Posts

Showing posts from November, 2012

வெளிவராத இருட்டு

வசந்தகால கனவுகளில் மூழ்கியிருக்கும் கன்னிகளுக்கு கண்டயிடங்களில் கை நனைக்கும் கணவன் அமைவது எதார்த்த நிகழ்வுகளின் கோர்வையாகிறது. சீதையின் பரிசுத்தம் சீதனமாக கொணரும் சில கிராமத்து உத்தமிக்கு எண்ணிய வாழ்வு எள்ளளவும் அமைவதில்லை. கல்யானம் முடிந்த  ஒரீரு வருடத்தில் பிராணநாதன் கசங்கி உடல் மெலிந்து புழுவரித்து இறப்பது இப்புத்திரிகளுக்கு ஒன்றும் புதிதல்ல.... மரியாதை காத்துக்கொள்ள மணாளன் மரணத்திற்கு மர்ம காய்ச்சல் அறிக்கை சமர்பித்த வேளையிலே ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட்ட உத்தமி.... பிரசவம் முடிந்த மறுகணமே இறந்துவிட்டாள். பாவம் இன்னும் எத்தனை நாட்களுக்கு தாக்கு பிடிக்குமோ ? எய்ட்ஸ் நோயுடன் பிறந்த குழந்தை....... ----- தமிழ்தாசன் -----

நான் ஏன் கவிஞனானேன்

வர மறுத்தும் வாலிப கூட்டம் இருட்டுச் சந்துக்குள் இழுத்துச் செல்கிறது அரவாணி அக்காவை.... எதிர்த்து கேட்பதா? எதுகை மோனை செய்வதா? குடிநீர் கேட்டு குடிசை மக்கள் கும்பிட்டு மனு கொடுக்க.... குளிர்பான கடை திறப்புவிழாவுக்கு புறப்படுவதாக சொல்கிறார் ஆளும் கட்சி பிரமுகர். கேலி செய்யும் சித்திரம் வரையவா?? கேள்வி கேட்டு கழுத்தை அழுத்தவா? மரங்கொத்தி சாராய நிறுவனம் மறுபடி தொடங்க வட்டியில்லா கடன் வாங்க சொல்லுது மத்திய அரசு.. பசித்த பாமர உழவன் ருசித்த எலிக்கறி குறித்து எப்படி தெரியும் ஏகாதிபத்திய அரசுக்கு... இக்கணம் சேகுவேரா ஆன்மாவை அணிந்து கொள்வதா? அனிச்சையாக எழுச்சி பாடல் எழுதி தொலைப்பதா? கையில் கஞ்சா புகை கைபேசி ஆபாசபடம் கணினியில் காதல் பாழாய் போகும் பள்ளி வயது இளைஞன். சீர்திருத்த பாடல் எழுதுவதா? சீரழிவுக்கு எதிராக களமிறங்குவதா? மாசடைந்த காற்றின் மரண செய்தியை மை எழுதவா? மரம் ஆயிரம் நட்டு மாற்றம் நிகழ்த்தவா? நெஞ்சில் கவிதை நிரம்ப நிரம்ப வளையல் ஓசை பரப்பி காதலி உண்ணும் அழகை உற்று பார்ப்பதா? கடைசி பந்தி வரை கைபிடிச் சோறுக்காக காத்திருக்கும

தாயை தவிர்க்காதே

Image
என் உயிரின் கடைசி துளி... இரு வார்த்தை எழுத காலம் அனுமதிக்கிறது... கவிழ்ந்த தலை நிமிர்த்தி கர்வத்தோடு எழுதினேன். " தமிழ் வாழ்க " தொப்புள்கொடி தோழர் பின்னூட்டமிடுகிறார் ட்ரூ, சூப்பர், நைஸ், வாவ் எம் தலைமுறை தமிழ் வளர்க்குமென்ற தைரியத்தில் செத்துகிடக்கிறேன் நான்.... தமிழை தவிர நமக்கு வேறு தாயில்லை நம்மைவிட்டால் அவளுக்கு வேறு பிள்ளையில்லை. தமிழின் தலையெழுத்தை மாற்றும் முன் உன் கையெழுத்தை தமிழுக்கு மாற்று. இங்கிலாந்து தேசம் இனிய தமிழில் கையொப்பமிடுவதில்லை. அன்னை தமிழ் வளர்க்க உன்னை தவிர மண்ணில் எவருமில்லை. அதை நீ உணர்வாய் தோழா ஆங்கிலமென்ன தாய்ப் பாலா ? ---- தமிழ்தாசன் ---- 

என்ன எழுதி என்ன ?

‎---- என்ன எழுதி என்ன ? ---- ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயரினும் ஓம்பப் படும். மனம் வழுக்கும் வாழ்வை வகுத்தான் வள்ளுவன். பாலியல் வன்கொடுமை. போலிச் சாமி பின் தொடரல் கூலி பணியாளன் கூழை பறித்தல் ஊழல் பெருக்கம் உயிர் கொலை வளரும் இந்தியா... தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இச்சகத்தினை அழித்திடுவோம். சொன்னான் யுகத்தினை வென்ற பாரதி. மலம் தின்னும் மனிதர் எலிக்கறி உண்ணும் உழவர் எச்சிலை சுரண்டும் சிறுவர் பசியில் தெருவில் கிழவர். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காதத் தமிழென்று சங்கே முழங்கு தங்கத் தமிழ் எழுதினான் தாசன். அழியும் மொழியிலோன்று - எங்கள் ஆருயிர் தமிழென்று அறிக்கை விடுகிறது ஐநா... யாவும் ஊரே யாவரும் கேளிர் சொன்னவர் கணியன் பூங்குன்றனார் வாழும் ஊரில் அகதிகளாவீர் - மக்கள் கதறி அழுது ஏங்கின்றனர். கண்ணோடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது, உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் மின்னும் காதல் வண்ணம் தீட்டி எண்ணம் எல்லாம் எழுதினான் கம்பன். கருகலைப்பு அவசியப்படும் வரை கையிருப்புள்ள கடைசி ஆணுறை களையப்படும்

யாசககாரியின்

யாசககாரியின் மாராப்பு தொட்டிலில் கதறி அழும் குழந்தையின் இரைச்சல் காதில் விழாதபோது உன் சமிக்கை எழுப்பும் வாக்கியம் எளிய நடையில் எழுதப்பட்டு இருக்கிறது. கொடுத்த முதல் முத்தம் உன் அடுத்த மாதவிலக்கு அத்தனையும் அத்துபடி எனக்கு தேதி முன்பின் இருக்கும் வயது, வருடம் ஞாபகமில்லை தாயின் பிறந்தநாள். பனி குடில் குற்றால குமிழி தீர்த்த திவலை உன் முகப்பருவென எழுதிய கவிதை... அப்பாவின் நெஞ்சு மயிரிலிருந்து  குழி வயிற்றுக்கிறங்கும் வியர்வை விற்று வாங்கிய பேனா. நீ பேசாத நாட்களின் ரணம் உயிர் குடிக்க சவர கூரத்தகடு எடுத்து  சதை கிழிக்க சொன்னது இதயவலி..... மறந்து போனது.... நான் என்ற நபர் ஒரு தாயின் பிரசவ வலி. உடுப்புகடை விளம்பர பலகை இடுப்பு தொடை தெரிய நடிகை அணிந்த சேலை உற்றுப்பார்க்கும் ஊர் விழிகள். அதே நிலை அழுக்கு உடம்பு கிழிந்த சேலை அணிந்துகிடக்கிற அக்கா  அருவருக்கும் ஊர் விழிகள்.