தோழர் செங்கொடி
----- தோழர் செங்கொடி -------
நாங்கள்
இயற்றி போராட்டத்தின்
இயலாமையை புரியவைத்தவள்
நாங்கள்
இயற்றி போராட்டத்தின்
இயலாமையை புரியவைத்தவள்
எங்கடி ?
அவளெங்கள் பிரபஞ்சத்தில்
எரியும் அணையா கங்கடி.
தமிழுயிர்
ஊற்றி விளக்கேற்றிய
செங்கொடி.
நிரபராதி தமிழர்க்கு
நீதி கேட்க வந்த
எம்பாரதி நெருப்பே !
அகராதி பக்கங்கள்
அச்சிட்டதுன்னை
தமிழ்ரத்த கொதிப்பே !
உறக்கமற்ற எமனோடு
மல்லுக்கு போயிருந்தால்
உறுதியாக ஒருநாளில்
விடிவும் பிறந்திருக்கும்
முடிவு தெரிஞ்சிருக்கும்.
இரக்கமற்ற விலங்கு
சொல்லுக்கு காத்திருந்தால
எங்க
வயித்திலடி விழுந்திருச்சு - ஒரு
தொப்புள் கொடி கருகிருச்சு.
காஞ்சிபுர தறிகலேல்லாம்
தறிகெட்டு நிற்பதென்ன ?
காமாட்சி வடிவிலோருத்தீ
எரியூட்ட பட்டதென்ன?
தூக்கு கயிறை அறுத்தெறிய
நினக்கு நல்ல நிழல்
தேக்கு மர
சாம்பல் வேண்டுமோ ?
தமிழ்த்தாயே !
மாய்க்கும் உயிரை
மறுமுறை பிரசவிக்க
எமக்கொரு
கருவறை தாராயோ ?
---- தமிழ்தாசன்----
28.08.2012
(தோழர் செங்கொடி நினைவு நாள் இன்று )
அவளெங்கள் பிரபஞ்சத்தில்
எரியும் அணையா கங்கடி.
தமிழுயிர்
ஊற்றி விளக்கேற்றிய
செங்கொடி.
நிரபராதி தமிழர்க்கு
நீதி கேட்க வந்த
எம்பாரதி நெருப்பே !
அகராதி பக்கங்கள்
அச்சிட்டதுன்னை
தமிழ்ரத்த கொதிப்பே !
உறக்கமற்ற எமனோடு
மல்லுக்கு போயிருந்தால்
உறுதியாக ஒருநாளில்
விடிவும் பிறந்திருக்கும்
முடிவு தெரிஞ்சிருக்கும்.
இரக்கமற்ற விலங்கு
சொல்லுக்கு காத்திருந்தால
எங்க
வயித்திலடி விழுந்திருச்சு - ஒரு
தொப்புள் கொடி கருகிருச்சு.
காஞ்சிபுர தறிகலேல்லாம்
தறிகெட்டு நிற்பதென்ன ?
காமாட்சி வடிவிலோருத்தீ
எரியூட்ட பட்டதென்ன?
தூக்கு கயிறை அறுத்தெறிய
நினக்கு நல்ல நிழல்
தேக்கு மர
சாம்பல் வேண்டுமோ ?
தமிழ்த்தாயே !
மாய்க்கும் உயிரை
மறுமுறை பிரசவிக்க
எமக்கொரு
கருவறை தாராயோ ?
---- தமிழ்தாசன்----
28.08.2012
(தோழர் செங்கொடி நினைவு நாள் இன்று )

Comments
Post a Comment