இந்திய தமிழர்களுக்கு
---- இந்திய தமிழர்களுக்கு ----
திறமிக்க வல்லோர்கள்
ஒருமித்து வாழ்ந்த இனம்...
கிமு முதல் ஈமு கோழி வரை ஏய்க்கபடுகிறது..
விழித்தெழும் விசையுடைய
மறத்தமிழ் மரபுடைய எம் இனம்
மந்தை ஆடுகளாய் சந்தையில் மேய்க்கபடுகிறது...
மூஞ்சி வரை காஞ்சிவர பட்டுடுத்தினோம்
சாஞ்சுவரும் பண்பாடு நிலைநிறுத்தினோம்
இளதேகம் இன்று மேலாடையின்றி ஆடுகிறது...
முக்தியில் நவகிரகம் கண்டு அறிவால் மெச்சி
கத்தி அய்யனார் கையில் அரிவாள் வச்சு - இன்று
புத்திகெட்டு போலிச்சாமிகள் பின் ஓடுகிறது.
கையசையில் யாவரும் புரிதல் உண்டாக்கிட
மெய்-உயிர் எழுதி மொழி கொண்டாக்கிய
அழகுதமிழ் தவிர்த்து ஆங்கிலம் பேசுகிறது...
ஈராயிரமாண்டு புகழ் வீரம் அறிவு செழித்து
யாராயினும் தழுவி வாவென்று அழைத்து
வாழ்ந்தயினம் அடையாளம் கொள்ள கூசுகிறது.
கோழையென்பது அடுத்தவன் கால் பிடிப்பது
வேலையொன்று அவனுக்கு வாள் பிடிப்பது
அக்காளை இன்று பெண்சேலைக்கு அஞ்சுகிறது..
இதுவே நெறியென அகநானூறு கொடுத்தோம்
எது காதலென அறியாமல் - கண்டபடி
பொதுவிடங்களில் கட்டிஉருண்டு கொஞ்சுகிறது...
யாவுயிரும் பசியாற மாவு கோலமிட்டு
சாவு தவிர்த்த உழவு செழித்த நாடு
பீசா பர்கர் தின்று உயிர் வாழுகிறது.
கடையேழு வள்ளல் நடைபோட்ட தேசம்
அலைகீற்று ஊழல் கொண்டு உலகின்முன்
தலைகுனித்து தரமிழந்து நிற்கிறது.
பாக்குவெத்தலை இடுவதைப்போல்
தூக்கு மேடைகளை கண்ட வீரயின
போக்கு மதுக்கடைகளில் இருக்கிறது.
யாவும் ஊரே யாவரும் கேளீர்
கூவும் பெயரின் பின்னே சாதியை சேரீர்
தேச தலைவர்கள் சிலைய உடைக்க வாரீர்
சுயமரியாதையை தூக்கி போடு
வெளியில் சொன்னால் வெட்கக்கேடு...
நயவஞ்சகர்களை ஒழிப்பது உறுதியென கொள்கிறது.
நாட்கள் கடந்தால் நினைவிழந்து மறதியென சொல்கிறது.
காலம் தள்ளுவதை வாடிக்கையாக்குகிறது.
ஈழம் அழிவதை வேடிக்கை பார்க்கிறது.
காலும் கையுமிருந்து பிச்சையெடுக்கிறது.
நன்றி மறந்து நாய் போல் குலைக்கிறது.
பன்றிகளை தலைவாவென்று அழைக்கிறது
கன்றுகுட்டியை யல்லவா கற்பழிக்கிறது...
கொஞ்சம் விடுங்கள்
கண்ணீர் வற்ற அழுதுவிடுகிறேன்
நஞ்சை கொடுங்கள்
கவிதையொன்று எழுதிவிடுகிறேன்.
தமிழ் மக்களே !
சர்வம் மொத்தமும்
சந்தி சிரிக்கிறது....
கர்வமிழந்து சொல்லுகிறேன்
உமக்கு என்
இந்திய விடுதலை திருநாள் வாழ்த்துகள்.
---- தமிழ்தாசன்----
திறமிக்க வல்லோர்கள்
ஒருமித்து வாழ்ந்த இனம்...
கிமு முதல் ஈமு கோழி வரை ஏய்க்கபடுகிறது..
விழித்தெழும் விசையுடைய
மறத்தமிழ் மரபுடைய எம் இனம்
மந்தை ஆடுகளாய் சந்தையில் மேய்க்கபடுகிறது...
மூஞ்சி வரை காஞ்சிவர பட்டுடுத்தினோம்
சாஞ்சுவரும் பண்பாடு நிலைநிறுத்தினோம்
இளதேகம் இன்று மேலாடையின்றி ஆடுகிறது...
முக்தியில் நவகிரகம் கண்டு அறிவால் மெச்சி
கத்தி அய்யனார் கையில் அரிவாள் வச்சு - இன்று
புத்திகெட்டு போலிச்சாமிகள் பின் ஓடுகிறது.
கையசையில் யாவரும் புரிதல் உண்டாக்கிட
மெய்-உயிர் எழுதி மொழி கொண்டாக்கிய
அழகுதமிழ் தவிர்த்து ஆங்கிலம் பேசுகிறது...
ஈராயிரமாண்டு புகழ் வீரம் அறிவு செழித்து
யாராயினும் தழுவி வாவென்று அழைத்து
வாழ்ந்தயினம் அடையாளம் கொள்ள கூசுகிறது.
கோழையென்பது அடுத்தவன் கால் பிடிப்பது
வேலையொன்று அவனுக்கு வாள் பிடிப்பது
அக்காளை இன்று பெண்சேலைக்கு அஞ்சுகிறது..
இதுவே நெறியென அகநானூறு கொடுத்தோம்
எது காதலென அறியாமல் - கண்டபடி
பொதுவிடங்களில் கட்டிஉருண்டு கொஞ்சுகிறது...
யாவுயிரும் பசியாற மாவு கோலமிட்டு
சாவு தவிர்த்த உழவு செழித்த நாடு
பீசா பர்கர் தின்று உயிர் வாழுகிறது.
கடையேழு வள்ளல் நடைபோட்ட தேசம்
அலைகீற்று ஊழல் கொண்டு உலகின்முன்
தலைகுனித்து தரமிழந்து நிற்கிறது.
பாக்குவெத்தலை இடுவதைப்போல்
தூக்கு மேடைகளை கண்ட வீரயின
போக்கு மதுக்கடைகளில் இருக்கிறது.
யாவும் ஊரே யாவரும் கேளீர்
கூவும் பெயரின் பின்னே சாதியை சேரீர்
தேச தலைவர்கள் சிலைய உடைக்க வாரீர்
சுயமரியாதையை தூக்கி போடு
வெளியில் சொன்னால் வெட்கக்கேடு...
நயவஞ்சகர்களை ஒழிப்பது உறுதியென கொள்கிறது.
நாட்கள் கடந்தால் நினைவிழந்து மறதியென சொல்கிறது.
காலம் தள்ளுவதை வாடிக்கையாக்குகிறது.
ஈழம் அழிவதை வேடிக்கை பார்க்கிறது.
காலும் கையுமிருந்து பிச்சையெடுக்கிறது.
நன்றி மறந்து நாய் போல் குலைக்கிறது.
பன்றிகளை தலைவாவென்று அழைக்கிறது
கன்றுகுட்டியை யல்லவா கற்பழிக்கிறது...
கொஞ்சம் விடுங்கள்
கண்ணீர் வற்ற அழுதுவிடுகிறேன்
நஞ்சை கொடுங்கள்
கவிதையொன்று எழுதிவிடுகிறேன்.
தமிழ் மக்களே !
சர்வம் மொத்தமும்
சந்தி சிரிக்கிறது....
கர்வமிழந்து சொல்லுகிறேன்
உமக்கு என்
இந்திய விடுதலை திருநாள் வாழ்த்துகள்.
---- தமிழ்தாசன்----

Comments
Post a Comment