என் காதல் கவிதைகள் சில

----என் காதல் கவிதைகள் சில----

* சிகரெட் புகையும்
உன் சிறு பார்வையும்
என்
நுரையீரல் வரை
நுழைந்துவிட்டு வருகிறது...

*குளத்தில் நீ குளிப்பதை பார்த்து
குழம்பிப் போன இளசுகள் எல்லாம்
ஊருக்குள் ஒரு வதந்தியை பரப்பிவிட்டது...
"ஒரு தாமரை மட்டும்
தாவணி கட்டி இருக்கிறது" என்று..

*திருவிழாத் தேர்
உன் வீதியில் வலம் வருகிறது.
நீயோ
தேர் இழுப்பதை வேடிக்கை பார்க்கிறாய்.
தேரை இழுப்பவர்களெல்லாம்
உன்னையே வேடிக்கை பார்கிறர்கள்.

*தென்றல் தழுவினால் கூட
தேகம் கீறல் படும்
மெல்லிய ஸ்பரிசம் உன்னது..

*பேச்சு போட்டியைப் போல்
மௌனப் போட்டி
எங்காவது நடந்தால் சொல்லுங்கள்.
அதில் கலந்து கொள்ள
ஒரு காதலி இருக்கிறாள் எனக்கு.

*வாழைத்தோப்பு வரப்போரம்
நீ நடந்து வந்தால்
வாழைப் பூக்கூட
வயசுக்கு வந்துவிடும்..

*ஏய் கருவாச்சி
நீ பவுடர் பூசுகிறபோது
உன் முகம் வெளுத்துப் போகிறது.
பாவம் பவுடர் கருத்து போகிறது.

*உன் வீட்டில் கிளி
நீ வளர்க்கிறாயாமே? 
ஏற்க்கனவே
உன் அம்மா
வீட்டில் மயில் வளர்கிறாளே
அது போதாத? 

*அன்பே!
வெற்றியில் கிடைக்கும்
பரிசுகளை விட
தோல்வியில் கிடைக்கும்
உன் தோள்கலையே
அதிகம் விரும்புகிறேன்.

*அந்தி சாயும் பொழுது
நீ கால் நனைக்க
கடற்க்கரை வருகிறாய்.
உன்னைப் பார்த்ததும்
மாலை நிலவு வந்துவிட்ட
மன நிம்மதியில்
மெல்ல மறைந்தது சூரியன்.

*"இப்படி இருப்பதற்கு பதில்
ஒரு செருப்பாக பிறந்திருக்கலாம்" 
இடம் கிடைக்காமல்
நீ நின்று பயணித்த பொது
பேருந்து இருக்கைகள்
பேசிக்கொண்டன இப்படி...

*கழுத்தில் கிடக்கும் தங்க சங்கிலியை
கடிக்கும் பழக்கம் உள்ள கண்மணியே...
உலகெங்கும்
தங்கத்தின் விலை
உன்னால்தான் உயருகிறது என்பதை
உணர்வாயா?

*தேரில் அம்மன்
உன் வீதியில் வலம் வந்தால்
அது திருவிழா.
தேவதையே
நீ குடைப் பிடித்து நடந்து வந்தால்
அது தெருவிழா.

*உன் கண்களை பார்த்து
காதல் சொல்வதை விட
கொலை செய்வது
எளிதாக இருக்குமென்று
எண்ணுகிறேன்.
உன்னை காதலித்த பிறகு
ஒரு கட்டேரும்பை கூட
மிதித்து விட கூடாது என்பதில்
மிகவும் கவனமாக இருக்கிறேன்.

*புல் வெளியில் நடந்தால்
புற்களுக்கு வலிக்குமென்று
நீ புலம்பி தீர்த்துவிடுவாய்.
பூவே!
நீ புலம்புவது கூட
எனக்கு வலிக்கும் என்பதை
உனக்கு எப்படி
புரிய வைப்பது?

*நீ பேசினால்
மழலைகள் எல்லாம்
மயங்கிவிடுகிறதே!
உன் பெயரென்ன
மிட்டாய் - பேச்சியா?

எறும்பைவிட உனை சுமப்பது
எளிதாய் இருக்கிறதே!
உனை வயிற்றில் சுமந்தது
பட்டாம்பூச்சியா?

*தனியே என்னை தவிக்க விட்டு
உன் அம்மாவின் ஊர்ருக்கு
நீ போன நாட்கள்தான்
எனக்கு அம்மாவாசை.

* உன்னை பொழுதுக்கும் பார்த்து பார்த்து
சலித்து போன எனக்கே
மறுமுறை பார்க்கும்போது
மயக்கம் வருகிறதே!
புதிதாய் உன்னை
புடவையில் பார்க்கும்
இளைஞனின் இதயம்
என்ன பாடு படும்?

*சிப்பிக்குள் கருப்பு முத்து
அவள் விழிகள்.
தமிழ் குழந்தை தவழும் வீதி
அவள் உதடு.
பூமிக்கு புளித்துப் போன முத்தம்
அவள் பாத சுவடு.

*ஆயிரம் உறவுகள் சூழ
அதன் நடுவே நான் இருந்தாலும்
நீ இல்லாத
அரை நொடி பொழுதிலும்
அனாதையாகிவிடுவேன் அன்பே!

*உன்னை கடந்துப் போனவர்களை விட
காதலித்து போனவர்கள்தான் அதிகம்.

* என் காதல் என்பது
உனக்கு வெறும்
இன்பமடி.
உன் காதல்
எனக்கு மறுஜென்மம்மடி..

---தமிழ்தாசன்---- 

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்