Posts

Showing posts from October, 2011

ரெயின்போ பண்பலையில் ஒரு சூரியன்

Image
....................ரெயின்போ பண்பலையில் ஒரு சூரியன்............ இந்த நாயகனை பற்றி எழுதும் முதல் கவிதை இதுவாகத்தான் இருக்கும்.... இவனை கருப்பொருளாக கொண்டு இனி ஒரு கலையுலகம் பிறக்கும். இந்த சாதனை ஒரு ஆரம்பம் மட்டும்தான் இன்று தெரிவது இவன் பிம்ப்பம் மட்டும்தான். லட்சம் பேருக்கு சாதிக்கும் ஆசை இருக்கும் உன்னை போன்ற சிலருக்குதான் சாதிப்பதே லட்சியமாயிருக்கும்.. நீ எட்டியிருக்கும் இந்த உயரம் சாதனையல்ல வெற்றியின் துளிர்போடு வெடித்த உன் வேதனையின் வெளிப்பாடு.. நுணுக்கங்கள் தெரிந்தவர்க்கே சாதனை உலகத்தின் நுனி விரலை தொடுவது சிரமம். நீ இந்த நூதன உலகத்தின் நுரை ஈரல் வரை நுழைந்து விட்டாயே! தரம் உயர்ந்த உன் வெற்றி என்னும் உற்பத்திப்பொருள் தோல்விகளின் தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்பட்டவை... உல்லாச காற்றை உள்வாங்கிக்கொண்டு உதிர்ந்து போகும் பூக்களுக்கு மத்தியில் வறுமையிலும் உன் வேர்கள் வடியாதாய் செய்தி வந்ததே இல்லை. நீ அழகானவன் இல்லை ஆனால் அழுவபவர் சிரிக்கவும் சிரித்தவர் அழுகவும் மாற்றிவிடும் மந்திரம் தெரிந்தவன் நீ.. தோற்றதால் அழகானவன் பெண்கள
குள்ள நரிகள் குடியிருப்பு பகுதிக்குள் வராததற்கு காரணம் நீ அவைகளையும் ஏமாற்றி விட கூடும் என்பதால்தான்.

பெண்கள்

கல்யாணம் ஆனா பிறகும் பெரும்பாலும் பெண்கள் பயப்படுவது கரப்பாபூச்சிகளுக்குதான் கணவனுக்கு அல்ல..

ஆண்

ராமனின் ஒரு குணம் மட்டும் அதிக ஆண்களிடம் அப்படியே ஒட்டிக்கொண்டுவிட்டது அது சந்தேக புத்தி....

டயலர் டுயுனை

உன் அலைபேசிக்கு கொடுக்கபட்டிருக்கும் டயலர் டுயுனை தயவு செய்து நீக்கிவிடு நீ பேச ஆரம்பித்து விட்டாயா இல்லையா என்பதில் பெரிய குழப்பமே ஏற்படுகிறது எனக்கு... இசைக்கும் - உன் இனிய பேச்சுக்கும் இனம் காண முடியவில்லை என்னால்..

என் கவிதைகள்....

உச்சி முகர ஒரு முத்தம் வைக்க கையில் எடுத்த கொஞ்சிட குட்டி மூக்கென குறை கூறிட அப்பனை போல் இருக்கிறது என்று அடித்து சொல்லிட ஆள் இல்லாத அனாதை குழந்தையைபோல் கவனிப்பாரற்று கவலைக்கிடமாக கிடக்கிறது என் கவிதைகள்....

உன் கனவு

கனவில் மட்டுமே நீ காதலியாய் வருவதால் மரணித்துவிடலாம் என்று மனசுக்குள் தோன்றுகிறது. இருப்பினும் ஒரு ஐயம் எழுகிறது... மரணத்திற்கு பிறகும் என்னை மகிழ்விக்கும் உன் கனவு வருமா?

தூக்கு தண்டனை

நம்மில் யாரேனும் ஒருவர் தாமதமாக வந்தாலோ தவறுகள் செய்தாலோ என்னை நீயோ உன்னை நானோ சிறிது தூரம் வரை தூக்கி சுமக்க வேண்டும் என்பது சட்டம். அன்பே நம் காதலில் இந்த துயரமான இன்பதானே தூக்கு தண்டனை
கடலில் மீசையுள்ள மீன்களை பிடிப்பது சுலபமாக இருக்கிறது.. திரையில் மீசையுள்ள ஆண்களை கண்டுபிடிபதுதான் கடினமாக இருக்கிறது...

மின்விளக்கு

மின்விளக்கின் வெளிச்சத்தில் நீ ஓவியத்தை ரசித்து கொண்டு இருகிறாய். உனக்கு தெரியாமல் மின்விளக்கு உன்னை ரசித்த் கொண்டு இருக்கிறது...

மெல்லினமே

என் மெல்லினமே.... நீ வாசிப்பாய் என்பதால் என் கவிதையில் வல்லின எழுத்துக்கள் வராமல் பார்த்து கொள்கிறேன்...

மென்பொருளே

மென்பொருள் பொறியியல் மேற்படிப்புகளில் மேதை என்கிற பட்டம் பெற்றுவிட்ட போதும் . உன் மேனியை போல ஒரு மென் பொருளை இதுவரை மேலை நாடுகளிலும் நான் கண்டதே இல்லை..

நிலவு

அன்பே என் அச்சத்தை போக்க தயவு செய்து இன்றுக்குள் ஒரு குடம் தண்ணீரையாவது குடித்துவிடு... விஞ்ஞானிகள் நிலவுக்குள் நீர் இல்லை என்பதை நிரூபித்துவிடார்கலாம்..

தேனீக்கள்

அன்பே உன் மேனியில் அமர்ந்து ரத்தம் குடித்து கொண்டிருந்த போது அறியாமல் உன் கை பட்டு இறந்து போன கொசுக்களை எல்லாம் தேவலோகத்தில் தேனீக்கள் என்று அறிவித்துவிட்டார்கலாமே!

காதல் வந்த பிறகு

Image
...............காதல் வந்த பிறகு............ விரிசல் நிலம் போல் வெடித்து பிளந்து கிடக்கும்.. என் அம்மாவின் பாதங்களுக்கு செருப்பு இல்லை என்று வருத்தபடாமல் உன் சிறகுகளுக்கு என்ன சிரமம் இருக்குமென்று சிந்தித்து கொண்டு இருக்குறேன்........

காத்திருபேன்

Image
என்னை கடந்து செல்ல்வதற்கென பிறந்திருக்கும் கல் நெஞ்சகாறியே.... ஒருவேளை உலகம் முடியும் வரை நான் உயிரோடு இருந்தால் அப்போதும் உனக்காக மட்டுமே காத்திருபேன்....

என் அம்மா

கவரிங் நகை அணிந்து என் அம்மா கடைத்தெருவுக்கு போகிறபோது என் அம்மா சொக்கத்தங்கம் என்கிற உண்மை சொல்லாமலே வெளிப்பட்டு விடுகிறது....

உன் வீட்டு சீப்பு

Image
உதடுகள் இல்ல காரணத்தால்.... முத்தமிட பற்களை வைத்தே பழகிகொண்டது உன் வீட்டு சீப்பு.....

என் கவிதை...

Image
பேனாவால் தோண்டி எடுக்கப்பட்ட புதையலானது புதுகவிதை. பூமியை புரட்டிபோடுகிற புஜபலமுடையது என் கவிதை... ---தன்னம்பிக்கையோடு---- தமிழ்தாசன்

மக்களுக்காக

Image
சரித்திரம் படைக்காமல் சவப்பெட்டிக்குள் - என் சடலம் சமாதிகொள்ளாது என்றொரு சத்தியம் செய்து கொண்டவன் நான்... காதல் கவிதைகள் பல எழுதி சலித்துவிட்ட கால கட்டத்தில்... என் சிந்தனை குளத்தில் சிறியதாய் ஒரு கூழாங்கல் விழுந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது. காதல் கவிதைகள் எழுத பல காதலர்கள் கவிஞர்கள் இருக்கும் கலியுகத்தில்..... தீராத சிக்கலுக்குள் சிதைந்து கிடக்கும் மக்களுக்காக யார் எழுதுவது.. மயக்க ஊசி இட்டதை போல் போர்வைக்குள் போலியாக உறங்கும் இவர்களை யார் எழுப்புவது... கொச்சை வார்த்தைகளை கோசமிட்டு பழகிய இளைஞர்களுக்கு - நல்ல கொள்கைகளை யார் கற்று கொடுப்பது... பட்டினி சாவை ஒழிப்பதாய் சொல்லி நம் உண்ணாவிரதத்தை ஊக்குவிக்கும் அரசியல் அயோக்கியர்களை யார் அடையாளம் காட்டுவது... ஈம சடங்குகளுக்கு வழியில்லாது ஈக்கள் மொய்க்கும் சடலங்கள் தெருவில் கிடக்க இறைவன் உருவ பொம்மைகள் பல்லக்கில் பவனி வருகிறதே என யார் பகுத்தறிவு பேசுவது... மரங்கள் செழித்த தேசத்தில் நீங்கள் இளைப்பாறதான் நிழல்களை கடன் வாங்கினோம் என கணக்கு காட்டும் அமைச்சர்களின் கண்ணத்தில் யார் அறைவது... ச