---- அமுதமடி -----

---- அமுதமடி -----

சில சில  வாய்மையை
உன் சிவந்த வாய் அறிந்திருக்க
வாய்ப்பில்லை.

உன் இதழ் தொட்டு போன
இலவம்பஞ்சு
பஞ்சு மிட்டாயானதடி

நீ உமிழ்ந்த
வேப்பகொட்டைதான்
ஊர் கடைகளில் 
தேன் மிட்டாயானதடி.

நீ கடித்த ஆப்பிள் பழம்
கிடைக்குமெனில்
ஆண்கள் கூட்டம்
ஆதாம் ஆகுமடி.

உன் பற்கள் வெட்டிய
நக துண்டுகளை புதைத்தால்
பாதாம் சாகுபடி.

நீ தொடாத திரவியம்
மிச்சமிருக்கு.
நீ தொட்ட இரும்பு  கூட
அச்சுமுறுக்கு.

உன் உதட்டுச் சாய தூரிகையை
என் ஆறாம் விரலாய்
ஆக்கி கொள்ள ஆசையடி.

பசும்பால் குடித்ததும் உன் 
மூக்கின் கீழே
வெள்ளை மீசையடி.

நீ கொடுத்தால்
விசமாயினும் குடிக்க
சம்மதமடி.

எதுவாயினும் உன்
எச்சில் பட்டால்
அதுவெல்லாம்
அமுதமடி....

ரசித்து நீ உண்ணும்
மாமிசம் கூட
சைவமடி

ரகசியமாய்  முத்தமிடு 
கல்லும்
தெய்வமடி...


---தமிழ்தாசன்---

Comments

Post a Comment

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?