வாழ்விழந்த வாணவேடிக்கைகள்

---வாழ்விழந்த வாணவேடிக்கைகள்----

வருடம்தோறும் வருகிற
தீபாவளியை போல்
வந்தே விடுகிறது
ஒரு தீவிபத்து.

சிதறி வெடிக்கும்
ஒவ்வொரு மத்தாப்பின்
மறுபக்கத்திலும்
சிவகாசி சிறுவர்களின்
மரணம் இருப்பதை
மருந்துவிட்டோம்...

எரிந்து போன
ஏழை சிறுவர்களின்
தீபாவளி கனவு
தீர்ந்து போகிறது.

தீராத
தீயின் பசிக்கு
கொழுந்துகளையா
கொல்வது...
எலும்புகள் எரிந்த உடலை
எங்கே கொண்டு செல்வது...

அந்த குழந்தைகளின்
குடும்பம் சிந்திய கண்ணீரில்
நனைந்துவிடுவதால்தான்
சில மத்தாப்புகள்
சிணுங்கி சிணுங்கி
வெடிக்காமலே போகிறது...

அது
வெடிகளின் வேதனை வெளிப்பாடு.
அது
அந்த மைந்தர்களுக்கு
மத்தாப்புகளின்
மௌன அஞ்சலி.

சாதிப்பதர்க்குள் சடலமாய் போன
என் சகோதர சகோதரிகளே..........

உங்கள் உயிரின்
உன்னதத்தை
உலகுக்கு உணர்த்தணும்.

உங்கள் கல்லறைக்கு
இந்த கவிதை சமர்ப்பணம்.

-----தவிப்போடு-----
.......தமிழ்தாசன்......

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?