இப்படிக்கு

ஊர் ஊராக ஓடி
சேர்த்து வைத்திருக்கிறேன்
உதவும் கரங்களை...

என்ன பயன் ?
உன் இடத்தை நிரப்பும் தகுதி
எந்த சக்திக்கும் இல்லை என்கிறபோது..

எவ்வளவோ தடுத்தும்
கேட்க்கால்
உடைத்து வெளியேறுகிறது
கண்ணீர்.

என் அழுகை
ஆசிட் பாட்டிலோடு
அலையும் ஆண்களை
என்ன செய்துவிடும் ?

வலியுடன் தான்
எழுதுகிறேன்...

மார்பில் அடித்து அடித்து
கதறியழும்
உன் அப்பாவுக்கு
என்ன ஆறுதல்
தந்துவிடபோகிறது 
என் எழுத்து ?

நொறுங்கி போய்தான் இருக்கிறேன்....
அதை வெளிப்படுத்த
அவசியப்படுகிறது
ஒரு பதிவு.

உயிர் இழந்த
உனக்கும்
உன்னை இழந்த
உன் உறவுகளுக்கும்
இந்த பதிவு
என்ன செய்துவிடும் என்றுதான்
தெரியவில்லை.......




---- இப்படிக்கு----
ஒன்றுக்கும் உபயோகம் இல்லாதவன்
தமிழ்தாசன்...
12.02.2013

(தங்கை வினோதினியின் மரம் செய்தியறிந்து
அழுதது) 


Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?