இந்த இதமான மண்ணை , ஆகாயத்தினை எப்படி வாங்கோ விற்கவோ முடியும் ? இது உண்மையில் எங்களிற்கு வியப்பாக உள்ளது. இந்த இதமான காற்றும் , மின்னித்தெறிக்கின்ற நீரும் எங்களிற்கு மட்டும் சொந்தமில்லை. எங்களிற்கு மட்டும் சொந்தமில்லாத ஒன்றை எவ்வாறு நாங்கள் விற்கமுடியும். எமது நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எமது மக்களால் புனிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மண் புனிதமானது. எமது முன்னோர்களின் ஒப்புயர்வற்ற தியாகத்தாலும் , உழைப்பாலும் எமக்கு வழங்கப்பட்டது. இங்குள்ள ஆறுகளில் ஓடுகின்ற நீர் வெறும் நீரல்ல எமது முன்னோர்களின் குருதி. நாங்கள் இந்த நிலங்களை உங்களிற்கு (அமெரிக்க வெள்ளையர்களுக்கு) விற்றால் இந்த மண்ணின் புனித தன்மையினை நீங்கள் உங்கள் குழந்தைகளிற்கு கற்பிக்க வேண்டும். இங்கு ஓடுகின்ற ஆறுகளிலுள்ள நீர் எமது முன்னோர்களின் ஞாபகங்களை சுமந்த வண்ணமே செல்கின்றன. இந்த ஓடும் நீரின் ஓசை எமது பாட்டனாரின் குரல். இந்த ஆறுகள் எமது சகோதரர்கள் , இவைகள் எமது தாகத்தினை தீர்கின்றன. இந்த ஆறுகளிலே எமது வள்ளங்கள் சுமக்கப்படுகின்றன. எமது குழந்தைகளிற்கு நீரினை வழங்குவதும் இவைகளே. இப்படிப்பட நிலத்தினை நாங்கள் உங்களிற்கு தந்த...
திருப்பரங்குன்றம் மலை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம் மலை. சுமார் 170 ஏக்கர் பரப்பளவும் 3 கி.மீ சுற்றளவும், 1050 அடி உயரமும் கொண்ட அனற்பாறைகளிலான (Igneous Rock) குன்றாகும். அட்சரேகை, தீர்க்கரேகை 9.877188, 78.069965 என்கிற குறியீட்டு அச்சுதூராங்களில் மதுரை நகரில் இருந்து சுமார் கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம் மலை. திருப்பரங்குன்றம் மலையின் வடக்குப்புறத்தில் தென்கால் கண்மாய், வடகிழக்கில் திருக்கூடல் மலை, கிழக்கில் தியாகர்யார் பள்ளி வளாகம், மேற்கில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம், தென்மேற்கில் பானாங்குளம், தெற்கில் செவ்வந்திக்குளம், ஆரியங்குளம் கண்மாய், பறையன்மலை ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன. பரம் என்றால் உயர்ந்தது. குன்றம் என்றால் மலை. உயர்ந்தமலை என்னும் பொருளில் திருப்பரங்குன்றம் என்று பெயர் பெற்று இருக்கலாம். புராணங்கள் இம்மலைக்கான வெவ்வேறு காரணங்களை முன் வைக்கின்றனர். முருகப் பெருமானின் படை வீடுகளுள் முதற்படை வீடாக விளங்குவது திருப்பரங்குன்றம...
நாணல் நண்பர்கள் குழு ஒருங்கிணைக்கும் 3வது "நம்ம வரலாறு" நிகழ்வு கடந்த 15.06.2014 ஞாயிறு, மாலை 4.30 மணிக்கு மதுரை பாண்டி முனீஸ்வரன் கோவிலில் நடந்தது. இம்முறை நம்ம வரலாறு நிகழ்வில் "நாட்டார் தெய்வங்கள்" குறித்து எடுத்துரைக்கபட்டது. நம்ம வரல ாறு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு. சா. கான்சா சாதிக் மற்றும் சே. ஸ்ரீதர் நெடுஞ்செழியன் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள். நாட்டார் தெய்வமான பாண்டிக் முனீஸ்வரன் கோவில் இடத்தை நாட்டார் தெய்வங்கள் குறித்து பேச தேர்வு செய்ததில் இருந்தே புரிந்துக் கொள்ளலாம். நாற்பது வருடங்களாக நாட்டார் வழக்குகள், நாட்டுபுற இசை, தமிழிசை ஆராய்ச்சிக்கென தன் வாழ்வை அர்பணித்த தமிழிசை அறிஞர் திரு. மம்மது அவர்களை நிகழ்வின் சிறப்பு பேச்சாளாராக அழைத்து கூடுதல் சிறப்பு. தாது மணல் கொள்ளை, அணு உலைக்கு எதிராக போராடி வரும் தோழர். முகிலன், வானகத்தில் இருந்து வெற்றிமாறன், மே 17 இயக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன், இயற்கை ஆர்வலர் திரு. சுந்தர கிருஷ்ணன், சுற்றுலா வழிகாட்டி திரு. சிவ குருநாதன், சமூக ஆர்வலர்கள் திரு. வ...
Comments
Post a Comment