Posts

Showing posts from 2026

கண்ணகி கோயில்

கண்ணகி கோயில்  நெடுவேள் குன்றம்: மதுரையை எறித்த கண்ணகி, வைகையின் ஒரு கரையில் நடந்து சென்று சேர நாட்டில் உள்ள நெடுவேல் குன்றம் மலைமீது ஏறி வேங்கை மரத்தடியில் வருந்தி நின்ற காட்சியையும், பதினான்கு நாட்களுக்குப் பிறகு, கோவலன் விண்ணுலக தேவர்களுடன் புஷ்பக விமானத்தில் வந்து, கண்ணகிக்கு மீண்டும் மங்கல நாண் கட்டி, அழைத்துச் செல்கிறான் என்று இளங்கோவடிகள் பாடுகிறார்.   உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு  அவல என்னாள் அவலித்து இழிதலின் மிசைய என்னாள் மிசை வைத்து ஏறலின் கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு அவுணரை கடந்த சுடர் இலை நெடு வேல் நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி  பூத்த வேங்கை பொங்கர் கீழ் ஓர் தீ தொழில்_ஆட்டியேன் யான் என்று ஏங்கி எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி  வாடா மா மலர் மாரி பெய்து ஆங்கு அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த கோ_நகர் பிழைத்த கோவலன்-தன்னொடு வான ஊர்தி ஏறினள்-மாதோ - சிலம்பு மதுரை காண்டம் 23  185 - 199) இளங்கோவடிகள் குறிப்பிடும் நெடுவேல் குன்றம், கண்ணகி கோயில் அமைந்த...

அணைபூதம் (எ) புத்தர்

Image
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், எல்லப்பட்டியில் சுருளியாற்றின் குறுக்கே வெள்ளையர்கள் (John Pennycuick) காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை ஒன்று உள்ளது. அணையின் மேற்கு கரையில் மரத்தடியில் ஏழு கன்னிமார் கோயிலும், ஆற்றினுள்ளே தலையில்லா புத்தர் சிலையும் காணப்படுகிறது. அணைபூதம் (எ) புத்தர்: ஆற்றின் கரையோரமாக ஒரு மரத்தின் அடியில் புத்தர் சிலை இருந்ததாகவும், ஆங்கிலேயர் காலத்தில் சுருளியாற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் புத்தர் சிலை அடித்து செல்லப்பட்டதாகவும், அன்றிலிருந்து தலை சிதைந்த நிலையில் ஆற்றினுள் நடுவில் புத்தர் சிலை இருப்பதாகவும் புத்தர் சிலை குறித்து ஊர் மக்களிடம் கதைகள், நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னால் புத்தரின் தலை குச்சனூர் அருகே ஆற்றில் கிடப்பதை மக்கள் பார்த்ததாக சொல்லப்படுகிறது. எல்லப்பட்டியில் அரிசிக்கடை வைத்திருக்கும் 70 வயது மதிக்கத்தக்க ஊர் பெரியவர், தாம் பிறப்பதற்கு முன்பிருந்தே தலையற்ற புத்தர் சிலை ஆற்றினுள் இருப்பதாக தெரிவித்தார். இப்புத்தரை அணபூதம் (அணை பூதம்) என்று மக்கள் வழிபடுகின்றனர் என்று தெரிவித்தார். சமணர் Vs புத்தர் சிலை வேறுபாடு: சமண தீர்த்...