----காதலில் முத்தம் இப்படிதான் இருக்குமோ?----

----காதலில் முத்தம் இப்படிதான் இருக்குமோ?----

* முத்தம் என்பது
நான்கு இதழ்களின்
நந்தவனம்.

*ஆக்சிஜன் இல்லாத ரத்தமும்
உன் எச்சில் படாத முத்தமும்
இரண்டுமே ஒன்றுதான் அன்பே!


* நான் கொடுக்கும் முத்தம்
உன் இதழ்களை ஈரப்டுத்தும்.
நீ கொடுக்கும் முத்தம்
என் இதயத்தையே ஈரப்டுத்தும்.

*காதலை
ஆழமாய் அனுபவித்த
அறிஞர்கள் சொல்லுகிறார்கள்
காதலில் காமும் கலந்து இருக்குமாம் .
நீ என்னவோ
ஒரு முத்ததிர்க்கே
முகம் சுளித்து கொள்கிறாய்....

*அடியே ஏமாற்றுக்காரி
அறுதல் சொன்னால்
அடங்கி விடுவேன் என்று மட்டும்
நினைத்து விடாதே..
உன் அண்ணனிடம்
நான் வாங்கிய
அடியை எல்லாம்
முத்தமாக திருப்பி கொடு
அது வரை திருப்தி அடைய மாட்டேன்.

*உதடுகள் இல்லா காரணத்தால்
முத்தமிட
பார்க்கலை வைத்தே
பழகி கொண்டது
உன் வீட்டு சீப்பு.

*ஒரு ஈசல் அமர்ந்தால் கூட
அந்த உணவை
முற்றிலும் புறக்கணிப்பவன் நான்.
இன்று
உன் எச்சில் முத்தம் வேண்டுமென்று
ஏங்கி நிற்கிறேன்.

*அழகே!
நீ கிடைத்ததால்
மச்சக்காரன் நான்.
அடிகடி
முத்தம் கேட்பதால்
பிச்சைக்காரன் நான்.

*தயங்கி தயங்கி
என் உதட்டில் தருவதை விட
தானாக நீ வந்து
நெற்றியில் தரும் முத்தத்திற்கு
கொஞ்சம் சக்தி அதிகம்.

*நீ தந்த அவஸ்தைகளில்
அதிகமானது
எது தெரியுமா?
ஒரு முத்தம் கேட்டு
ஒரு நாள் முழுவதும்
கெஞ்ச வைப்பது.

---தமிழ்தாசன்----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்