‎----- கடைசித் தமிழன் இருக்கும்வரை ------

‎----- கடைசித் தமிழன் இருக்கும்வரை ------

திசையெட்டிலும் 
திடங்கொண்டு வாழும் 
மானம் நீங்கியின் 
மறுநொடி சாகும்
வீரத்தமிழினம் எங்கள்
வீரத்தமிழினம்.

மண்டியிட்டு பிழைக்காத
எமினத்தின் மகிமையை
மண்ணிட்டு புதைத்தாலும் மாயது.

பிரபஞ்சத்தில் ஒரு பிஞ்சு உயிர்
மிஞ்சியிருந்தால் போதுமட
எங்கள் போராட்டம் ஓயாது.

குண்டுமழைப் பொழியும்
குலத்தோடு கூட்டிணைந்து
சீதைத் தமிழினத்தை நீ
சிதைத்தெரிந்தாலும்...

கடைசித் தமிழனின்
கரியமிலவாயு தீரும்வரை

எம்வர்க்கம் கண்ட
வல்லடி கதையை உரக்க சொல்வான்.

வாடா தமிழா
வல்லவன் நீயென்றே
விரோதியின் தலையை அறுக்க சொல்வான்.

மற்றவர் மதிக்கும்படி
வரலாற்றில் இறக்க சொல்வான்.
மறுபடி மறுபடி மறத்
தமிழனாய் பிறக்க சொல்வான்.

--- தமிழ்தாசன் ---
 

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?