Posts

Showing posts from 2015

ஆறுகளைத் தேடி - சிலம்பாறு

Image
ஆறுகளைத் தேடி -   சிலம்பாறு பசுமையான வணக்கம் . நாம் அனுபவித்த , ரசித்த , பார்த்த இந்த பூவுலகை அடுத்த தலைமுறைக்கு அறிமுகபடுத்தும் பொறுப்போடும் , நிகழும் இயற்கை பேரழிப்புக்கு எதிராக மக்களை விழிப்படைய செய்து போராடவும் நாணல் நண்பர்கள் இயக்கம் கடமைபட்டிருக்கிறது . அதன் ஒரு பகுதியாக ஆறுகளைத் தேடி என்கிற நிகழ்வை 22.03.2015, ஞாயிறு உலக தண்ணீர் தினத்தன்று   ஒரு பயணமாக துவங்கி இருக்கிறது . மதுரையில் நீர்நிலைகளும் ஆறுகளும் சிதைக்கப்பட்டு வரும் சூழலில் இந்த பயணம் மிக முக்கியமானதாக கருதுகிறோம் . மதுரையில் வையை ( வைகை ) ஆறு மட்டுமே உள்ளது என்கிற சிந்தனை போக்கை மாற்றவும் , சிற்றாறுகள் , காட்டாறுகள் , கிளையாறுகள் போன்ற நீராதாரங்கள் மீது கவனம் கொள்ளவும் , சுற்றுச்சூழல் விழிப்புணர்வை பரப்பவும் இந்த பயணம் உதவுமென   பெரிதும் நம்புகிறோம் . ஆறு : ஆறு என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும் . ஆறுகள் பொதுவாக மலைப் பகுதிகளில் தொடங்குகின்றன . ஆற்றின் இருபுறமும் உள்ள நிலப்பகுதி கரை என அழைக