என் காதல் கவிதைகள் சில
- Get link
- X
- Other Apps
----என் காதல் கவிதைகள் சில-----
தேரில் அம்மன்
உன் வீதியில் வலம் வந்தால்
அது திருவிழா..
தேவதை நீ குடை பிடித்து
நடந்து வந்தால்
அது தெருவிழா...
கழுத்தில் கிடக்கும் தங்க சங்கிலியை
கடிக்கும் பழக்கமுள்ள கண்மணியே!
உலகெங்கும்
தங்கம் விலை
உன்னால்தான் உயருகிறது என்பதை
உணர்வாயா?
உனக்கும்
நிலவுக்கும்
ஒரு வித்தியாசம் கண்டேன்.
பெரிதாய் ஒன்றும் இல்லை
பெண்ணே..
பெயர் மட்டும் தான்.
உன்னை முத்தமிடுகையில்
என் முள் மீசை மீது
மலர்ந்துகிடக்கும்
உன் முகம் தானே -- ரோஜா..
எனக்கு பூஜையறை
எதுவென்று தெரியுமா கண்ணே...
உன் வீட்டு ஜன்னல்தான்.
---தமிழ்தாசன்---
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment