இந்திய அரசுக்கு


-----இந்திய அரசுக்கு----

தமிழர் ரத்த வெள்ளத்தில்
தயாரித்து
தரப்படும் மின்விநியோகம்
எதற்கு ?

கூடங்குளத்து
குடிசைகள் எரிந்தே
வெளிச்சமெனில்
அதுவும் இருட்டுதான்
எமக்கு...

தேசிய தேகத்தின்
கீழே இருப்பதால்
நான் என்ன
மிதியடியா ?

காந்தியம் ரத்தம்
ஏந்திய நாட்டில்
மீண்டும்
தடியடியா?

நீ உருவி எறிய
இது என்ன
பாஞ்சாலி புடவையா ?
தீ கருவி பேனா
பிடித்த இதுயெம்
பாரதி மண்ணையா..

பாராளமன்ற அருகில்
அணுமின் நிலையம் ஒன்றை
அனுமதிப்பாயோ?

பாமர மக்கள் குரலை
பாசிசமென்றும் வேசமென்றும்
அவமதிப்பாயோ?

ஈர நெஞ்சத்தில் கழிவு பரப்பி
சகதியாக்குவாயோ?
ஈழம் போல இங்கும் என்னை
அகதியாக்குவாயோ?

முடிந்தவரை
தன்மானத்தோடு விளங்குவோம்.
இடிந்தகரை
இலங்கையல்ல முழங்குவோம்.

இனி பேசியும் நீ
கேட்க்க மாட்டையோ?
தனி தேசியம் எனை
கேட்க்க வைப்பாயோ?

--- தமிழ்தாசன்----
 

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?