ஒரு பூங்காவில் நீயும் நானும்

புற்களின் மீது நடக்க
தடை செய்ய பட்டிருக்கும்
ஒரு பூங்காவில் நீயும் நானும்...

நீ:  அப்படியென்றால் நானும் நடக்க கூடாதா?

நான்:  பட்டாம்பூச்சிக்கு தடை என்று பலகையில் எழுதப்படவில்லையே!

நீ:  போதும்... ரொம்ப பேசாத...மழுப்பாமல் சொல்... பிறகெதற்கு இங்கே இந்த வாசகம்?

நான்:  இது வாசகம் இல்லை கண்ணே...

நீ நடந்தால்...
உன் பூவிதழ் பாதம்
புல் கீறி
புண்ணாகிவிடும் என்று
அறிந்த யாரோ ஒருவர்
எதார்த்தமாய் எழுதிய
கவிதை வரிகள்.... இது.

----தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?