தாயை தவிர்க்காதே


என் உயிரின் கடைசி துளி...

இரு வார்த்தை எழுத
காலம் அனுமதிக்கிறது...

கவிழ்ந்த தலை நிமிர்த்தி
கர்வத்தோடு எழுதினேன்.
" தமிழ் வாழ்க "

தொப்புள்கொடி
தோழர்
பின்னூட்டமிடுகிறார்
ட்ரூ, சூப்பர், நைஸ், வாவ்
எம் தலைமுறை

தமிழ் வளர்க்குமென்ற
தைரியத்தில்
செத்துகிடக்கிறேன் நான்....

தமிழை தவிர நமக்கு
வேறு தாயில்லை
நம்மைவிட்டால் அவளுக்கு
வேறு பிள்ளையில்லை.

தமிழின் தலையெழுத்தை
மாற்றும் முன்
உன் கையெழுத்தை
தமிழுக்கு மாற்று.

இங்கிலாந்து தேசம்
இனிய தமிழில்
கையொப்பமிடுவதில்லை.

அன்னை தமிழ் வளர்க்க
உன்னை தவிர
மண்ணில் எவருமில்லை.

அதை நீ உணர்வாய் தோழா
ஆங்கிலமென்ன தாய்ப் பாலா ?


---- தமிழ்தாசன் ---- 

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?