வெளிவராத இருட்டு

வசந்தகால கனவுகளில்
மூழ்கியிருக்கும்
கன்னிகளுக்கு
கண்டயிடங்களில்
கை நனைக்கும்
கணவன் அமைவது
எதார்த்த நிகழ்வுகளின்
கோர்வையாகிறது.

சீதையின் பரிசுத்தம்
சீதனமாக கொணரும்
சில கிராமத்து உத்தமிக்கு
எண்ணிய வாழ்வு
எள்ளளவும் அமைவதில்லை.

கல்யானம் முடிந்த 
ஒரீரு வருடத்தில்
பிராணநாதன்
கசங்கி
உடல் மெலிந்து
புழுவரித்து இறப்பது
இப்புத்திரிகளுக்கு ஒன்றும் புதிதல்ல....

மரியாதை காத்துக்கொள்ள
மணாளன் மரணத்திற்கு
மர்ம காய்ச்சல் அறிக்கை
சமர்பித்த வேளையிலே

ஊருக்கு வெளியே
ஒதுக்கி வைக்கப்பட்ட
உத்தமி....
பிரசவம் முடிந்த
மறுகணமே
இறந்துவிட்டாள்.

பாவம்
இன்னும் எத்தனை நாட்களுக்கு
தாக்கு பிடிக்குமோ ?
எய்ட்ஸ் நோயுடன்
பிறந்த குழந்தை.......

----- தமிழ்தாசன் -----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?