ஊனமுற்றோகளானோம்

------ ஊனமுற்றோகளானோம் ------

ஒற்றைக்காலில் நொண்டியடிக்கும் - எந்தமிழ் 
பற்றை கொண்டுரைக்கும் 
தீகக்கும் பேனா பிடித்து 
தீட்டுகிறேன் ஒரு கவிதை..

பார்வையற்ற தோழனே...

எமக்கோ
கடவுள் என்பவன் கற்பனை உருவம்
உமக்கோ
கற்பனையெல்லாம் கடவுளின் வடிவம்.

நாவிழந்த நண்பனே....

எம் உதட்டு கல்லறைக்குள்
பிணமானதட உண்மை - மொழியுனக்கோர்
இளமொட்டு காகித
பூக்களான பொம்மை.

செவிதிறனற்ற சிநேகிதனே....

கொச்சை வார்த்தைகள் குடியேறிய
கருங்குகையப்பா என் காது.
பச்சிளம் குழந்தையின் முக
புன்னகையப்பா உன் காது.

உண்ண கைகள் இரண்டில்லை. - காலால்
வண்ண ஓவியம் வரைந்தீர்கள்.
மண்ணில் உலவ காலில்லை - ஊன்றி
சின்ன கையால் நிமிர்ந்தீர்கள்.

முன்மொழிய வழியில்லை - செயலில்
மின்னல் போல் இருந்தீர்கள்.
கண் தெரியும் நிலையில்லை - ஊதும்
கண்ணன் குழல் இசைதீர்கள்.

கேட்கும் செவி திறனில்லை - என்றும்
தோற்கா மனமுடன் இருந்தீர்கள்.
தேகமதிலொரு உறுப்பில்லை - வியர்வை
தெறிக்க தெறிக்க உழைத்தீர்கள்.

விழுந்து விழுந்து
மறுபடி
எழுந்து எழுந்து நீங்கள்
மாற்றுதிறனாளியானீர்கள்.
விழுந்து விழுந்து
உள்பிடிமானம்
இழந்து இழந்து நாங்கள்
ஊனமுற்றோர்களானோம்.....

--- தமிழ்தாசன்---


Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?