அனைத்து அம்மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

--------அனைத்து அம்மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்-------

என் தமிழ் வீடுகளில்
அடம்பர தீபாவளி
அரங்கேறி கொண்டு இருக்கிறது...

பத்து வட்டிக்கு வாங்கிய காசில்
பட்டாசும் வாங்கியாச்சு..

கசந்து போன வாழ்வை மறக்க
அப்பா
சீனி வெடியை பற்ற வைத்தார்...

கல்யாண வயதை கடந்த
அக்கா
புஷ்வானம் பற்ற வைத்தாள்.

வேலையில்லாத அண்ணன் பற்ற வைத்த
வெடிகள் எதுவும் வெடிக்கவேயில்லை....

பாட கல்வியை பயிலாமல்
பாலியல் கல்வியை படிக்கும் தம்பி
லட்சமி வெடியை பற்ற வைத்தான்...

எதிர்காலம் என்ன செய்ய காத்துயிருகிறதோ..
கரும் இருட்டில் கிடக்கும்
கடை குட்டிகள்
கம்பி மத்தாப்பை பற்ற வைத்தார்கள்.

அம்மா மட்டும் வழக்கம் போல்
அடுப்பை பற்ற வைத்தால்..

தீபாவளி
அம்மாக்களுக்கு
அடுப்படியிலே
முடிந்து விடுகிறது...

கல்லறை போகும் முன்
கொஞ்சம் கண்ணுறங்கும்மா.....
உறங்கும்போதும் என்னை பற்றி
உன் நெஞ்சம் நினைக்காமல் இருக்குமா?

இவள்...
அடிமையாய் வாழ பிறந்த பிள்ளை.
விடுமுறையோ விடுதலையோ
இவளுக்கு இல்லை...

கருநிற கண்ணனுக்கும்
என் அம்மாவுக்கும் ஒரு வித்தியாசம்..
கண்ணன் கையில் புல்லாங்குழல்
என் அம்மா கையில் ஊதாங்குழல்...
புல்லாங்குழல் ஊத ஊத இசை வரும்.
ஊதாங்குழல் ஊத ஊத இருமல் வரும்.

அடுப்பு புகையில்
அம்மாவின் இருமல் சத்தம்
வெடி சத்தத்தில்
வெளியில் கேட்பதே இல்லை....

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?