--------- பசி ---------
- Get link
- X
- Other Apps
--------- பசி ---------
காற்றை கட்டிபிடித்து கொண்டு
பிணவாடை நாசிக்குள்
பிரவேசிக்கிறது.
குழுக்கள் அமைத்து
புழுக்கள் சதைகளை அரிக்க
ஆங்காங்கே
எலும்புகள் எட்டிபார்கிறது.
மூக்கை மூடி
மூன்று நாட்கள்
கடந்துவிடுகிறது
மனிதநேயம்.
காட்சிபிழைப் போல
இன்று எதோ ஓர் மாற்றம்.
ஆம்
அந்த பிணத்தின் அருகே
அனாதையாக கிடந்த
திருவோடு காணவில்லை.
ஒன்று....
பிற பிச்சைக்காரனால்
திருடபட்டிருக்கும்.
இல்லையெனில்
பிள்ளையால் அலட்சியபடுத்தபட்ட
பிதாக்களுக்கு
அவசியம் ஏற்பட்டிருக்கும்.
---தமிழ்தாசன்---
காற்றை கட்டிபிடித்து கொண்டு
பிணவாடை நாசிக்குள்
பிரவேசிக்கிறது.
குழுக்கள் அமைத்து
புழுக்கள் சதைகளை அரிக்க
ஆங்காங்கே
எலும்புகள் எட்டிபார்கிறது.
மூக்கை மூடி
மூன்று நாட்கள்
கடந்துவிடுகிறது
மனிதநேயம்.
காட்சிபிழைப் போல
இன்று எதோ ஓர் மாற்றம்.
ஆம்
அந்த பிணத்தின் அருகே
அனாதையாக கிடந்த
திருவோடு காணவில்லை.
ஒன்று....
பிற பிச்சைக்காரனால்
திருடபட்டிருக்கும்.
இல்லையெனில்
பிள்ளையால் அலட்சியபடுத்தபட்ட
பிதாக்களுக்கு
அவசியம் ஏற்பட்டிருக்கும்.
---தமிழ்தாசன்---
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment