மூட்டைப்பூச்சியாகி விட்டது

கற்பனைகளை விற்பனை செய்து
கடினமாய் ஒரு கவிதை
கடிதமாய் எழுதிவந்தேன்.

தங்க தமிழே வந்து
தாலாட்டு பாடும் - அந்த
தாவணி மயிலிடம்
தலைகணத்தோடு நான் எழுதிய
கவிதையை காண்பிக்க...

கடினமாய் ஒரு கவிதை
கடிதமாய் எழுதி வந்தேன்.

அவள்
வாயிலிருந்து வழுக்கி விழும்
வார்த்தைகள் கூட - நான்
வலிய எழுதிய
வரிகளில் இல்லை.

வழக்கம் போல்
முழக்கமிடும்
முத்தமிழையும்
முதுகில்
யானைப் போல் சுமந்த வந்த
என் கவிதைகள்..

முனங்கி முனங்கி
ஒரு
மூட்டைப்பூச்சியாகி விட்டது
அவள்முன்......

----தமிழ்தாசன்----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?