---நான் என்பதன் அடையாளம்----
- Get link
- X
- Other Apps
---நான் என்பதன் அடையாளம்----
திருக்குறள் படித்த நாளிலிருந்து
என் சொந்த சிந்தனயில்
ஒரு குறளாவது எழுத ஆசை.
பாரதியின் கவிதைகளைப் படித்து
என் பேனாவையும்
ஒரு தீபந்தமாக மாற்ற
தீர்மானம் கொண்டேன்.
கண்ணதாசனைப் போல்
தத்துவப் பாடல் எழுதாமல்
செத்துவிட கூடாது என
தவியாய் தவித்தேன்.
மீராவின் கவிதைகள் என்
மீதம் உள்ள நாட்களை
கொஞ்சும் கவிதைகள் எழுதவதை
கொள்கையாக்கி கொண்டது.
அண்ணன் அறிவுமதியைப் போல்
வைராக்கியமாய் ஒரு வரி எழுத
வருஞ்சு கட்டி நின்றதுண்டு.
மேவிய சமூக சிந்தனை கொண்ட
மேத்தாவைப் போல் எழுத
முயற்சித்து முடியாமல் போனதுண்டு.
வார்த்தைகளை வைரமாக்கி கொள்ளும்
வைரமுத்துவைப் போல
வரிகள் அமைக்க என்னை
வற்புறுத்தி கொண்டு இருக்கிறேன்.
மலைத் தேனை மையாக பயன்படுத்தும்
தபு சங்கரைப் போல்
பல காதல் கவிதைகள் படைக்க
படையெடுத்து தோற்று இருக்கிறேன்.
சுஜாதா, ஜெயகாந்தன் போல் எழுதாமல்
சுடுகாட்டுக்கு போககூடாது என்று
சுய அடையாளத்தை தொலைத்து இருக்கிறேன்.
சரி....
இவர்களைப் போல் நான் வாழ்ந்துவிட்டால்
என் வாழ்வை யார் வாழ்வது?
என்னைப்போல் வாழ
என்னை விட்டால் யாருமில்லை.
நெருப்புகள் எல்லாம்
சூரியனாக மாறினால்
காட்டு தீயை பற்ற வைக்கும்
சிறு கங்காக யார் இருப்பது?
மேடை ஏறுபவர்களுக்கு
கை தட்டி கொண்டே இருந்தால்
நான் என்றுதான்
மேதையாவது?
இன்னொருவரின் அவதாரத்தை
நான் எடுத்தால்
என் அப்பவனின் விந்துக்கு
யார் அடையாளம் கொடுப்பது?
தலைமுறைகள் பல கடந்த
தமிழ் அறிஞர்களைப் போல்
நான் எழுதினால்
தமிழ்தாசனைப் போல் யார் எழுதுவது?
--தமிழ்தாசன்---
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment