----குழந்தை தொழிலாளி----

----குழந்தை தொழிலாளி----

கல்வி கிடைக்கல
கல்லு உடைக்கிறோம்.

பள்ளிக்கூடம் பக்கத்துல
குப்பைப் பொருக்குறோம்.

கனவு பழிக்கல
உணவு விடுதியில தட்டு கழுவுறோம்.

எங்க வீட்டுல அடுப்பு எரியல
செங்கச்சூளையில வெந்து சாகுறோம்.

திருடத் தெரியல
பிச்சையெடுக்கிறோம்.

சுனாமிக்கு பிறகும்
சுண்டல் விற்கிறோம்.

எங்க அப்பன் நடக்க காலில்ல.
ஏழாவத பிறந்த பிள்ளைக்கு பாலில்ல.
குலுங்கி குலுங்கி அழுகாத நாளில்ல.
குலசாமி ஒண்ணுக்கும் காதில்ல.

எழும்பும் தோலும் தழும்பும் தெரியும்
அழுக்கு உடம்பை - சீருடையாக
அணிந்து திரியும்
எங்க வறுமையை யாரும் விரட்டல
தீப்பட்டி செஞ்சும் நாங்க இருட்டுல.

மதிய உணவுத்திட்டம் வந்ததும்
மறக்காம பள்ளிச்சாலைக்கு போனோம்.
இரவு சாப்பாட்டுக்கு வழியில்லாம
மறுபடியும் வேலைக்கு போனோம்.

பட்டாசு பட்டறைக்கு
மிட்டாதாரரே!

கந்தகம் கலந்திருக்கும்
பிஞ்சுக் கைகளுக்கு
கொஞ்சம் அவகாசம்
கொடுங்க சாமி
கைக்கழுவி காஞ்சி குடிச்சுக்குறோம்.

சமயமாகிடுச்சுன்னு
சம்பளத்துல கை வச்சுராதீங்க.

சிறுநீர் கோப்பைக்குள் நிலவை எறியாதீங்க.
சின்னஞ்சிறு கைகளில் சிலுவை அறையாதீங்க.

---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?