ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்


மார்வாடி அடகில் பண்டிகை கொண்டாடும்
ஏழை எளியோர்க்கும்
ஏர்வாடியில் தவழும் குழந்தைகளாய் திகழும்
மூளை சிறியோர்க்கும்

கறவை மாடுகளாய் அரபு நாடுகளில் உழைக்கும்
சுமைதாங்கிகளுக்கும்
உறவை இன்புற செழிக்க தன் இரவை பகலை
அர்பணித்தோர்க்கும்.

குண்டுவெடிப்புகளை கண்டுதுடித்து உயிர்வழிய
வருந்திட்டவர்களுக்கும்
துண்டுதுண்டாக சிதறிய தேகத்தில் மனிதநேய
மருந்திட்டவருக்கும்

எல்லா மதமும் என் மதமெனு கருதும் குல்லா
அணிந்தவருக்கும்
சொல்லா துயரம் அனுபவித்தும் உலகை வெல்ல
துணிந்தவருக்கும்

சிறுபான்மை பெரும்பான்மை என சிறுபுத்தியற்ற
மனப்பான்மை உடையவர்க்கும்
எது ஆண்மை என்றறியாது மக்களை கொல்லும்
தீவிரவான்மைகளுக்கும்

ஒருதாய் முந்தியில் யாம் பிறந்தோமென எண்ணி
சிந்தித்த மைந்தர்களுக்கும்
இந்திய உயிர்கள் சிதறியபோது பாகிஸ்தானில்
சிந்திய கண்ணீர்களுக்கும்


என் இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்


--- தமிழ்தாசன்----
 

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?