‎----தாயின் கண்ணீர்----


‎----தாயின் கண்ணீர்----

விரும்பிய இதயத்தின்
விபரம் சொல்லாமல்
திருமணத்தின் முன் இரவு
வீடுதாண்டிய விடுகின்றனர் பிள்ளைகள்.

இரவு விழித்து
மனஅழுத்தம் பொருட்படுத்தாது
ஆசை ஆசையாய்
அம்மா
மருதாணி அரைத்த
அம்மியில்....இன்று
அரளி.......

மரணித்த பெற்றோரின்
மர்ம அறிக்கையை
மருத்துவர் சமர்பித்து...

அரைத்த அரளியில்
உப்பு
அதிகம் கலந்திருப்பதாக
அழுத்தி சொன்னார்.

மார்பை கடித்து
பாலை குடித்த
மகன்(ள்)களுக்கு தெரியுமா?

உப்பின் கலப்பு
அம்மா
உயிர் துடித்து
சிந்திய கண்ணீரென்று...

---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?