மனிதகுலம் இன்று பல்வேறு இனங்களாகவும் பல ஆயிரம் தேசிய இனங்களாகவும், பல பத்தாயிரங்களுக்கும் மேற்பட்ட சமூகங்களாகவும் வேறுபாட்டுக்கு காணப்படுகின்றன. இதில் மிக தொன்மையாக விளங்குபவர்கள் பழங்குடி மக்கள். இவர்களின் சமூகங்களும் பண்பாடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. பழங்குடிகள் பெரும்பாலும் அரசு அமைப்பற்ற தனித்த கட்டுக்கோப்பான சமூகம், தனித்த மொழி , பண்பாடு, வாழிடம், வாழ்க்கை முறை, சமயம் போன்றவற்றை கொண்ட ஒரு குடியாக இருப்பதை காண முடியும். மனித குலத்தின் தொல் சமூக பண்பாட்டில் பல படி நிலை வளர்ச்சிகளை அறிவதற்கு இன்று சான்றாக விளங்குபவர்கள் பழங்குடிகளே. மனிதகுலம் அடைய விரும்பும் மிக உயர்ந்த சமூக விழுமியங்களும் மேலைச் சமூகத்தார் வளர்த்துக் கொண்டதாக எண்ணும் விழுமியங்களும் இந்தியாவில் பழங்குடிகளிடம் பெரிதும் காணப்படுகின்றன. சாதி படிநிலையற்ற சமூகம், ஆண்-பெண் பாலின உறவில் சமத்துவம், ஆணாதிக்கம் குறைந்த சமூக வாழ்வு, காதலித்தோ, விரும்பியோ திருமணம் செய்து கொள்ளுதல், தனிமனித சுதந்திரம், தன்னியல்பு போக்கும் மிகுதியாக கொண்டிருத்தல் போன்ற பல உகந்த கூறுகள் பழங்குடிகளின் பண்பாட்டில் வளர்ந்துள்ளன. இந்த...
Comments
Post a Comment