உன்னை கண்ட பின்தான் கல்லறை எனக்கு
- Get link
- X
- Other Apps
----உன்னை கண்ட பின்தான் கல்லறை எனக்கு----
உனக்கென வெகுநாள்
என் கால் விரல்கள்
வேர்பிடிக்க
காதலோடு காத்திருந்த
காட்டு வழி பாதையிலே..
புயலொன்று கடந்து சென்றதடி.
அடியோடு ஆங்காங்கே
ஆழமரமும் அசைந்தாடி
விழுந்ததடி.
தனிமையில்
தவிக்கவிடும் - என்
தாவனி இளங்கோடியே!
தள்ளாடி நான் மட்டும்
தனி மரமாய் நின்றுவிட்டேன்.
எலியும் ஒலி எழுப்பினால்
எதிரொலிக்கும் மலைப் பிரதேசத்தில்
மௌனம் காக்கும் - என்
மன சுந்தரியே!
சூறாவளியே வருமாயினும்
நினை காணாமல் - என்
சுருட்டை முடிக் கூட
மண்ணில்
சுருண்டு விழாதடி.....
----தமிழ்தாசன்----
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment