நண்பன்
- Get link
- X
- Other Apps
அவன் பாடாய் படுத்துகிறபோது
ஏன் பழகினோம் என்று
யோசிக்க தோன்றுகிறதா?
அவனை விட்டு பிரிந்தபிறகு
ஏன் விலகினோம் என்று
நேசிக்க தூண்டுகிறதா?
அவன் வேறு யாருமில்லை
உங்கள் நண்பன்.
அதிகபட்சம் உயிர்விட
குறைந்தபட்சம் உதைபட
உனக்கென ஒரு ஜீவன்
உலகில் இருக்குமாயின்
அவன் பெயர்
உன் நண்பன்.
எந்த காரணமுமின்றி
ஏன், எதற்க்கு,
என்ன உறவென்றே தெரியாமல்
உனக்கு ஒருத்தன் ஓயாமல்
உதவி செய்கிறானா?
அவன் பெயர்
உன் நண்பன்.
இவனுடைய இந்த நீளமான கைகள் மட்டும்தான்
என் கண்ணீரை கண்டதும்
குட்டையாகிவிடுகிறது..
கைகுட்டையாகிவிடுகிறது...
----தமிழ்தாசன்----
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment