செவியில் அறைந்த சிலுவை போல
அலைபேசியோடு
உயிர் பிழைத்து
சாலையை நான் கடக்கும்
அதே சமயம்
ஒருவருக்கொருவர்
கைகோர்த்து
ஊன்றுகோல் உதவியோடு
கருப்பு கண்ணாடி அணிந்த
வெள்ளை மனிதர்கள்
சாலையை
நிதானமாகவே கடந்து விடுகிறார்கள்.

---தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?