ஜனநாயகம்

-----ஜனநாயகம்---- 

கருப்பு நரிகள் நடத்திய 
கலவரத்தை 
கலைப்பதாக சொல்லி 
காக்கை குருவிகளை
கண்டபடி சுட்டு கொன்றது
காவல்துறை.

இறந்த அப்பாவிகளின்
இனம் கிளறி
இன்னும் நெருப்பிட்டு
குளிர்காயிந்தன
எதிர்கட்சிகள்

கூடுகளில் கதறும்
குஞ்சுகளின் அழுகை சத்தம்
முடக்கி
அஞ்சலி செலுத்தியது
அரசு....

சமாதி குழிகளுக்கு
சம்மந்தமற்ற
சதை சிதைந்த
எழும்புகள்
புதைந்துகிடக்கிறது
பூமியில்....

ஜனநாயகமா.... ?

சொல்வதற்கொன்றுமில்லை..





Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?