முத்து. முத்தம் - சிவப்பு சாலையில் சின்ன சின்ன விபத்து. சிரிப்பு - வேதனைக்கு எதிரான வெள்ளை கொடி போராட்டம். காதலி - நினைவு குழந்தைக்கு நிலாச் சோறு ஊட்டுகிறவள். காதல் - தங்க சங்கிலியில் தொங்குகிற சைனைடு குப்பி. தோல்வி - இலைகளற்ற போதிமரம். வெற்றி - தோல்விகளின் தொழிற்ச்சாலை. நண்பன் - தாகம் தணிக்கும் தாய் மார்பு. நண்பன் - உன் மார்புக்கு வெளியே துடிக்கும் இன்னொரு இதயம் . தந்தை - மரணம்வரை உருகும் மனித மெழுகுவர்த்தி. தந்தை - நாலு சுவருக்குள் ஒரு நாட்டமை. தாய் - சமையலறை சாமி தாய் - சிலுவை சுமக்கும் பெண் ஏசு. கவிதை - பேனா காம்பில் பூத்த ரோஜா. கவிதை - பேனா பிரசவித்த பெண் குழந்தை கவிதை - சொற்களுக்குள் சொர்க்கம். புரட்சி - எளிதில் நிகழும் அசாத்தியம். புரட்சி - பிடிவாத பாறைகளை பிளக்கும் சின்ன உளி. போராளி - தவிக்கும் மக்களுக்கு தாய். போராளி - மாற்றத்தை நிகழ்த்துகிற மற்றுமொரு மனிதன். தமிழ் - மொழிகளின் மனச்சாட்சி தமிழ் - மொழிக்கு கிடைத்த மோட்சம். தமிழ் - உச்சரிக்கும் போது உற்பத்தியாகும் அமுதம். --- தமிழ்தாசன் ---

கழிப்பறை காதல்

Image
கழிப்பறை சுவரில் காதலி பெயர் எழுதி களிப்படையும் புத்திரர்களுக்கும் கற்பை வழிப்பறி செய்யும் வாலிப கயமைகளோடு காதல் வயப்படும் பூவையர்க்கும் காதல் என்ற பெயரில் காந்தி தேசத்தை கழிவு குப்பை மேடுகுளாக்கிய உங்களை கண்டிக்க துப்பில்லாமல் கவிதை எழுதுகிறேன். இருட்டு தலங்களும் ஒதுக்குபுறங்களிலும் காதல் பிரகாசிப்பதால் வெளிச்சத்தில் நாங்கள் வேதனைபடுகிறோம். கோவிலுக்குள் நீங்கள் வகுப்பெடுக்கும் காம பாடங்களை கவனிக்கக முடியாமல் முகம் சுளித்து வெகு தெய்வங்கள் வெளிநடப்பு செய்தன. சஞ்சீவி மலையை சாதரணமாக ஏந்திய அனுமாருக்கு அங்கமெல்லாம் வேர்த்திருந்தது. ஐந்தறிவு அனுமான்கள் கேள்வி எழுப்பியது எதை கண்டும் அஞ்சிநாயா? எங்கள் ஆஞ்சிநநேயா ? கர்ப்பகிரகத்தினுள் பாலாபிசேகம் செய்யும் பூசாரிகளின் பாலியல் திருவிளையாடலுக்கு முன் நீங்கள் பரவாயில்லை. அறங்காவல் துறை இந்த புணர்ச்சி கழிவுகளை புறம்தள்ள இயலாமல் புலம்புகிறது... பூங்கா புதர்கள் எல்லாம் உங்கள் பாலின்பத்தில் நிரம்பிகிடப்பதால் பாவம் பட்டாம்பூசிகள் இளைப்பாற இடமின்றி இம்சையடைகின்றன. உங்கள் காதல் சின்னகளாய் ஆண

ஜனநாயகம்

Image
-----ஜனநாயகம்----  கருப்பு நரிகள் நடத்திய  கலவரத்தை  கலைப்பதாக சொல்லி  காக்கை குருவிகளை கண்டபடி சுட்டு கொன்றது காவல்துறை. இறந்த அப்பாவிகளின் இனம் கிளறி இன்னும் நெருப்பிட்டு குளிர்காயிந்தன எதிர்கட்சிகள் கூடுகளில் கதறும் குஞ்சுகளின் அழுகை சத்தம் முடக்கி அஞ்சலி செலுத்தியது அரசு.... சமாதி குழிகளுக்கு சம்மந்தமற்ற சதை சிதைந்த எழும்புகள் புதைந்துகிடக்கிறது பூமியில்.... ஜனநாயகமா.... ? சொல்வதற்கொன்றுமில்லை..
Image
சிறகுகளைவிட  கால்களின் பிரயோகம்  அதிகமிருப்பதால்  கால்நடைகள் என்றே  கணக்கிடலாம்  இரும்பு கம்பிகளின் இடுக்கில் சொருகபட்ட கொம்புகளில் கால் வலிக்க நின்று இளைப்பாறும் இந்த சின்னஞ்சிறு கூண்டு கிளிகளை.....